ஏப்ரல் மாத ராசி பலன் 2021: ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த ஏப்ரல் மாதம்
ஏப்ரல் மாதத்தில் கிரக மாற்றங்கள் அதிகம் உள்ளன. நவ கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தினால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பதால் ஏப்ரல் மாத முற்பகுதியில் அதிர்ஷ்டங்களைத் தரப்போகிறது. . ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, கும்ப ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏப்ரல் மாதம் மேஷ ராசிக்கு மன மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் நிறைந்த மாதமாக அமையப்போகிறது.
கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி மேஷ ராசிக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பத்தில் குருவின் சஞ்சாரம்
ரிஷப ராசிக்கு ஏப்ரல் மாதம் சனி 9ஆம் இடத்திலும் குரு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். முன்னேற்றமான மாதமாக அமைந்துள்ளது. உங்கள் ராசிநாதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். வலிமையான சுக்கிரன் வசதிகளை ஏற்படுத்துவர். 10ம் தேதிக்கும் மிக முக்கியமான முடிகளை எடுக்கலாம்.

பயணங்களால் நன்மை
தனாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சுக்கிரனும் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் 12ஆம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் திடீர் மாற்றம் ஏற்படும். 10ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் 12ஆம் வீட்டிற்கு வருவதால் சுப செலவுகள் ஏற்படும். பயணங்களால் நன்மை ஏற்படும். புதன் மாத பிற்பகுதியில் மிதுன ராசியில் இருந்து விலகி விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உடல் உபாதைகள் ஏற்படும். மாத பிற்பகுதியில் யோக கிரகங்கள் எல்லாம் விரைய ஸ்தானத்தில் பயணிப்பதால் திடீர் விரைய செலவுகள் வரும்.

பேச்சில் கவனம்
சனியும் குருவும் பாக்ய ஸ்தானத்தில் இணைந்திருந்தனர். குரு சனியை விட்டு விலகி தனியாக சஞ்சரிப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ராசியில் ராகு ஏழில் கேது பயணிப்பதால் தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். உடன் வேலை செய்பவர்களுடன் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் வார்த்தைகளில் கவனம் தேவை.

பெற்றோர்கள் ஆலோசனை தேவை
முக்கிய முடிவுகள் எதுவாக இருந்தாலும் 10ஆம் தேதிக்குள் எடுக்கவும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. கல்வி தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு பெற்றோர்களின் ஆலோசனை தேவை. செவ்வாய் உங்கள் ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிகொள்ள வேண்டாம்,மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை எழுதி பார்த்து படிக்கவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications