ஏப்ரல் மாத ராசி பலன் 2022: இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு யோகங்கள் நிறைந்த மாதம்
சூரியன் மீனம், மேஷ ராசிகளில் பயணிக்கும் ஏப்ரல் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: சூரியன் ஏப்ரல் மாதத்தில் உச்சமடையும் மாதம். மீன ராசியில் முதல் 15 நாட்கள் பயணிக்கும் சூரியன் மேஷ ராசியில் சித்திரை மாதம் உச்சமடைவார். இந்த பயணம் சில ராசிக்காரர்களுக்கு யோகத்தைக் கொடுக்கும். சில கிரகங்கள் இந்த மாதம் இடப்பெயர்ச்சி அடைகின்றன. புதிய கூட்டணி உருவாகிறது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி கூட்டணி பார்வை ஆகியவற்றைப் பொருத்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் திருக்கணித பஞ்சாங்கப்படி மீன ராசியில் சூரியன், புதன், ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, செவ்வாய், கும்ப ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்கள் பயணிக்கின்றன.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் ராகு மேஷ ராசிக்கும் கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். 06ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி குரு,சுக்கிரன் உடன் இணைகிறார். 8ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.13ஆம் தேதி குரு பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இது சவால்களை சாதனையாக மாற்றும் மாதம். சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் உள்ளதால் வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்திற்கு வந்து குரு உடன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்வது சிறப்பு. பொறுப்புகள் கூடும். மாத பிற்பகுதியில் சூரியன் உச்சம் பெற்று உங்கள் ராசியில் அமர்வது சிறப்பு. வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். கோபமான பேச்சுக்களை கட்டுப்படுத்தி மெதுவாக பேசவும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பான மாதம். போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வீர்கள். காதலிப்பவர்கள் உற்சாகமாக இருப்பீர்கள். கணவன் மனைவி இடையேயான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசி முடிவு செய்யலாம். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். சின்னச் சின்ன ஊடல்கள் வரலாம் அது குடும்பத்தில் சுவையை அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சிவ ஆலயங்களுக்கு சென்று வணங்குங்கள் குடும்ப ஒற்றுமைக்கு பாலபிஷேகம் செய்வது சிறப்பு

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான மாதம். காரணம் குருவின் பயணம் லாப ஸ்தானத்திற்கு வருவதால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது சாதகமான மாதம். உயர்கல்வியில் விரும்பிய பாடத்தை தேர்வு செய்வீர்கள். போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது சாதகமான நேரம். தைரியமாக எதிர்கொள்வீர்கள். மாத பிற்பகுதியில் புதிய தொழில் தொடங்கலாம். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும் பேச்சில் கவனம் தேவை. திருமணமானவர்களுக்கு சில பிரச்சினைகள் வரலாம். உங்கள் வீட்டு பிரச்சினையில் அடுத்தவரை தலையிட விட வேண்டாம். காதல் விஷயங்கள் ஊடலும் கூடலும் கலந்த கலவையாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் லேசான பாதிப்புகள் இருக்கும் போதே கவனிக்கவும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். செவ்வாய்க்கிழமை விநாயகர் வழிபாடு நன்மையை ஏற்படுத்தும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலபைரவரை வணங்க கவலைகள் நீங்கும்.

மிதுனம்
நவகிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் வெற்றிகள் தேடி வரும் மாதம். வேலை தொழில் சிறப்பாக இருக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள் வெற்றிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முதலீடு செய்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் படிப்பீர்கள். குடும்பத்தில் சில சண்டை சச்சரவுகள் வந்தாலும் எளிதில் எதிர்கொள்வீர்கள். தேவையற்ற வீண் வாக்குவாதம் வேண்டாம் தவிர்த்து விடுவது நல்லது. பிரிந்தவர்கள் ஒன்று சேரும் காலம் கூடி வருகிறது. பண வரவு அதிகரிக்கும். பணம் விஷயங்களில் கவனம் தேவை. நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்குவது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்களே வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் என்று பாடப்போகிறீர்கள். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நெருக்கடிகள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும் சிலருக்கு புரமோசனும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பயம் பதற்றம் நீங்கும். ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்பீர்கள். மாணவர்களுக்கு சாதகமான மாதம். கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உயர்கல்வியில் சாதிப்பீர்கள். போட்டித்தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். காதல் வாழ்க்கையில் சில மோதல்கள் ஏற்படலாம் கவனம் தேவை. நிதி நிலைமை நன்றாக இருக்கும். பொருளாதார சிக்கல்கள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். பத்தாம் வீட்டில் சூரியன் பதவியில் உயர்வை தரப்போகிறார். புதனும் சூரியனும் பத்தாம் வீட்டில் இணைந்திருப்பது அதிர்ஷ்டம். விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரப்படுத்துவது அவசியம். நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது ஆரோக்கியம் அதிகரிக்கும். திங்கட்கிழமை சிவ ஆலயம் சென்று பாலபிஷேகம் செய்வது சிறப்பு.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications