Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏப்ரல் மாத ராசி பலன் 2024: ராகு உடன் சுக்கிரன்.. மேஷத்தில் குரு சூரியன் கூட்டணி.. லக் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் உச்சமடைகின்றன. மேஷ ராசியில் சூரியனும், மீன ராசியில் சுக்கிரனும் உச்சமடைகின்றனர். புதன் மீனத்தில் நீசமடைகிறார் கும்ப ராசியில் சனி செவ்வாய் கூட்டணி நீடிக்கிறது. மீன ராசியில் ராகு கன்னி ராசியில் கேது என ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. உச்சம் பெற்ற கிரகங்களால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், ஏப்ரல் மாதத்தில் கோடிகளை குவிக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

தனுசு: ஏப்ரல் மாத முற்பகுதியில் ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன் சுக்கிரன் ராகு இணைந்து பயணம் செய்வது சிறப்பான யோகம். மாத பிற்பகுதியில் சூரியன் 5ஆம் வீட்டில் உச்சம் பெற்று அமரப்போகிறார். சிலருக்கு புதிய வேலையும் இட மாற்றமும் கிடைக்கும். குரு பகவானின் பார்வை மாதம் முழுவதும் பண வரவு உண்டு. சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும், சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்று பயணம் செய்வதால் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும்.

April Month Rasi palan 2024 Tamil prediction for Dhanusu Makaram Kumbam and Meenam

மகரம்: உங்களுக்கு மாற்றமும் ஏற்றமும் கலந்த மாதம் இது. சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ளார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் உச்சம் பெற்று அமரப்போகிறார். குரு உடன் சூரியன் இணைந்து பயணம் செய்யும் காலத்தில் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். சுக்கிரன் புதனோடு இணைந்து மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாடு யோகம் கூடி வரும். உயர்கல்வி வாய்ப்பு அமையும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களே... ஏப்ரல் மாதம் உங்களுக்கு அற்புதமான மாதம். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடுவீர்கள், வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. வண்டி வாகனம் வாங்க யோகம் தேடி வரும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால் முகப்பொலிவு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். இது நன்மை தரும் மாதம்.

மீனம்: ஏப்ரல் மாத முற்பகுதியில் உங்கள் ராசிக்குள் சூரியன், ராகு, சுக்கிரன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்கின்றனர். வேலைகள் சிறப்பாக அமையும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாதத்தின் பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு சென்று குரு உடன் கூட்டணி சேருகிறார். உங்கள் ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்று பயணம் செய்வது சிறப்பு. தொழில் வியாபாரம் லாபத்தை கொடுக்கும். பண வருமானம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும் மாதமாக ஏப்ரல் மாதம் அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+