Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏப்ரல் மாத ராசி பலன் 2023: உச்சம் பெறும் சூரியனுடன் ராகு குரு கூட்டணி.. யார் வாழ்க்கையில் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் மாதத்தில் வசந்த கால காற்று வீசினாலும் கோடை வெயிலும் சுட்டெரிக்கும். அவ்வப்போது மழையும் பெய்யும். அதுபோலத்தான் பலரது வாழ்க்கையில் சின்னச் சின்ன சிரமங்கள் இருந்தாலும் கிரகங்களின் திடீர் மாற்றம் புதிய திருப்பங்களையும் தரும். பண வருமானத்தை தரும் பொருளாதார ஏற்றத்தை அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கும். சில ராசிக்காரர்களுக்கு சோதனைகள் அதிகம் நடைபெறும். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் கூடவே குரு, புதன், மேஷத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய்,துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. மேஷ ராசியில் உள்ள சுக்கிரனும் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். குரு பகவான் ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி நான்கு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களே..அதிர்ஷ்ட தேவதையின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைத்து விட்டது. சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் புது வேலைக்கு முயற்சி செய்யலாம். சூரியன் பெயர்ச்சி, குரு பெயர்ச்சியால் புதிய பதவிகள் தேடி வரும். அதிகார பதவி தேடி வரும். குரு, ராகு, சூரியன் கூட்டணி அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. சனிபகவானின் பார்வை உங்கள் ராசியில் உள்ள சூரியன், ராகு, குரு மீது விழுவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். சுக்கிரன் 2ஆம் வீட்டில் ஆட்சி பலத்தோடு அமரப்போவதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலை, தொழில் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் சுப காரியம் கை கூடி வரும். காதலிப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குரு பகவானின் பார்வை ஏழாம் வீட்டின் மீது விழுவதால் சுபகாரியம் நடைபெறும். செவ்வாய் பயணத்தால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். போட்டி தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சந்தோஷ சம்பவங்கள் அதிகம் நடைபெறும் அற்புதமான மாதம் ஏப்ரல் மாதம். கோடை காலத்தை உற்சாகமாக கொண்டாட தயாராகுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ஏப்ரல் மாதத்தில் உங்கள் ராசி நாதன் ஆட்சி பெற்று உங்கள் ராசியில் அமரப்போகிறார். வேலையில் அற்புதங்கள் நிகழும். புது வேலைக்காக அவசரப்பட்டு இருக்கும் வேலையை விடாதீர்கள். பிசினஸ் செய்பவர்கள் முதலீடு செய்யும் முன் யோசித்து செய்வது அவசியம்.வேலை செய்யும் இடத்தில் பளு கூடும். 12ஆம் வீட்டில் 3 கிரகங்கள் கூடி இருப்பதால் மன அழுத்த பிரச்சினைகள் ஏற்படாலாம். தூக்க குறைபாடு ஏற்படும். பண வருமானம் அதிகரிக்கும். சுப செலவுகளை அதிகரித்துக்கொள்ளுங்கள். வீண் விரைய செலவுகள் தடுக்கப்படும். அமாவாசை நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று அன்னதானம் செய்து விடுங்கள் நல்லதே நடைபெறும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் யோசித்து முடிவு செய்வது அவசியம்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு, ராகு, சூரியன் இணைவது செல்வ வளத்தை அதிகரிக்கப்போகிறது. 12ஆம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று பயணிக்கப்போவது விபரீத ராஜயோகம். திடீர் பண வரவு வந்து உங்களை திக்கு முக்காட வைக்கப்போகிறது. லாபங்கள் அதிகரிக்கப்போகிறது. வளமும் வளர்ச்சியும் இந்த மாதத்தில் அதிகரிக்கும். ராகு உடன் சேர்ந்த குரு உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறார். குரு பகவானின் செயல்பாடுகள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றியை தரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றிகளைத் தரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். புதன், சூரியன், ராகு, குரு என மாத பிற்பகுதியில் 4 கிரகங்கள் இணையும் போது வெற்றிகள் வீடு தேடி வரும். இந்த மாதம் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. திருமணம் சுப காரிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது உற்சாகமாக கொண்டாடத்தயாராகுங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கிரகங்களின் அற்புத கூட்டணி நிகழப்போகிறது. உங்களுடைய எட்டாவது வீட்டில் சனிபகவான் பயணம் செய்கிறார். சனிபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் மீது விழுகிறது. விரைய ஸ்தானத்திர் செவ்வாய், நான்காம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. வேலையில் மாற்றம் வேண்டும் என்று நினைத்தாலும் உங்களுக்கு இது சரியான நேரமல்ல. வேலையில் சிரமங்கள் வரலாம் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பொறுமையும் நிதானமும் தேவை. தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு வேண்டாம். புதிய தொழில் தொடங்கி மாட்டிக்கொள்ள வேண்டாம். அகலக்கால் வைத்து ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்தால் ஏப்ரல் மாதத்தை எளிதாக கடந்து விடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+