2015 ஆம் ஆண்டு ராசி பலன்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்
பொதுவான ராசி பலன்கள் என்பது அப்போதைய கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு வேகங்களைக் கொண்டுள்ளன. வருட கிரகங்களான குரு, சனி மற்றும் ராகு-கேதுக்களை அடிப்படையாகக் கொண்டு வருட பலன்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. அவரவர்களின் ஜாதக கோள்களின் நிலை, தசாபுத்தி, கோசாரம் மற்றும் ஜாதக யோக அவயோகங்களுக்கு தகுந்தபடி பலன்கள் மாறுபடலாம். இங்கு கூறப்பட்டுள்ளவை ராசியை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டுள்ள பொதுவான பலன்களாகும்.

மேஷம்: பொதுவாக தொழில் உத்தியோகத்தில் சிரம நிலை காணப்படும். பொருளாதார நிலையும் சுமாராக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர் ஒருவரை இழக்க நேரிடலாம். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்: தொழிலில் மந்த நிலை காணப்படும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் சிரம நிலையில் இருக்கும். வயிற்றில் நோய் உருவாகும். குழந்தைகளால் நிம்மதி குறையும். ஆன்மீகப்பயணம் உண்டாகும். பல நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் வெற்றியடையும்.
மிதுனம்: தொழில் உத்தியோகம் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிரிகள் தோன்றுவார்கள். நிலம் வீடு வாகன வகைகளில் பிரச்சினை உருவாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். மிக அதிக அளவில் பணவரவு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.
கடகம்: தொழில் தொடர்பாக மனதில் குழப்பம் அதிகரிக்கும். பொருளாதாரநிலையும் மனதிற்க்கு மன மகிழ்ச்சி தராது. அண்ணன் தம்பி உறவில் பிரச்சினை உருவாகும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். எல்லோரிடமிருந்தும் தனிமையாக இருப்பதாக உணர்வீர்கள். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் ஏற்றம் காணப்படும்.
சிம்மம்: அதிகமான செலவுகள் மனதை அலைகழிக்கும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு செலவுகள் குறையும். எது பேசினாலும் பிறர் தவறாக புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறைவாக இருக்கும். தொழில் நிலையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு மன பாரம் கொஞ்சம் குறையும்.
கன்னி: தொழிலில் மேன்மை நிலை உருவாகும் புதிதாக தொழில் ஒன்றை துவங்கி வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். பணவரவு அபரிமிதமாக இருக்கும். பணத்தால் எல்லாவற்றையும் சாதிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.
துலாம்: குடும்பத்தில் சச்சரவுகள் அதிகரிக்கும். செலவுகளும் கைமீறும். தொழில் மந்தநிலையில் இருக்கும். பணவரவும் திருப்தி இருக்காது. உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். தொழிலுக்காக அலைச்சல் அதிகரிக்கும். பாதத்தில் வலி தோன்றும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தைத் தரும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனம் செயல் படும் வேகத்திற்க்கு உடல் செயல்படாது. தொழில் உத்தியோகம் சுமாராக இருந்தாலும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எண்ணிய யாவும் எளிதில் நிறைவேறும். குழந்தைகளால் மன நிம்மதி குறையும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.
தனுசு: பணம் கொடுக்கல் வாங்கலில் மந்த நிலை காணப்படும். தொழில் நிமித்தமாக அதிகமான செலவுகள் உருவாகும். எதிர்பாராத செலவுகள் மனதை அலைகழிக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் பிரச்சினைகள் உருவாகும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.
கும்பம்: தொழில் நிலவரம் சீராக இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை. ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் மேன்மை காணப்படும்.
மீனம்: அதிகமாக செல்வம் சேரும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறு சச்சரவு உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications