சுடச் சுட சோறு... சிம்பிள் டிரஸ் - 12 ராசிக்காரர்களுக்கும் பிடித்த உணவு உடை
syn: மேஷ ராசிக்காரர்கள் சூடாக சாப்பிடுவார்கள். எளிமையான உணவுகளையே சாப்பிடுவார்கள். 12 ராசிக்காரர்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுவார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.
சென்னை: சாப்பிடும் உணவுக்கும் உடுத்தும் உடைக்கும் தொடர்பு உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் என்ன மாதிரியான உணவை சாப்பிடுவார்கள் எப்படி உடை உடுத்துவார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் உணவுக்கும் தொடர்பு உண்டு. எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம் என ஜோதிடத்தில் உள்ளது.
அதே போல 12 ராசிக்காரர்களின் உணவுப்பழக்கம், உடை உடுத்தும் பழக்கம் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவார்கள். எளிமையான உணவுகளை சாப்பிட விரும்புவார்கள். அதேபோல எளிமையான ஆடைகளையே உடுத்துவார்கள். அந்த ஆடைகளை வெண்மையாக, தூய்மையானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

ரிஷபம்
அறுசுவை உணவுகளை ரசித்து ருசித்து பசிக்கும் போது மட்டுமே சாப்பிடுவார். காபி, டீ, ஜூஸ் ஆகியவைகளை அடிக்கடி குடிப்பார். கவர்ச்சிகரமான ஆடைகளை அணியவே இந்த ராசிக்காரர்கள் விரும்புவார்கள்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் போல இளவரசர் போல உண்ணவும், உடுத்தவும் விரும்புவார்கள். உணவு, உடைக்காக அதிகம் செலவு செய்வார்கள். பசியான நேரத்திலும் உணவுக்காக அதிகம் மெனக்கெடுவார்கள்.

கடகம்
கம்பீரமான ஆடைகளையே கடகம் ராசிக்காரர்கள் அணிவார்கள். சாப்பிடும் சாப்பாடு சூடாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார். நன்றாக சாப்பிட வேண்டும் என்று ருசியான உணவுகளை தேடி பிடித்து சாப்பிடுவார்.

சிம்மம்
பக்குவமாக சமைத்த சத்தான உணவுகளை சாப்பிடவே சிம்ம ராசிக்காரர்கள் விரும்புவார்கள். இரவு நேரத்தில் எளிமையான உணவு போதும் என்று நினைப்பார். பார்வைக்கு கம்பீரமான தோற்றம் தரும் ஆடைகளையே அணிவார். ஆடை அணிவதற்கு இவர்கள் அதிகம் நேரம் எடுத்துக்கொள்வார்.

கன்னி
பசி நேரத்தில் என்ன தேவையோ அதை ருசியாக ரசித்து சாப்பிடுவார். உயர்தர உணவுகள் இந்த ராசிக்காரர்களுக்கு தேவை. தூய்மையான எளிமையான ஆடைகளையே விரும்பி அணிவார். ஆடம்பரமாக உடை அணிய ஆசைப்பட மாட்டார்.

துலாம்
பசி பொறுக்க மாட்டார். சுடச்சுட சுவையாக சாப்பிடுவார். இவருக்கு அடிக்கடி ஜீரண பிரச்சினை ஏற்படும். காரணம் இவர் உட்கொள்ளும் உணவுதான். சூடாக சாப்பிட வேண்டும் என்றாலும் ஆறிய உணவுகளே இவருக்கு கிடைக்கும். இவர் லக்கினாதிபதி சுக்கிரன் என்பதால் ஆடம்பர பிரியர் அழகான ஆடைகளை நேர்த்தியாக அணிவார்.

விருச்சிகம்
உணவு விசயத்தில் இவர் அதிகம் கவனம் செலுத்துவார். ஆரோக்கியமான, சத்தான உணவுகளையே இவர் சாப்பிடுவார். ராசிக்கு 12 அதிபதியாக சுக்கிரன் இருப்பதால் ஆடைகள் விசயத்தில் ஆடம்பரமாக இருப்பார். ஆடைக்காக அதிகம் செலவு செய்வார்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுடச்சுட ருசியான உணவுகளை ரசித்து சாப்பிடுவார். சில நேரங்களில் சூடு அறிய உணவுகளையே சாப்பிட நேரிடும். குளிர்பானங்களை அதிகம் சாப்பிடுவார் என்பதால் சளி தொந்தரவு அதிகம் இருக்கும். உயர்தர ஆடைகளை அணிய விரும்புவார். வண்ணவண்ண ஆடைகளை அணிய ஆசைப்படுவார்.

மகரம்
மகர லக்னத்தில் தோன்றியவர்கள் சுவையான உணவுகளை சாப்பிடுவார்கள். சற்றே சூடு தணிந்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். உணவு விசயத்தில் சிக்கமான இருப்பார். விலை உயர்ந்த ஆடைகளை அணிய விரும்புவார்கள். தினசரியும், விதம் விதமாக அணிய விரும்புவார்.

கும்பம்
சுவையான உணவுக்காக எவ்வளவு பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார். தினசரியும் சுவையான பலகாரங்களும், பானங்களும் இவருக்கு அவசியம் தேவை. விலை உயர்ந்த ஆடைகளை அணியவே விரும்புவார்கள். அழகான தோற்றம் தரக்கூடிய ஆடைகளையே அணிய விரும்புவார்.

மீனம்
மீனம் ராசிக்காரர்கள் உணவுக்காக அதிகம் செலவு செய்வார். சூடாக, சுவை குன்றாத உணவுகளையே சாப்பிடுவார். விலை உயர்ந்த ஆடைகளையும், அழகான நவீனமான ஆடைகளையும் உடுத்துவார்.












Click it and Unblock the Notifications