ஏப்ரல் மாத ராசி பலன் 2023: ஓஹோன்னு வாழ்க்கை..ஏப்ரல் மாதத்தில் ஏற்றமும் மாற்றமும் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் மாதத்தில் வசந்த கால காற்று வீசினாலும் கோடை வெயிலும் சுட்டெரிக்கும். அவ்வப்போது மழையும் பெய்யும். அதுபோலத்தான் பலரது வாழ்க்கையில் சின்னச் சின்ன சிரமங்கள் இருந்தாலும் கிரகங்களின் திடீர் மாற்றம் புதிய திருப்பங்களையும் தரும். பண வருமானத்தை தரும் பொருளாதார ஏற்றத்தை அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கும். சில ராசிக்காரர்களுக்கு சோதனைகள் அதிகம் நடைபெறும். சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் கூடவே குரு, புதன், மேஷத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய்,துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. மேஷ ராசியில் உள்ள சுக்கிரனும் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். குரு பகவான் ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி நான்கு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களே...ஏப்ரல் மாதத்தில் உங்களுக்கு நவகிரகங்களின் பயணத்தை பார்த்தால் சூரியன், குரு பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் சூரியன் ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெறுகிறார். குரு பகவானும் உச்சம் பெற்ற சூரியனுடன் இணைகிறார். சனிபகவான் ஏழாம் வீட்டிலும் ஒன்பதாம் வீட்டில் புதன், சுக்கிரன், ராகு, லாப ஸ்தானத்தில் செவ்வாய், மூன்றாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. பதவி அதிகாரம் தேடி வரும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும் யோகம் வந்துள்ளது. சனிபகவான் சஷ மகா யோகத்தை தரப்போகிறார். சூரியன் குரு, ராகு உடன் இணைந்து உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறார். நினைத்த காரியம் நிறைவேறும். கடவுள் அருளினால் அதிர்ஷ்டம் தேடி வரும். திருமணம் சுப காரியம் நல்லபடியாக நடைபெறும். சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். ஏப்ரல் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ஏற்றங்களைத் தரப்போகிறது.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே..ஏப்ரல் மாதத்தில் ஆறாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் குரு உங்களுக்கு எட்டாம் வீட்டில் ராகு உடன் சூரியன், புதன், குரு ஆகிய கிரகங்கள் இணைகின்றன. அஷ்டம ஸ்தானத்தில் கிரகங்கள் இணைவதால் கவனமாகவும் நிதானமாகவும் அடி எடுத்து வைக்க வேண்டியது அவசியம். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். இருக்கிற வேலையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் தொல்லைகள் பிரச்சினைகள் தேடி வரும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பொறுமை அவசியம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் சங்கடங்கள் வந்து போகும். புதிய முயற்சிகள் இந்த மாதம் வேண்டாம். வெளியூர் பயணங்கள் செல்லும் போது உணவு விசயத்தில் கவனம் தேவை. வயிறு பிரச்சினைகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்க வேண்டாம். ஏப்ரல் மாதத்தில் கன்னி ராசிக்காரர்கள் இருக்கும் இடத்தில் அமைதியாக இருந்து கொள்வது நல்லது.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே.. உங்களுக்கு நவ கிரகங்களும் இந்த மாதம் சாதகமாக உள்ளன. ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து கிரகங்கள் உங்களின் ராசியை பார்க்கின்றன. சூரியன், குரு, புதன், ராகு, சுக்கிரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அற்புதமான யோகங்கள் நிறைந்த மாதமாக துலாம் ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது. புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். புரமோசன் தேடி வரும். மாணவர்களுக்கு திறமையும் புத்திசாலித்தனமும் இந்த மாதம் உங்களுக்கு கூடும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். குடும்ப வாழ்க்கையில் இதுநாள் வரை இருந்த குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சூரியன் புதன் குரு கூட்டணி அற்புதமான யோகத்தையும் நல்ல இடமாற்றத்தையும் தரப்போகிறது. வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும்.ஏப்ரல் மாதம் சுபமான மாதமாக அமைந்துள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் சனி, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சூரியன், ஆறாம் வீட்டில் ராகு,புதன், சுக்கிரன்,எட்டாம் வீட்டில் செவ்வாய் 12ஆம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குரு, சுக்கிரன் பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். குடும்ப வாழ்க்கையில் நன்மைகள் தேடி வரும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். குரு பகவான் ஆறாம் வீட்டிற்கு மாத இறுதியில் வருவதால் செய்யும் காரியங்களில் கவனமும் நிதானமும் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் தேவை. சுக்கிரன் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து மாளவியா யோகத்தை தரப்போகிறார். திருமண பேச்சுவார்த்தை தொடர்பாக பேசலாம். நினைத்த காரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் பொறுமையும் தேவைப்படும். பேச்சில் தேவையற்ற வார்த்தைகளை விட வேண்டாம். பணத்தை யாரை நம்பியும் கடனாக கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் பொறுமையாகவும் நிதானமாகவும் அடி எடுத்து வைப்பது நல்லது. கடவுளை நம்புங்கள் கைகொடுப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+