அட்சய திருதியை 2023: தங்கத்தை இந்த நேரத்தில் வாங்குங்கள்..மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்!
சென்னை: அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியின் அம்சமான தங்கமும், வெள்ளியும் வாங்கலாம். குரு ஓரை, சுக்கிர ஓரை நேரங்களில் தங்கநகைகளை வாங்கலாம். அட்சயதிருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். தங்கம் மட்டுமல்ல நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கினாலும் செல்வம் பெருகும். தங்கம், வெள்ளி எந்த நேரத்தில் வாங்கலாம் என பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை காலத்தில் 3வது திதியாக திருதியை திதி வருகிறது. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை' என்று அழைக்கிறோம். இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை வரும் 22ஆம் தேதியும் 23ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள்.அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். இந்நாளில் அஷ்ட லட்சுமிகளின் ஆசிகளை பெற வீட்டில் அவரவர் வசதிக்கேற்ப குபேரபூஜை செய்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட் களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள்.
கல் உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை.
அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள் வாங்கலாம். மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி நகையை இரு கிரகங்களின் அம்சமாக கொள்ளலாம். அதாவது மஞ்சள் நிறமான தங்கம் குரு கிரகத்தை காட்டுகிறது. தங்கத்தில் இருந்து செய்யப்படும் நகைகள் மற்றும் வெள்ளி உலோகம் சுக்கிரனை குறிக்கிறது. எனவே அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்க விரும்புபவர்கள் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம்.
குருவுக்கு பொன்னவன் என்ற பெயரும் உண்டு. சுக்கிரன் அருள் இருந்தால் ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும்.
வரும் 22ஆம் தேதி அட்சய திருதியை சனிக்கிழமை குரு ஓரை காலை 7 மணி முதல் 8 வரை தங்கம், வெள்ளி வாங்கலாம். பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை வாங்கலாம். சுக்கிர ஓரை காலமான காலை 10 மணி முதல் 11 மணி மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் தங்கம், வெள்ளி வாங்கலாம். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பகல் 11 மணி முதல் 12 மணி வரையிலும் தங்கம் வாங்கலாம்.
தங்கம் விற்கிற விலைக்கு எல்லோராலும் தங்கம் வாங்க முடியாதுதான். அதே நேரத்தில் அன்றைய தினம் பச்சரிசி, கல் உப்பு, மஞ்சள், போன்ற வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.எ ப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிருதியை நாளில் வாங்கி வளம் பெறலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications