Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏப்ரல் மாத ராசி பலன் 2022: காதல் வாழ்க்கையில் இந்த ராசிக்காரர்களுக்கு கலகலப்பு அதிகரிக்கும்

சூரியன் மீனம் மற்றும் மேஷ ராசிகளில் பயணிக்கும் ஏப்ரல் மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியன் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் உச்சமடையும் மாதம். மீன ராசியில் முதல் 15 நாட்கள் பயணிக்கும் சூரியன் மேஷ ராசியில் சித்திரை மாதம் உச்சமடைவார். இந்த பயணம் சில ராசிக்காரர்களுக்கு யோகத்தைக் கொடுக்கும். சில கிரகங்கள் இந்த மாதம் இடப்பெயர்ச்சி அடைகின்றன. புதிய கூட்டணி உருவாகிறது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி கூட்டணி பார்வை ஆகியவற்றைப் பொருத்து சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் திருக்கணித பஞ்சாங்கப்படி மீன ராசியில் சூரியன், புதன், ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, செவ்வாய், கும்ப ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்கள் பயணிக்கின்றன.

கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் ராகு மேஷ ராசிக்கும் கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். 06ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி குரு,சுக்கிரன் உடன் இணைகிறார். 8ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.13ஆம் தேதி குரு பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் நிறைந்த மாதம். உங்கள் ராசிக்கு கிரகங்கள் சாதகமாக உள்ளன. குரு, சுக்கிரன் பார்வை உற்சாகத்தை தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர்கல்வியில் யோகம் தேடி வரும். உழைப்புக்கு ஏற்ற உயர்வு தேடி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். பண வரவில் இருந்த தடைகள் நீங்கும். வேலை தொழிலில் முன்னேற்ற ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். களத்திர ஸ்தானத்தில் இணைந்துள்ள குரு, சுக்கிரனால் காதல் வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும் உறவு வலுப்படும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் செல்லும் போது உணவுகளில் கவனம் தேவை. தினசரியும் ஆதித்ய ஹிருதயம் பாடவும். சூரியபகவானை செந்தாமரை மலர்கள் சாற்றி வணங்குவது நன்மையைத் தரும்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. ராசி நாதன் புதன் மாதத்தின் முற்பகுதியில் சூரியனுடன் இணைந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும், தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகம் லாபத்தைத் தரும். பங்குச்சந்தை , ஊக வணிகம் லாபத்தைத் தரும். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவது அவசியம். கடுமையான உழைப்பு தேவை. சுக்கிரன் ஆறாவது வீட்டில் குரு உடன் இணைவதால் குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம் பேச்சில் கூடுதல் கவனம் தேவை. சண்டை சச்சரவுகள் வரும் வாய்ப்பு உள்ளதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்ப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வையும் விழுகிறது. பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் கவனம் தேவை. வார்த்தைகளில் காரத்தை குறைத்து இனிமையை கலக்குங்கள் சிக்கல் இன்றி இந்த மாதத்தைக் கடக்கலாம். மாத பிற்பகுதியில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் பொருளாதாரம் வளமடையும் நிதிச்சிக்கல்கள் நீங்கும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, காரிய வெற்றிகள் நிறைந்த மாதம். நினைத்த காரியம் நிறைவேறும். குருவும் சுக்கிரனும் இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். குரு பகவானின் நேரடி பார்வை இந்த மாதம் முற்பகுதி வரை உள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு தேடி வரும். வெளிநாட்டு யோகம் கை கூடி வரும். மாணவர்களின் கல்வி கற்கும் திறன் அதிகரிக்கும். தேர்வுகளில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். காதல் திருமண வாழ்க்கையில் அன்பும் நேசமும் அதிகரிக்கும். மண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உடல் மன நலத்தில் உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். குருவின் பார்வை உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபத்தைத் தரும். நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அப்பாவின் ஆரோக்கியம் மேம்படும். குல தெய்வ கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு மாத பிற்பகுதியில் குருவின் பார்வை கிடைக்கப் போகிறது. மாத முற்பகுதியில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன் இணைந்துள்ளன. மாத பிற்பகுதியில் சூரியன் இடப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று பயணம் செய்யும் போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வும் கிடைக்கும். தொழில் வணிகத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி கற்றும் இடத்தில் ஆசிரியரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது நல்ல கால கட்டம் வெற்றிகள் கை கூடி வரும். இளைஞர்களுக்கு காதல் வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். திருமண யோகம் கை கூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். உடல் நலப்பிரச்சினைகள் நீங்கும். நீண்ட கால நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். கடன் கொடுத்து நீண்ட நாட்களாக திரும்பி வராமல் இருந்த பணம் இப்போது கைக்கு வந்து சேரும். செவ்வாய்கிழமை அனுமன் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+