ஸ்டாலின், மோடி, ராகுல் காந்தி.. யாருடைய ராசிக்கு நாளை என்ன பலன்? ரிசல்ட் நாளில் எப்படி இருக்கும்?
சென்னை: பிரதமர் மோடி, முதல்வர் மு க ஸ்டாலின் , காங்கிரஸ் ராகுல் காந்தி ஆகியோருக்கான ராசி பலன் நாளை ஜூன் 4ம் தேதி எப்படி இருக்கும், ரிசல்ட் நாளில் அவர்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2024 லோக்சபா தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் நாளை வர உள்ளன. தேர்தலுக்கான கிளைமேக்ஸ் நெருங்கி வரும் நிலையில் தேசிய அளவில் பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது.

கணிப்புகள்: இதுவரை வந்த தேர்தல் கணிப்புகள் படி பார்த்தால் பாஜக வெற்றிபெறுகிறது. என்டிஏ கூட்டணி ஆதரவு இல்லாமலே பாஜக தனியாக ஆட்சி அமைக்கிறது என்று கணிப்புகள் கூறுகின்றன. 310-320 வரை பாஜக பெறலாம். பாஜக கூட்டணி 360 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தனியாக 70 இடங்களை வெல்லும். காங்கிரசின் இந்தியா கூட்டணி அதிகபட்சம் 130 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பு இல்லை. 130 இடங்களை மட்டுமே வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜோதிட கணிப்பு: சரி லோக்சபா தேர்தலுக்கு இடையே முக்கியமான தலைவர்களுக்கு ராசி ரீதியாக நாளை பலன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
முதல்வர் மு க ஸ்டாலின் - சிம்ம ராசி: குரு பெயர்ச்சிக்கு பின் சிம்ம ராசி அமோகமாக இருக்கிறது. மே 1ம் தேதியில் இருந்து சிம்ம ராசிக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். நாளையும் சிம்ம ராசிக்கு நல்ல நாள்தான். கொஞ்சம் உடல் நலக்குறைபாடுகள் வந்தாலும் அரசியல் ரீதியாக, அதாவது பணி நிமித்தமாக நல்ல நாள்.
பிரதமர் நரேந்திர மோடி - விருச்சிக ராசி : நாளை விருச்சிக ராசிக்கு சவாலான நாள். நாளைய நாள் அத்தனை எளிதாக முடியாது. மோடிக்கு அவரின் பெயர் எல்லாம் வைத்து பார்க்க.. நாளை வெற்றி, தோல்வி எது வந்தாலும் எளிதாக வராது. எல்லாம் கடும் போராட்டத்திற்கு பின்பே வரும். மன அழுத்தம் வரலாம்.
காங்கிரஸ் ராகுல் காந்தி - விருச்சிக ராசி - மோடி போல ராகுல் காந்தியும் விருச்சிக ராசிதான்.இவருக்கும் நாளை விருச்சிக ராசிக்கு சவாலான நாள். நாளைய நாள் அத்தனை எளிதாக முடியாது. கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும். வேகமாக செயல்பட வேண்டும். அதே சமயம் வேகத்திற்கு இடையே பார்த்து பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி- மகரம் ராசி என்பதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாளை கொஞ்சம் சிக்கலாகி இருக்கும். குரு பெயர்ச்சிக்கு பின் நாளை கொஞ்சம் கடினமாக இருக்கலாம். இன்னும் 1 வருடத்திற்கு இதே கடினம் நீடிக்கலாம். நாளையும் இதே கடினமான சூழ்நிலை தொடரலாம்.












Click it and Unblock the Notifications