ரஜினியின் தர்பார் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகுமாம்.. அடித்துச் சொல்லும் ஜோதிடர்கள்!
Recommended Video
சென்னை: 2020 புத்தாண்டும், பொங்கல் பண்டிகையும் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமானதாக அமைந்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி தர்பார் ரிலீஸ் ஆவதுதான்தான் அவர்களின் உற்சாகத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. படத்தில் பாடல், ட்ரெயிலர் பார்த்த போதே ரசிகர்கள் உற்சாக விசிலடிக்க ஆரம்பித்து விட்டனர். மூன்று முகம் அலெக்ஸ்பாண்டியன் கம் பேக் என்று கூறும் ரசிகர்களுக்கு தர்பார் படமும் நினைவுகளில் நீங்காத இடம் பெறும் என்றும் இந்த படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்களில் தொடங்கிய ரஜினிகாந்தின் சினிமா பயணம் 45 ஆண்டு காலமாக தொடர்கிறது. 167வது படமாக தர்பார் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு காக்கிச்சட்டையில் நடித்திருக்கிறார். நான் மோசமான போலீஸ் என்று ரஜினி பஞ்ச் வசனம் பேசியிருக்கிறார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ரஜினி ராசி நட்சத்திரத்திற்கும், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ராசி நட்சத்திரத்திற்கும் எப்படி ஒர்க்அவுட் ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த பேட்டை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல தர்பார் படத்தின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நயன்தாரா ஏஆர் முருகதாஸ்
ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது தர்பார் படம். இந்த கூட்டணி இணைவது இது முதல்முறையாகும். ஏற்கனவே ரஜினி நயன்தாரா கூட்டணி சேர்ந்து சில படங்களில் நடித்திருக்கின்றனர். அதேபோல ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நயன்தாரா ஏற்கனவே நடித்திருக்கிறார். இந்த மூவரும் இணைந்திருப்பது இதுதான் முதல்முறையாகும்.

ரஜினி முருகதாஸ் ராசி நட்சத்திரம்
ரஜினியின் ராசி மகர ராசி திருவோணம் நட்சத்திரம், ஏ ஆர் முருகதாஸ் ராசி மகர ராசி அவிட்டம் நட்சத்திரம். இருவருக்குமே ஏழரை சனி காலம்தான்.
9ஆம் எண் செவ்வாயின் ஆளுமைக்கு உட்பட்ட எண். அவிட்ட நட்சத்திரம் செவ்வாயின் ஆதிபத்யம் கொண்ட நட்சத்திரம். 9ஆம் தேதி சந்திரன் மிதுனம் ராசியில் மிருகஷீரிடம், திருவாதிரை நட்சத்திரங்களில் சஞ்சரிக்கிறார். திருவோணம் சந்திரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம். இந்த ராசி நட்சத்திர கூட்டணியும் சாதகமாக உள்ளது.

தர்பாருக்கு சாதகம்
தர்பார் படம் ரிலீஸ் ஆகும் நாளில் மிதுனம் ராசியில் ராகு, சந்திரன், தனுசு ராசியில் சனி, கேது, குரு, புதன், சூரியன், கும்பம் ராசியில் சுக்கிரன், விருச்சிகம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரகங்களின் கூட்டணி சஞ்சாரம் ரஜினிக்கும் ஏஆர் முருகதாஸ்க்கும் சாதகமாகவே உள்ளது.
எனவே கதை திருட்டு புகார் எல்லாம் வர வாய்ப்பே இல்லை என்று கூறலாம்.

கலக்கல் ரஜினி
தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் இளமைக்கு திரும்பியுள்ளார். மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் கம் பேக் என்று ரசிகர்கள் உற்சாகமடைகின்றனர். விஜய்க்கு துப்பாக்கி போல ரஜினிக்கு தர்பார் விறுவிறுப்பாக இருக்கும் என்பது கணிப்பாக உள்ளது. முரட்டுக்காளை, தில்லுமுல்லு, மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியன் போலவும், தளபதி, அண்ணாமலை, பாட்சா, முத்து, படையப்பா போலவும் இந்த படம் ரசிகர்கள் நினைவில் நீங்காத இடம்பிடித்திருக்கும். சந்திரமுகி, எந்திரன் போல 2020 ஆம் ஆண்டின் முதல் படமே மிகப்பெரிய ஹிட் ஆக இருக்கும் என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள். இந்த கணிப்பு உண்மையாகுமா இன்னும் இரண்டு தினங்களில் தெரிந்து விடும்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications