ஏப்ரல் மாத ராசி பலன் 2022: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் வரலாம்
சூரியன் மீனம் மற்றும் மேஷ ராசிகளில் பயணிக்கும் ஏப்ரல் மாதத்தில் தனுசு, மகரம்,கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: சூரியன் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் உச்சமடையும் மாதம். மீன ராசியில் முதல் 15 நாட்கள் பயணிக்கும் சூரியன் மேஷ ராசியில் சித்திரை மாதம் உச்சமடைவார். இந்த பயணம் சில ராசிக்காரர்களுக்கு யோகத்தைக் கொடுக்கும். சில கிரகங்கள் இந்த மாதம் இடப்பெயர்ச்சி அடைகின்றன. புதிய கூட்டணி உருவாகிறது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி கூட்டணி பார்வை ஆகியவற்றைப் பொருத்து தனுசு,மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் திருக்கணித பஞ்சாங்கப்படி மீன ராசியில் சூரியன், புதன், ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, செவ்வாய், கும்ப ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்கள் பயணிக்கின்றன.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் ராகு மேஷ ராசிக்கும் கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். 06ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி குரு,சுக்கிரன் உடன் இணைகிறார். 8ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.13ஆம் தேதி குரு பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு பரவாயில்லை. பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம். தொழிலில் புதிய வாய்ப்புகள் கை கொடுக்கும். புத்திசாலித்தனம் பலிச்சிடும். செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு அற்புதமான மாதம். வெளிநாடு வாய்ப்புகள் கை கூடும். போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வீர்கள். உயர்கல்விக்கான வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. பொருளாதார வளம் அதிகரிக்கும். பணத்தை சேமிக்கலாம். காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். நோய்கள் நீங்கும். மன அழுத்தம் முடிவுக்கு வரும். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகள் நிறைந்த மாதம், முன்னேற்றங்கள் ஏற்படும். அரசு வேலையில் வெற்றி கிடைக்கும். தொழில் ஸ்தானத்தின் மீது சூரியன், புதனின் பார்வை கிடைப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். குடும்பத்தில் மன நிம்மதி ஏற்படும். மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் பெயர்ச்சியடைவது சிறப்பு. பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நலமடையும். மன அழுத்தம் நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. சனிக்கிழமை கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.

கும்பம்
சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, வெற்றிகள் நிறைந்த மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தைத் தரும். மாணவர்களுக்கு குருவின் ஆசி கிடைக்கும் மகத்தான மாதம். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி இடையேயான உறவு நலமடையும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். காதல் வாழ்க்கையில் உறவுகள் பலமடையும். களத்திர ஸ்தானத்தின் மீது செவ்வாய் சுக்கிரன் பார்வை விழுவதால் திருமண வாழ்க்கையில் உற்சாகம் பிறக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நலமடையும். சனி பகவானை வணங்குங்கள் சனி ஸ்தோத்திரத்தை வணங்குங்கள்.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்குள் சூரியன்,புதன் இணைந்திருப்பதால் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். சனிபகவானின் பார்வையால் சில தடைகள் வரலாம். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களின் கல்வியில் சில முன்னேற்றங்கள் ஏற்படும். கடின உழைப்புத் தேவைப்படும். கணவன் மனைவி இடையேயான உறவுகள் வலுவடையும். செலவில் சிக்கனம் தேவை. பண விவகாரங்களில் கவனம் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். உடல் சோர்வடையும் மருத்துவ ஆலோசனை அவசியம். மகாவிஷ்ணுவை விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்கலாம்.












Click it and Unblock the Notifications