For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சினிமாவில் ஹீரோவா? ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பொறியாளரா? டாக்டரா? உங்கள் ஜாதக கட்டம் சொல்வதென்ன?

உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் கூட்டணியே நீங்கள் என்ன படிக்க வேண்டும் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பிளஸ் 2 தேர்வு எழுதி பாஸ் செய்தாலும் இன்றைக்கு சில ஆயிரம் பேர் மட்டுமே டாக்டர் படிப்பு படிக்க முடிகிறது. இதற்குக் காரணம் அவர்களின் ஜாதக அமைப்புதான்.ஜாதகத்தில் சனி, புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தோ, பார்வை பெற்றோ இருப்பது பொறியியல் படிப்புக்கு நல்லது. பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்க்கும் முன்பாக அவர்களின் ஆசை என்ன அவர்களால் என்ன படிக்க முடியும் என்று கேட்பது நல்லது. அதோடு ஜாதகத்தை கொண்டு போய் என்ன படிக்க வைக்கலாம் என்று ஒரு நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டு உயர் கல்வியில் சேர்ப்பது நன்மையைத் தரும்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு உள்ள நிலை ராகு எந்த கிரகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது என்பதைப் பார்த்து சினிமா, மீடியா, சித்தா ஆயுர்வேத மருத்துவம் படிப்பு படிக்கலாம். கேதுவின் நிலையைக் கொண்டு மருத்துவம், ஆராய்ச்சி படிப்புகள் படிக்கலாம். ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி ஆகியவைகளைப் பொறுத்து அதற்கேற்ப படிக்க வைத்தால் பிள்ளைகள் சாதனையாளராகத் திகழ்வார்கள்.

Astrological planet combination for higher education check your jathagam and yogam

டாக்டருக்கு படிக்கவும், மருத்துவராக தொழில்கள் செய்யவும் மருத்துவ கிரகமான கேது பகவான் அருள் வேண்டும். லக்னத்துக்கு 4,9,10 ஆகிய இடங்களில் மருத்துவ கிரகமான கேது இருப்பது நல்ல யோகம். கேதுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பு இருப்பது முதல்தர யோகம். எண் கணித அமைப்பில் பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 1,2,7,9 என அமைவது சிறப்பு. அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறப்பது மருத்துவர் ஆகும் யோகத்தை அளிக்கும்

பொறியியல் பட்டதாரி ஆவதற்கு பிரகாசமான தேதி, கூட்டு எண்கள் 5,14,23, 8,17,26, 9,18,27 ஆகியவை. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பரணி, பூரம், பூராடம் ஆகியவை பொறியியல் படிக்க சாதகமான நட்சத்திரங்கள். கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி படித்து தகவல் தொழில் நுட்பத்துறையில் சாதிக்க லக்னாதிபதி பலம் மிகவும் அவசியம். லக்னம், 4,9,10 ஆகிய இடங்களில் ராகு இருப்பது நலம் தரும். அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சாதகமானவை. நான்காம் அதிபதியுடன் புதன் - ராகு சேர்க்கை பெறுவது நல்ல அம்சமாகும். பிறந்த ஜாதகத்தில் புதன் கிரகம் லக்னத்திலோ, 4,5,7,9,10 ஆகிய இடங்களில் இருப்பது மிகப்பெரிய பலமாகும்.

சந்திர கிரகண நேரத்தில் குழந்தை பிறந்தால் யோகமா? தோஷமா? ஜோதிடம் சொல்வதென்ன? சந்திர கிரகண நேரத்தில் குழந்தை பிறந்தால் யோகமா? தோஷமா? ஜோதிடம் சொல்வதென்ன?

கணக்கு சம்பந்தமான படிப்புகள், ஆடிட்டிங் படிப்பு, பி.காம், எம்.காம், அக்கவுன்டன்சி போன்றவற்றில் தேர்ச்சி பெற லக்னம், லக்னாதிபதி சந்திரன் ஆகியவை பலம் பெறவேண்டும். சூரியன், புதன் சேர்ந்து லக்னம், 2,4,9,10 ஆகிய இடங்களில் இருப்பது சிறப்பு. அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆடிட்டர் ஆக அற்புதமான யோகம் கொண்டவர்கள்.

சினிமா டைரக்டர், கேமராமேன், எடிட்டிங், சவுண்ட் இன்ஜினியர் ஆகிய துறைக்கு செல்ல பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள். ஏற்றவர்கள். அதோடு பிறந்த தேதி, கூட்டு எண் 1,10,19,28, 4,13,22,31, 6,15,24, 2,11,20,29 ஆகியவை சாதகமானது.

Astrological planet combination for higher education check your jathagam and yogam

சட்ட படிப்புக்கு அஸ்திவாரமே லக்னம், லக்னாதிபதி, 2-ம் இடம், 2-ம் அதிபதி, இந்த ஸ்தானம் பலமாக இருப்பது அவசியம். வாக்குகாரகன் செவ்வாய் லக்னத்தையோ, ராசியையோ பார்ப்பது நல்ல அம்சமாகும், இரண்டாம் இடத்தை பார்ப்பது சிறப்பாகும். புதன், குரு லக்னத்தையும் வாக்கு ஸ்தானத்தையும் பார்ப்பது அவசியமாகும். அதன் காரணமாக வாதத் திறமை மேம்படும். கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் சிறப்பானவை.

பிறந்த ஜாதகத்தில் சரஸ்வதி யோகம் இருந்தால் உயர்கல்வி யோகம் கூடி வரும். பொறியியல் கல்லூரிகள் பல்லாயிரக்கணக்கில் பெருகி உள்ளன. லட்சக்கணக்கான மாணவர்கள் இன்ஜினியருக்கு படித்து வெளியே வந்தாலும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்து பொறியாளராக சாதிக்க எல்லோராலும் முடிவதில்லை எனவே பொறியியல் துறைக்கு ஏற்ற ஜாதக அமைப்பு உள்ளதா என்பதை அறிந்து படிக்க வைக்க வேண்டியது அவசியம். இப்போது நீட் தேர்வு வேறு பலரது டாக்டர் கனவை பாதித்துள்ளது. எனவே டாக்டராகும் அம்சத்தோடு தமது குழந்தை பிறந்துள்ளார்களா என்பதை அறிந்து அந்த படிப்பில் வழி நடத்தலாம். எனவே உங்கள் நட்சத்திரம் எண்களின் கூட்டுத்தொகை கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி ஆகியவைகளை அறிந்து உங்களுக்கான துறையை தேர்வு செய்து சாதனை புரியுங்கள்.

English summary
Astrological planet conjunction for higher eduction: In Tamil Nadu, lakhs of people have written the Plus 2 exam and passed it, but today only a few thousand people are able to study for doctorate. The reason for this is their horoscope system. Saturn, Mercury and Mars planets in the horoscope are conjunct or aspected, which is good for engineering studies. Before enrolling children in higher education, it is better to ask them what their aspirations are and what they can study. Also taking the horoscope and taking advice from a good astrologer on what to study would be beneficial to enroll in higher education.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X