Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரகங்களின் ராசி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சூரியன்: மாற்றம் இல்லை
செவ்வாய்: மாற்றம் இல்லை
புதன்: ஐப்பசி 18ம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார்
குரு: மாற்றம் இல்லை
சுக்கிரன்: ஐப்பசி 2ம் தேதி துலாம் ராசிக்கும் 26ம் தேதி விருச்சிகம் ராசிக்கும் மாறுகிறார்
சனி: ஐப்பசி 16ம் தேதி விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.
ராகு-கேது: மாற்றம் இல்லை

Aippasi Month Rasi palan

மேஷம்:

நட்பு மனம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

கல்வியில் மேன்மை உண்டாகும் தாய் மாமனின் உதவி கிடைக்கும் இனம் தெரியாத மனோபலம் அதிகரிக்கும். மனநிலை தெளிவாக இருக்கும் ஐப்பசி 16ம் தேதி முதல் கண்ட சனி முடிவடைந்து அஷ்டம சனி துவங்குகிறது நெருங்கிய உறவினருக்கு உடல் ஆரோக்கிய குறைவு உண்டாகும்.

பிறருக்கு உதவும் குணம் உண்டாகும் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகளின் தொல்லை அதிகரிக்கும். ஐப்பசி 18ம் தேதிக்கு பிறகு படிப்பில் மந்த நிலை உருவாகும்.

Aippasi Month Rasi palan

குடும்பத்தில் உறவு நிலை சிறப்பில்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பு குறைவு. வாழ்க்கை துணையுடன் வீண் விவாதம் வேண்டாம். தொழிலில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

கருப்பண சுவாமியை வணங்கி சிரமங்களை குறைத்துக் கொள்ளலாம்.

ரிஷபம்:

செயல் திட்டங்களை சீராக நிறைவேற்றும் ரிஷப ராசி அன்பர்களே!..

மனம் தெளிந்த நீரோடை போல் இருக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் குதூகலம் நிலவும் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வயிற்றில் பிரச்சினை உண்டாகும். விபத்துக்களுக்கு வாய்ப்பிருப்பதால் வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை.

உத்தியோக நிலையும் பண இருப்பும் திருப்தியை தராது. நிலம் வீடு வகைகளில் விவகாரம் உருவாகும். ஐப்பசி 16ம் தேதி முதல் கண்ட சனி துவங்குகிறது. குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஐப்பசி 18ம் தேதி முதல் தொழில் வியாபார நிலை சிறப்படையும்.

ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாழ்க்கையில் விருத்தியை அடையலாம்.

மிதுனம்:

புத்திசாலித்தனமாக செயல்படும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

பண வரவு திருப்திகரமாக இருக்கும், மனதில் தெம்பு அதிகரிக்கும் ஷேர் மார்கெட்டில் கவனம் தேவை. கமிஷன் புரோக்கரேஜ் தொழில் லாபம் தராது. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்களுடன் பிரச்சினை உருவாகும் குழந்தைகளுக்கு படிப்பில் மேன்மை உருவாகும்.

தாய் தந்தையர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணையின் செயல்பாடுகள் மனதிற்க்கு தெம்பைத் தரும். இதுவரை சாதகமற்ற நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான் மிகவும் ஏற்றம் தரக்கூடிய ஸ்தானத்திற்கு வரவிருக்கிறார் எனவே தொழில் உத்தியோகம் வியாபாரத்தில் இருந்த தடைகள் மாறி ஏற்றம் உண்டாகும்.

சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டு வாழ்க்கையில் விருத்தியை அடையலாம்.

கடகம்:

ஆக்கமும் ஊக்கமும் கொண்டு செயல்படும் கடக ராசி அன்பர்களே!

மன நிலை சீராக இருக்கும். தைரியமான வீரமான செயல்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். படிப்பில் மந்த நிலை மாறும். கணவன் மனைவி உறவு சீராக இருக்கும்.

விலை உயர்ந்த ஆடம்பரமான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மீகப் பயணங்கள் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. பூர்வீக வீடு கிடைக்கும் யோகம் உருவாகும்.

சனியின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. தோட்டம் விவசாயம் போன்றவற்றில் பிரச்சினை தோன்றலாம். குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

அனுமனை வழிபட்டு வாழ்க்கையில் விருத்தியை அடையலாம்.

சிம்மம்:

உழைப்பினால் உயரும் சிம்ம ராசி அன்பர்களே!...

சனி பெயர்ச்சி உத்தியோகத்தில் சிரம நிலை உண்டாக்கும். கடுமையான பேச்சினை குறைப்பது குடும்ப உறவு சீராக இருக்க உதவும். கமிஷன் வியாபாரம் ஐப்பசி 18 வரை சிறப்பாக இருக்கும்.

மின்சார இயந்திரங்களை கையாளுவதில் கவனம் தேவை. இரவில் நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஆடம்பர பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும் அதிகமான செலவுகளை தவிர்ப்பது சிறப்பு.

சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை வேண்டாம். புதிய வீடு கட்டும் திட்டத்தை தள்ளிப் போடவும்.

ஆதி பராசக்தியை வழிபட்டு வாழ்க்கையை சீராக்கிக் கொள்ளுங்கள்.

கன்னி:

கற்ற வித்தையை காசாக்கும் கலையை அறிந்த கன்னி ராசி அன்பர்களே!

அபரிமிதமான பணவரவு இருக்கும், மனதில் ஏதோ ஒரு குழப்பம் இருப்பினும் எண்ணியகாரியங்கள் எண்ணியவாறு நிறைவேறும். விலை உயர்ந்த ஆபரண சேர்க்கை உண்டாகும். உல்லாச பயணம் செல்லும் திட்டம் நடைமுறைக்கு வரும்.

ஷேர் மார்க்கெட்டில் புதிய முதலீடு வேண்டாம். எதையும் சிந்தித்து பேசவும். கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை கையாளுவதில் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை.

பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களுடன் சச்சரவு வேண்டாம். எந்த விஷயத்திலும் வாழ்க்கை துணையின் ஆலோசனையை கேட்டுக் கொள்ளவும். ஏழரை நாட்டு சனியின் பிடியிலிருந்து விடுபடுவது மன நிம்மதியை தரும்.

ஸ்ரீரெங்கநாதரை வழிபட்டு வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ளலாம்.

துலாம்:

நேர்மையே தாரக மந்திரமாக கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் உதவி கிடைக்கும். உத்தியோக மேன்மைக்காக கடுமையாக உழைக்க நேரிடும். சனி பெயற்சியாகி குடும்ப ஸ்தானத்திற்கு செல்வதால் குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும்.

தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பண வரவு சீராக இருக்காது பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மன வேதனையை தரும். கட்டுக்கடங்காத அதிகமான செலவுகள் உண்டாகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் தாமதமாகும்.

காலபைரவர் வழிபாடு வாழ்க்கையை சீராக்க உதவும்.

விருச்சிகம்:

பல ரகசியங்களை கொண்ட தன்னகத்தே விருச்சிக ராசி அன்பர்களே!

தெய்வத்தின் அருள் பூரணமாக நிலைத்திருக்கும் காலம். பணவரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த புரோக்கரேஜ் கமிஷன் வருவதில் தடைகள் இருக்கும்.

வாழ்க்கை துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். சனி ஜன்மத்தில் வருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை இருப்பினும் குரு பார்வை அனுகூலமாக இருக்கிறது. உத்தியோகத்தில் கவனம் தேவை.

நிதானமான பேச்சு பிரச்சினைகளை தவிர்க்கும். குழந்தைகளின் படிப்பில் கவனம் தேவை. எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

பத்மநாத சுவாமியை வழிபட்டு வாழ்க்கையில் விருத்தி பெறலாம்.

தனுசு:

மற்றவர்களுக்கு அறிவுரையை வாரி வழங்கும் தனுசு ராசி அன்பர்களே!...

ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கிறது உத்தியோகத்தில் சிரமத்தை உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர் பாராத வகையில் செலவுகள் தோன்றி சிரமங்களை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலில் தொய்வு ஏற்படும்.

பூர்வீக வீடு பராமரிப்பு பணி மேற்கொள்ள நேரிடும் அதனால் டென்சன் உண்டாகும். வாழ்க்கை துணை அனைத்திலும் அனுசரணையாக இருப்பார். கமிஷன் தொழில் சிறப்பாக இருக்கும்.

தொழிலில் ரகசியங்கள் காக்க வேண்டும். முதுகில் வலி தோன்றும். அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்பாக இருக்கும்.

விநாயகரை வழிபட்டு வாழ்க்கையில் விருத்தி பெறலாம்.

மகரம்:

பிறருக்காக உழைக்கும் மகர ராசி அன்பர்களே!...

சனியின் சஞ்சாரம் சிறப்பாக அமையவிருக்கிறது. சனி லாப ஸ்தானத்திற்க்கு வருவது மிகவும் நன்மையை தரும் மேலும் குருவும் சாதகமாக உள்ளதால் பண நலம் மன நலம் சீராக இருக்கும். உழைப்பினால் மேன்மை அடைவீர்கள்.

கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் தோன்றலாம். சுப செய்திகள் வந்து சேரும். புதிய தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவீர்கள். அரசாங்க விவகாரங்கள் சிரமமின்றி நிறைவேறும். நண்பர்களால் மன உளைச்சல் உண்டாகும்.

மின் சாதனங்கள் கூர்மையான ஆயுதங்களை கையாளுவதில் கவனம் தேவை. தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

ருத்திரனை வழிபட்டு சிரமங்களை குறைத்துக் கொள்ளலாம்.

கும்பம்:

அமைதியுடன் காரியங்களை செயல்படுத்தும் கும்ப ராசி அன்பர்களே!...

சனி உத்தியோக ஸ்தானத்திற்கு வருவது உத்தியோகத்தில் மலர்ச்சி உண்டாகும். புதிய நிலம் வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். படிப்பில் மந்த நிலை உருவாகும். கடன்கள் வாங்க நேர்ந்தாலும் எதிர்பாராத பண வரவு மன நிம்மதியை தரும்.

ஆடம்பரமான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் நிலை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான சுப செய்திகளை எதிர்பார்க்கலாம். அரசாங்க விவகாரங்களில் கவனம் தேவை.

பிறரை கடுமையாக விமர்சிப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் சச்சரவை தவிர்க்கவும். பிறரிடம் வாகனத்தை இரவல் வாங்க வேண்டாம்.

ஹயக்கிரீவர் வழிபாடு வாழ்க்கை பிரகாசிக்க உதவும்.

மீனம்:

அனைவரையும் கவரும் மீன ராசி அன்பர்களே!...

புத்திரர்களின் செயல்பாடு மன மகிழ்ச்சியை தரும். பண வரவு மிகவும் சிறப்பாக இருக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். வாழ்க்கை துணை ஆதரவாக இருப்பார். மாத இறுதியில் படிப்பில் மேன்மை உண்டாகும். கோபத்தை தவிர்க்கவும்.

விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை. உத்தியோகம் தொழிலில் சற்று மந்த நிலை உருவாகும். பிறரின் செயல்பாடுகள் கோபத்தை உண்டாக்கும். தான் என்ற அகந்தை தோன்றும்.

அஷ்டம சனி விலகுவது மன கஷ்டங்களை குறைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். எல்லா விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து முடிவெடுக்கவும்.

அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு சிரமங்களை குறைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+