Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏப்ரல் மாத ராசி பலன் 2024: மேஷ ராசியில் சூரியன் உச்சம்.. திடீர் லக் யாருக்கு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் உச்சமடைகின்றன. மேஷ ராசியில் சூரியனும், மீனம் ராசியில் சுக்கிரனும் உச்சமடைகின்றனர். புதன் மீனத்தில் நீசமடைகிறார் கும்பம் ராசியில் சனி செவ்வாய் கூட்டணி நீடிக்கிறது. மீன ராசியில் ராகு கன்னி ராசியில் கேது என ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. உச்சம் பெற்ற கிரகங்களால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், திருமணம் கைகூடும், காதல் ஏற்படும். கோடிகளை குவிக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

சிம்மம்: உங்கள் ராசி அதிபதி சூரியன் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் ராகு உடன் இணைந்து எட்டாம் வீட்டில் பயணம் செய்வார். சுக்கிரன் எட்டாம் வீட்டில் உச்சம் பெற்று பயணம் செய்ய சூரியனும் மாத பிற்பகுதியில் பாக்ய ஸ்தானத்தில் உச்சமடைவார். மாதம் முழுவதும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் குறைகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் உச்சம் பெற்று பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். சொத்து சுகம் சேரும். உங்களின் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சிறு ஊடல் ஏற்படும் கவனம் தேவை. சிம்ம ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான மாதம்.

April Month Rasi palan 2024 Tamil prediction for Simmam Kanni Thulam and Viruchigam

கன்னி: ஏப்ரல் மாதத்தில் சூரியன் ஏழாம் வீட்டில் சுக்கிரன், ராகு உடன் இணைந்து உங்கள் ராசியை பார்க்கிறார். மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டிற்கு சூரியன் செல்வதால் விபரீத ராஜயோகம் தேடி வரும். கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன சண்டைகள் நடைபெறும். ஊடலை கூடலாக மாற்றுங்கள். முன்னோர்கள் சொத்துக்கள் கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம் பொறுமை தேவை. பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். உடம்பில் கவனம் செலுத்துங்கள். மனதை அமைதியாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். ஏப்ரல் மாதம் திடீர் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது.

துலாம்: துலாம் ராசிக்காரர்களே... ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் உச்சம் பெற்று அமரப்போகிறார். இந்த மாதம் கிரக நிலைகள் அற்புதமாக அமைந்திருக்கிறது. வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். ராசி அதிபதி சுக்கிரன் 5ஆம் வீட்டில் புதனுடன் இணைந்து பயணம் செய்யப்போவது அற்புதமான மகாலட்சுமி யோகத்தை தரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும். இந்த மாதம் பிரமாதமான மாதம். வெற்றிகள் கிடைக்கும் மாதம். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமண வைபவங்கள் கூடி வரும். வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும். வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவீர்கள். தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்படும். தொந்தரவுகள் விலகும்.

விருச்சிகம்: சூரியன் மாத முற்பகுதியில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் உடன் பயணம் செய்யப்போகிறார். மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்ற நிலையில் பயணம் செய்யப்போவதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். கண்களின் மீது கவனமும் அக்கறையும் செலுத்துங்கள். குரு பகவான் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் உடன் இணைந்து பயணம் செய்வது சிறப்பான அம்சம். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையடைந்துள்ளது. உங்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஏற்றம் அமையும். வசிய தன்மை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அமையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருக்கிறார் வெளிநாட்டு யோகம் கைகூடி வரப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+