அரசியல் தலைவராகும் யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா - அப்போ நீங்க தேர்தலில் நில்லுங்க
அரசியல் தலைவராக வேண்டும் என்று பலரும் நினைத்தாலும் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடாது. அதற்கென்று சில யோகங்கள் வேண்டும். ஜாதகத்தில் உள்ள யோகங்கள்தான் அவரை மக்களால் விரும்பப்படுகின்ற தலைவராக உ
சென்னை: ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்று ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். பணக்காரனாகவோ, அரசியல் தலைவராகவோ, புகழ் பெற்ற நடிகராக வருவதற்கோ ஒரு யோகம் வேண்டும். ஜாதக கட்டத்தில் கிரகங்களின் கூட்டணி பார்வை, சேர்க்கை, இருக்கும் இடத்தைப் பொறுத்து அந்த யோகங்கள் அமையும். இதே உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது. அரசியலில் போட்டியிட அண்ணன் தம்பிகளும், மாமன் மச்சான்களும் கூட தயாராகிவிட்டனர். அக்கா தங்கைகள் கூட எதிர் எதிராக போட்டியிடும் களம்தான் உள்ளாட்சி தேர்தல். உங்க ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருந்தால் மட்டுமே கட்சியில் விருப்பமனு கொடுங்க இல்லாட்டி பேசாம ஓட்டு மட்டும் போட்டுட்டு உற்சாகமா வேலையை பாருங்க.
ஒருவர் ஜாதகத்தில் ராஜகிரகங்கள் சூரியன், புதன், செவ்வாய், சனி, குரு, சுக்கிரன், ராகு பலமாக இருக்க வேண்டும். சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று, லக்னத்துக்கு 6, 7, 9 ம் இடத்து அதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், தன்னுடைய சிறிய வயதிலேயே அரசியலில் பெரும்புகழ் பெற்று அரியணையில் அமர்வார்.
நாடாள வேண்டும் என்று ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்கான யோகம், ஜாதகத்தில் அம்சங்கள் கிரகங்களின், சேர்க்கை, பார்வை இருக்க வேண்டும். ராஜ கிரகங்கள் நமக்கு சாதகமாக இருந்தால்தான் சாதகமான நேரத்தில் ராஜ பதவி தேடி வரும். கஜ கேசரி யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், ஸ்ரீநாத் யோகம், விபரீத ராஜயோகம், சஷயோகம், விஷ்ணு யோகம், நீச பங்க ராஜயோகம் ஆகிய யோகங்களில் சில யோகங்கள் இருந்தால் அந்த ஜாதகக்காரர் கண்டிப்பாக அரசியலில் சிறப்பான நிலையை அடைவார்கள்.

குரு தரும் ராஜ யோகம்
ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும்.நாடாளும் யோகத்தை குரு பகவான் அருள்வார். ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும்.

ஹம்ச யோகம்
ஜாதகத்தில் குரு லக்னத்துக்கு கேந்திரம் எனப்படும் 4,7,10 ஆம் இடத்திலிருந்து, குரு உச்ச பலம் பெற்று நின்றால், இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்புடன், சூரியனும் செவ்வாயும் பலம் பெற்றால், அந்த ஜாதகர் ஒரு மிகச் சிறந்த ஒரு நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரு அரசியல் தலைவராகப் பெயர் எடுப்பார். மக்களிடம் அதிக செல்வாக்கும் உடையவராகத் திகழ்வார். இந்த யோகத்தோடு ராஜ கேந்திரயோகம் எனப்படும் யோகம் ஏற்பட்டால், அதாவது எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் பலமானால், அவரை யாராலும் அசைக்க முடியாத ஓர் ஒப்பற்றத் தலைவனாகப் பெயரெடுப்பார்.

கஜகேசரி யோகம்
ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு குரு கேந்திரம் எனும் 4ஆம் வீட்டில் அல்லது 7ஆம் வீட்டில், அல்லது 10ஆம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் அரசியலில் உயர் பதவி, அரசாங்கத்தில் உயர் பதவி, கல்வியில் உயர்வு, ஆகியவை ஏற்படும். மேலும், சொந்தமாக பல வீடுகள், வாகன யோகங்களையும் தரும். அதே சமயம் எத்தனை எதிரிகள் உருவானாலும் இந்த யோகக்காரர்களிடம் தோற்றுபோவார்கள். சந்திரன் மனோகாரகன், சுப கிரகமான குருவும் கேந்திரத்தில் இருந்தால் மிகப்பெரிய தலைவராக உலக புகழ் பெறுவார்கள். கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும்.

தர்மகர்மாதிபதி யோகம்
ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் அவரின் லக்னத்துக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து நின்றால், இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்பு உள்ளவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபனங்கள் நிறுவி, பொதுத்தொண்டு செய்வார்கள். ஆலயப் பணி செய்வார்கள். கோயில் நிர்வாகம் செய்யக்கூடிய பொறுப்புகள் வந்துசேரும். தன் சொத்தில் ஒரு பகுதியை கோயில் திருப்பணிக்காக எழுதியும் வைப்பார்கள்.

நீச பங்க ராஜயோகம்
விபரீத ராஜயோகம் திடீர் பதவிகளை தேடி தரும். கிரகங்கள் ஆறு எட்டு 12ஆம் இடங்களில் ஆட்சி பெற்று அமைந்திருப்பது யோகம். அதே போல ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்து அந்த நீசம் பெற்ற கிரகம் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்ற கிரகத்துடன் நீசம் பெற்ற கிரகம் இணைந்திருப்பது நீச பங்க ராஜயோக அமைப்பை தரும். இந்த யோகம் பெற்றவர்களுக்கு திடீர் அரசாளும் யோகம் தேடி வரும்.

அரசன் போல வாழ்க்கை
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 2 9 11 ம் வீட்டு அதிபதிகள் அவர்களது சொந்த வீட்டிலேயே ஆட்சியாய் அமர்ந்திருப்பது மால் யோகம் எனப்படுகின்ற விஷ்ணு யோகமாகும் . இந்த விஷ்ணு யோகம் அந்த ஜாதகருக்கு புகழ் கெளரவம் வீரம் ஆகியவற்றை கொடுத்து அவனை அரசனுக்கு நிகரான அந்தஸ்தில் வாழ வைக்கும் . இந்த யோகம் அந்த ஜாதகனுடைய 36 வயது முதல் 44 வயது வரை அதாவது 8 வருடங்கள் இந்த ராஜ யோக பலனை அனுபவிப்பதற்காகும் .

மரியாதை தரும் யோகம்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு இருபுறமும் வரிசையாக கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில் உயர்ந்து சமூக அந்தஸ்துடன் மாலை மரியாதையோடு வாழக்கூடிய சந்தர்ப்பங்களை இந்த யோகம் தரும். உங்கள் ஜாதகத்தில் யாருக்காவது இந்த யோகம் இருக்கிறதா? அப்போ அரசியலில் குதிக்க தயாராகுங்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications