Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவை அச்சுறுத்தும் கோவிட் 19 - கொரோனாவிற்கு பரிகாரம் இருக்கு பயப்படாதீங்க

நோய் எதிர்ப்பு சக்தி என்ற வெள்ளை அணுக்கள் நம் உடம்பில் ராணுவம் போல செயல்படும். அது சரியாக இருந்தால் எந்த நோயும் உடம்பிற்குள் அண்டாது. ஆரோக்கியமான உடம்பும் நல்ல தசாபுத்தியும், தீர்க்க ஆயுள் கொண்ட ஜாதக

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் நுழைந்து பல ஆயிரக்கணக்கானோரை பதம் பார்த்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்துவிட்டு அண்டை நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. மருத்துவத்துறையில் இதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் கொரோனாவைப் பார்த்து பயப்பட தேவையில்லை. அதோடு மருத்துவ ஜோதிடத்தில் கொரோனாவை எதிர்கொள்ள சில பரிகாரங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கூறியுள்ளனர்.

Recommended Video

    Corona Virus Symptoms | Precautions

    நோய் எதிர்ப்பு சக்தி என்ற வெள்ளை அணுக்கள் நம் உடம்பில் ராணுவம் போல செயல்படும். அது சரியாக இருந்தால் எந்த நோயும் உடம்பிற்குள் அண்டாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதில் தாக்குகிறது. உடம்பில் ஏற்கனவே நோய் இருப்பவர்களைத்தான் தாக்குகிறது கொரோனா. சளி இருமல் சுவாசப்பிரச்சினை கொண்ட நோயாக இது உருவாகி பின்னர் சுவாசத்தை நிறுத்துகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் சனி, குரு, கேது, சூரியன், சந்திரன், புதன் ஆகிய ஆறு கிரக சேர்க்கை ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த சூரிய கிரகணமும் புதிய வைரஸ் நோய் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். கொத்துக்கொத்தாக உயிர்பலி ஏற்படுகிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு

    கொரோனா வைரஸ் பாதிப்பு

    கொரோனா வைரஸ் சாதாரண சளி இருமல் என்றுதான் முதலில் உடம்பிற்கு நுழைந்து படிப்படியாக பதம் பார்க்கிறது. 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை எந்த எபெட்டும் காட்டாது அப்புறம்தான் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறது கொரோனா. வைரஸ் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால், அதிகக் காய்ச்சல் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரண சளித் தொந்தரவு போலத் தோன்றினாலும், தொடர்ந்து காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி, மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்பட்டு, கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் போய், பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கவலைக்கிடமாக்கிவிடும்.

    நோய்களை உணர்த்தும் ஆயுள் ஸ்தானம்

    நோய்களை உணர்த்தும் ஆயுள் ஸ்தானம்

    ஜென்ம லக்னத்திற்கு ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமான 8ம் வீட்டில் பலஹீனமாக கிரகங்கள் அமையப் பெற்றாலும் 8ம் அதிபதியுடன் கிரகங்கள் பலஹீனமாக இருந்தாலும் நோய்கள் உண்டாகும். 8ல் அமையப் பெறுகின்ற கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் நம் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எப்படி 8ல் கிரகங்கள் பலஹீனமாக இருந்தால் அக்கிரகங்களின் காரகத்துவதத்திற்கேற்ப நோய்கள் ஏற்படுகிறதோ, அதுபோல 6ல் பாவ கிரகங்கள் பலஹீனமாக இருந்தாலும் நோய்கள் பாதிக்கும்.

    நோய் பாதிப்புக்கு காரணம்

    நோய் பாதிப்புக்கு காரணம்

    ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். ஒருவருக்கு எப்படிப்பட்ட நோய் வரும், அந்த நோய் எளிதில் தீருமா, அல்லது கடனாளி ஆக்கி விடுமா என்று ஆறாமிடத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நவகிரகங்களில் எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் என்ன நோய் வரும் என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் நோய்களில் இருந்து குணமடையலாம்.

    மூச்சை நிறுத்தும் வைரஸ்

    மூச்சை நிறுத்தும் வைரஸ்

    மருத்துவ ஜோதிடத்தில் காய்ச்சலை மூன்று வகையாக பிரிக்கலாம். வாத காய்ச்சல் உடல் வலியுடன் கூடிய காய்ச்சலாக வாட்டி எடுக்கும். பித்த காய்ச்சல் தலைவலி மற்றும் வாந்தியுடன் கூடிய காய்ச்சலாக பாதிக்கும். கப காய்ச்சல் ஜலதோஷம், சளி, இருமலுடன் கூடிய காய்ச்சலாக பாதிக்கும். கொரோனா காய்ச்சல் அறிகுறியை பார்த்தால் அது வாத காய்ச்சல்தான். முதலில் சளி இருமல் என்று தாக்கி தொண்டையை பதம் பார்த்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது.

    ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க

    ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க

    நோய் எதிர்ப்பு சக்தி என்ற வெள்ளை அணுக்கள் நம் உடம்பில் ராணுவம் போல செயல்படும். அது சரியாக இருந்தால் எந்த நோயும் உடம்பிற்குள் அண்டாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதில் தாக்குகிறது. உடம்பில் ஏற்கனவே நோய் இருப்பவர்களைத்தான் தாக்குகிறது கொரோனா எனவே சத்தான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் எந்த நோயும் எதுவும் செய்யாது.

    ராகு கேது

    ராகு கேது

    விஷக்கிருமிகளின் உற்பத்தி செய்வது அதிலும் முக்கியமாக கண்ணுக்கு தெரியாத நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளை பரப்புவதும் சர்ப கிரகங்களான ராகு-கேதுவின் முக்கிய காரகமாகும். மேலும் கிருமிகளை வேகமாக காற்றில் பரவ செய்வதில் ராகுவின் பங்கு முக்கியமானதாகும். மிதுனம் மற்றும் அதன் அதிபதியான புதனுடன் ஸ்ர்ப கிரஹ சேர்க்கை ஏற்படும்போது தொண்டையில் அழற்ச்சி மற்றும் நோய் தொற்று ஏற்படுகின்றது.

    சுவாச கோளாறுகள்

    சுவாச கோளாறுகள்

    காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் 6,8,12 தொடர்புகள், சனி, ராகு, கேது தொடர்புகள் பெறும்போது மூச்சுகோளாறுகள், சுவாச உறுப்பில் தடைகால புருஷனுக்கு நெஞ்சினை குறிக்கும் வீடு நான்காம் பாவம் எனப்படும் கடக ராசியாகும். எனவே கடக ராசி மற்றும் அதன் அதிபதியான சந்திரன் அசுபத்தன்மை பெற்று புதனுடன் தொடர்பு கொள்ளும்போது வைரஸ் கிருமி தாக்கி காய்ச்சல் ஏற்படும் சாத்திய கூறுகள் உள்ளதாக மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

    மஞ்சள் நிற உணவுகள்

    மஞ்சள் நிற உணவுகள்

    குரு ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள்,காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல் தொடர்பான வியாதிகள் ஏற்படும். குருவின் காரகத்துவம் கொண்ட உணவுகளான மஞ்சள் நிற வாழைப்பழம், உலர் திராட்சை, பப்பாளி போன்றவைகளை சாப்பிட நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும் குருவின் பலன் கூடும்.

    சத்தான உணவுகள்

    சத்தான உணவுகள்

    ஆட்டுக்கறி, ஈரல், சிவப்பு அரிசி உணவுகள், புரதச்சத்து நிறைந்த துவரம் பருப்பு, பீட்ரூட் என சிவப்பு நிற காய்கறிகள் பழங்களை சாப்பிட ரத்த அணுக்களில் சத்துக்கள் அதிகமாகும். செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். பச்சரிசி, பால், தயிர் போன்ற பொருட்களை சாப்பிட்டு சந்திரனின் அருளை பெறலாம். கிழங்கு வகைகள், எள்ளு, எள்ளுருண்டை, ப்ளாக்பெரி பழங்கள், கருப்பட்டி, நுங்கு, பதனீர், பனங்கருப்பட்டி, பனங்கல்கண்டு, மிளகு சாப்பிட சனி பகவானின் அருள் கிடைக்கும் உடல் பலமும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

    சூரியபகவானை வணங்குங்கள்

    சூரியபகவானை வணங்குங்கள்

    செவ்வாயின் காரகம் நிறைந்த துளசியில் செய்த மருந்துகள் தொண்டை நோய் மற்றும் இருமலுக்கு சிறந்த பலனளிக்கும். விட்டமின் A அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதோடு சூரிய பகவானுக்கான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது. நோய் வருமுன் காக்கும் விதமாக விட்டமின் A, விட்டமின் C சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, ச்யவண ப்ராச லேகியம், நெல்லிக்காய், திரிபலா சூரணம் போன்றவற்றை சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு மிகுந்து நோய் வராமல் காக்கும். புதன் மற்றும் மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவானை வணங்குங்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+