அதிசார குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா
குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சியாகிறார். இந்த அதிசார குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகம் கிடைக்கும் என்று ப
சென்னை: நவ கிரகங்களின் குரு பகவான் பொன்னையும் பொருளையும் அள்ளித்தருபவர். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் சரியான இடத்தில் அமர்ந்திருந்தால் அவருக்கு ஏதாவது ஒரு நேரத்தில் கோடீஸ்வர யோகம் தேடி வரும். தசாபுத்தியும் சரியாக இருந்து கோச்சார ரீதியாக கிரகங்களும் சாதகமான நிலையில் சஞ்சரித்தால் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் யோகத்தை தருவார் குருபகவான். குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும் என்றும் இதனால்தான் சொல்கின்றனர். குரு பகவான் மகர ராசியில் இருந்து அதிசாரமாக கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். குருபகவானின் சஞ்சார பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் தேடி வரப்போகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம்.
குரு பகவான் தன காரகன். குருபகவான் கோச்சார ரீதியாக நன்றாக இருந்தால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.குரு பலன் இருந்தால் ஒருவருக்கு திருமண யோகம், புத்திரபாக்கியம் கிடைக்கும்.தசாபுத்திகள் நன்றாக இருந்தால் சுய ஜாதகத்திலும் கிரகங்களும் நன்றாக இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். செய்யும் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
குரு பகவான் தற்போது மகர ராசியில் சனிபகவானுடன் இணைந்து சங்சரிக்கிறார். பங்குனி 23ஆம் தேதி அதாவது ஏப்ரல் 5ஆம் தேதி நள்ளிரவில் அதிசாரமாக கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். செப்டம்பர் 15ஆம் தேதி வரை கும்ப ராசியில் அமர்ந்து பலன்களைத் தருவார் குருபகவான். 162 நாட்கள் அதிசாரமாக பயணிப்பதால் மேஷம், மிதுனம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு திடீர் ராஜயோகமும் கோடீஸ்வர யோகமும் தேடி வரப்போகிறது எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்
ராசி மண்டலத்தில் முதல் ராசி மேஷம். பத்தில் குரு இருந்து பாடாக படுத்தியிருக்கும் வேலையில் பிரச்சினை ஏற்பட்டு இந்த வேலையை விட்டு போய்விடலாமா என்று கூட யோசித்துக்கொண்டிருப்பீர்கள். உங்களின் கஷ்டத்திற்கு விடிவுகாலம் வந்து விட்டது.
மேஷ ராசி மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் தன காரகன் குரு பகவான் பயணம் செய்வதால் இனி அதிர்ஷ்டகரமான காலம்தான். மேஷ ராசி, மேஷ லக்னகாரர்களுக்கு குரு பகவான் பாக்யாதிபதி, மோட்ச விரைய ஸ்தான அதிபதி. அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செய்யும் முதலீடுகளுக்கு நிறைய லாபத்தை அள்ளிக்கொடுப்பார் குரு பகவான். தொடங்கும் புதிய தொழில் விருத்தியடையும். திடீர் யோகம் தேடி வரும். கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும் யோகம் கை கூடி வரப்போகிறது.

மிதுனம்
மிதுன ராசி மிதுன லக்னங்களில் பிறந்தவர்களுக்கு ஆனந்தம் ஆனந்தம் என்று பாடப்போகிறீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் சனியும் குருவும் சஞ்சரித்ததால் குடும்ப பிரச்சினை, வேலையில் பிரச்சினைகள் சந்தித்து வந்தீர்கள். இனி ஒன்பதாம் வீட்டிற்கு செல்லப்போகும் அதிசார குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆனந்தமும் அதிர்ஷ்டமும் நிறைந்த காலமாக அமையப்போகிறது. பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகளும் பாக்யங்களும் தேடி வரப்போகிறது. திருமண யோகம் கைகூடி வரும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். திடீர் பண வரவு வந்து உங்களை திக்குமுக்காட வைக்கும்.

மகரம்
இந்த அதிசார குரு பெயர்ச்சி மகர ராசி மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும் யோகத்தை தரப்போகிறார். ஜென்ம ராசியில் சஞ்சரித்த குரு பகவான் இரண்டாம் வீடான குடும்ப, வாக்கு, தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். தன ஸ்தானத்தில் தன காரகன் குருபகவான் அதிசாரமாக செல்லும் போது திடீர் பண வரவு அதிகரிக்கும். பிரம்மாண்டமான யோகத்தை தரப்போகிறார் குரு பகவான். பங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு நல்ல லாபம் உண்டும். வேலை செய்யும் இடத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசி கால புருஷ தத்துவத்தின்படி 11வது ராசி. கும்ப ராசியில்தான் ஜென்மகுருவாக அமரப்போகிறார் குருபகவான். கும்ப குரு வளைய குரு. ராஜயோகத்தை தரப்போகிறார். குருவின் சஞ்சாரத்தினால் கும்பம் ராசி கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு முதல்தரமான கோடீஸ்வர யோகம் தேடி வரும். செய்யும் தொழில் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். லாட்டரி சீட்டு வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். திடீர் கோடீஸ்வரர் ஆகும் யோகம் தேடி வரும். இந்த அதிசார குரு பெயர்ச்சியால் சாதாரணமானவர்கள் கூட திடீர் கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை குருபகவான் கொடுப்பார். குரு பலன் குரு பார்வை கிடைத்தால் பொன்னான யோகம் தேடி வரும். உங்கள் ஜாதகத்திலும் கிரகங்கள் சாதகமாக இருந்து தசாபுத்தியும் சரியாக இருந்தால் குரு பகவான் கோடீஸ்வர யோகத்தை நிச்சயம் கொடுப்பார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications