Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் 2019: கடகம், சிம்மம், கன்னிக்கு வருமானம் கொட்டப்போகுது

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. கடகத்திற்கு அற்புதமான மாதம். ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கிரகங்கள் கடக ராசியில் கூட்டணி அமைத்திருக்கின்றன. மிதுனம் ராசியில் ராகு, புதன், சந்திரன் கடகத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்திரன் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 17ஆம் தேதி சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில் செவ்வாய் உடன் இணைகிறார். விருச்சிகத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். தனுசு ராசியில் சனி, கேது இணைந்திருக்கின்றனர். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் ஆடி, ஆவணி இரண்டு மாதங்களும் பாதி பாதி உள்ளன. ஆடி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். ஆடிப்பூரம், அம்மன் தவசு என பல விழாக்கள் உள்ளன. ஆவணியில் ஞாயிறு விஷேசம், ராசிக்கட்டங்களில் ராகு, கேது, சனி, குரு கிரகங்கள் மாற்றமின்றி அதே இடத்தில் இருந்தாலும் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்களின் நகர்வைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

ஆகஸ்ட் மாதத்தில் பணவருமானம் யாருக்கு அதிகரிக்கும், புதிய வேலை கிடைக்குமா, திருமணம் முயற்சி கைகூடி வருமா பிள்ளை பேறு கிடைக்குமா என்று பல ராசிக்காரர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆகஸ்ட்டில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

கடகத்திற்கு குபேர யோகம்

கடகத்திற்கு குபேர யோகம்

ஆகஸ்ட் மாதம் பிறப்பதே கடகம் ராசி பூசம் நட்சத்திரத்தில்தான். மாதத்தின் முதல் நாளில் ராசியில் சூரியன், சந்திரன், சுக்கிரன் செவ்வாய், 12ஆம் வீட்டில் புதன், ராகு, பஞ்சம ஸ்தானத்தில் குரு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. வியாழக்கிழமை குபேரனுக்கு பிடித்த நாள், நட்சத்திரம் என அனைத்துமே கடக ராசிக்கு அற்புதமாக உள்ளது. பொருளாதார உயர்வு காத்திருக்கிறது. ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வசீகரத்தோற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

நன்மைகள் நடைபெறும் காலம்

நன்மைகள் நடைபெறும் காலம்

ஆகஸ்ட் 3ஆம் தேதி புதனின் இடப்பெயர்ச்சி ராசிக்கு வருவதால் அற்புதமான அமைப்பு, உயர்கல்வி யோகம் காத்திருக்கிறது. மாணவர்கள் நினைத்த கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும். ஆகஸ்ட் 9 தன ஸ்தானத்திற்கு செவ்வாய் நகர்வதால் கட்டிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் காலம். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும்.

திருமணம், குழந்தை பாக்கியம்

திருமணம், குழந்தை பாக்கியம்

17ஆம் தேதிக்கு மேல் தன ஸ்தானத்திற்கு சூரியன், சுக்கிரன் நகர்வதால் பேச்சில் வசீகரம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் சம்பாதிப்பீர்கள். ஐடி துறையில் உள்ளவர்களுக்கு அற்புதமான நேரம். பெண்களுக்கு நல்ல மாதம் கனவுகள் நனவாகும். கல்யாண கனவுகள் பூர்த்தியாகும். மனம் விரும்பிய காதலருடன் மணவாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாராத்தில் சிறந்த வளர்ச்சியும் நல்ல எதிர்காலமும் அமையும். பெண்களுக்கு வயதானவர்களின் ஆதரவு கிடைக்கும். மணமகிழ்யோடு இருப்பீர்கள்.

நோய்கள் தீரும்

நோய்கள் தீரும்

ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. லாப ஸ்தானத்தில் ராகு புதன், நான்காம் வீட்டில் குரு ஐந்தாம் வீட்டில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. செவ்வாய் ஒன்பதாம் தேதி இடப்பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு வருகிறார். 17ஆம் தேதி சூரியன், சுக்கிரன் இடப்பெயர்ச்சி அடைந்து ராசிக்கு வருகின்றனர். மாத துவக்கத்தில் 12ல் சந்திரன் இருப்பதால் நிறைய செலவு வரும் சுப செலவு வரும்

ஒளிமயமான எதிர்காலம்

ஒளிமயமான எதிர்காலம்

ராசிக்குள் செவ்வாய் வரும் நேரத்தில் நோய்கள் தீரும். சகோதரர்களுடன் இருந்த மன உளைச்சலை தீரும். சிம்ம செவ்வாய் வரும் போது வீடு மனை நிலம் வாங்கும் யோகம் வரும் நோய் நொடிகள் விலகும். எதிரிகள் சமாதானம் பேச வருவார்கள். 17ஆம் தேதிக்கு மேல் ஒளிமயமான எதிர்காலம் வரப்போகிறது. சுக்கிரன் சூரியன் உங்க ராசிக்கு வருவதால் மிகச்சிறந்த வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்து வீர்கள்.

அற்புதங்கள் நிகழும் மாதம்

அற்புதங்கள் நிகழும் மாதம்


20ஆம் தேதிக்கு மேல் ராசியில் 4 கிரகங்கள் இணைவது அற்புதம். மாணவர்களுக்கு பிரபல பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும். கலகலப்பாக பேசுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான மாற்றம் வரப்போகிறது. உற்சாகம் அதிகரிக்கும். 5ல் சனி கேது இருப்பதால் திருமண வாழ்க்கைத் துணைவரை தேர்வு செய்வதில் கவனம், குழந்தைகள் மீது ஒரு கண் வையுங்கள். குருவினால் பொருளாதார வளர்ச்சி வரும்.

வெற்றிகரமான மாதம்

வெற்றிகரமான மாதம்

ஆகஸ்ட் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இருக்கின்றன. மாத முற்பகுதியில் வெற்றிகரமான நாட்களாக அமையும். புதன் பத்தில் இருக்கிறார். சனி கேது நான்கில் சஞ்சரிக்கின்றனர். கரும ஸ்தானத்தில் உள்ள புதன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். மாத பிற்பகுதியில் 12ஆம் இடம் வலுத்திருக்கும் மாதம்.

வண்டி வாகனம் வாங்குவீர்கள்

வண்டி வாகனம் வாங்குவீர்கள்

புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசனுடன் கூடிய இடம்மாற்றம் அமையும். மாணவர்களுக்கு திறமைகள் உருவாகும். பெண்களுக்கு நல்ல மாதம் மூத்த குடிமக்களுக்கு உதவி கிடைக்கும் முன்னேற்றகரமான மாதம். 17ஆம் தேதி வரை லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமைவதால் சிலர் வண்டி வாகனம் வாங்குவீர்கள். விரைய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இணைவதால் நன்மைகள் நடைபெறும்.

திருமணம் கைகூடும்

திருமணம் கைகூடும்


20ஆம் தேதிக்கு மேல் வெளிநாட்டு யோகம் வரும். காரணம் 12ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வெற்றிகரமான வியாபாரம் அமையும் திருமண விசயங்கள் கை கூடி வரும். புதிதாக பழகும் மனிதர்களிடம் கவனம் தேவை இல்லாவிட்டால் பணமோ, விலை உயர்ந்த பொருளோ திருட்டு தர வேண்டியிருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+