Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் 2019: இந்த மூணு ராசிக்காரங்களுக்கும் அற்புதம்

கடக மாதமும் சிம்ம மாதமும் இணைந்தது ஆகஸ்ட் மாதம். சூரியனின் பயணம் கடகம், சிம்ம ராசிகளில் இருக்கும். இந்த மாதத்தில் சிம்மராசி வலுவடைகிறது. கிரகங்களின் கூட்டணி சிம்மராசியில் அமர்ந்திருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கிரகங்கள் கடக ராசியில் கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. மிதுனம் ராசியில் ராகு, புதன், சந்திரன் கடகத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்திரன் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 17ஆம் தேதி சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில் செவ்வாய் உடன் இணைகிறார். விருச்சிகத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். தனுசு ராசியில் சனி, கேது இணைந்திருக்கின்றனர். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் ஆடி, ஆவணி இரண்டு மாதங்களும் பாதி பாதி உள்ளன. இந்த மாதத்தில் பணவருமானம் யாருக்கு அதிகரிக்கும், புதிய வேலை கிடைக்குமா, திருமணம் முயற்சி கைகூடி வருமா பிள்ளை பேறு கிடைக்குமா என்று பல ராசிக்காரர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆடி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். ஆடிப்பூரம், அம்மன் தவசு என பல விழாக்கள் உள்ளன. ஆவணியில் ஞாயிறு விஷேசம், ராகு, கேது, சனி, குரு கிரங்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்களின் நகர்வைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். ஆகஸ்ட்டில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷத்திற்கு அதிர்ஷ்டம்

மேஷத்திற்கு அதிர்ஷ்டம்

ஆகஸ்ட் மாதம் மேஷ ராசிக்கு அதிர்ஷ்டமான மாதம் இந்த மாத துவக்கமே ராஜயோகத்தோடு தொடங்குகிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மாத முற்பகுதியில் நான்காம் வீட்டில் கிரகங்களின் கூட்டணியால் வலுவடைந்துள்ளது. மாத பிற்பகுதியில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என ஐந்தாம் வீடு வலுத்துள்ளது. ராசி அதிபதி செவ்வாய் நீசமாக இருக்கிறார். இதனால் தடைகள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றனர். 9ஆம் தேதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செவ்வாய் நகர்வதால் நன்மைகள் நடைபெறும்.

காதலில் வெற்றி கிடைக்கும்

காதலில் வெற்றி கிடைக்கும்

17ஆம் தேதிக்கு மேல் திருமண தடைகள் விலகும். நான்காம் வீட்டில் செவ்வாய் சூரியன் சேர்க்கையால் சில பிரச்சினைகள் இருந்தன. இரண்டும் இடப்பெயர்ச்சி அடைந்து ஐந்தாம் வீட்டிற்கு நகர்வதால் நோய்கள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் பெரும். மனதில் நினைத்த நபரை காதல் வெற்றி பெற்று மனதிற்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்வார்கள். பெண்களுக்கு திருமண யோகம் வந்துவிட்டது. விசா பிரச்சினைகள் தீரும் காலம் வந்து விட்டது, மலைமேல் இருக்கும் முருகனை வழிபடுங்கள். விநாயகரை வணங்குங்கள் தடைகள் நீங்கும். கால்வலி, கண் பிரச்சினைகள் சரியாக விநாயகரை வழிபடுங்கள்.

ரிஷபத்திற்கு அற்புதம்

ரிஷபத்திற்கு அற்புதம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான மாதம் குருவினால் பண தடைகள் நீங்கும் அதே நேரம் சனி கேது சஞ்சாரத்தினால் செலவுகள் அதிகம் வரும் அதற்கேற்ப பணவருமானம் கிடைக்கும். பெண்களுக்கு உயர்வான மாதம். குருவின் பார்வை ராசி மீது விழுவதால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கார் டிரைவிங் கற்றுக்கொள்விர்கள்.

வெற்றிகள் தேடி வரும்

வெற்றிகள் தேடி வரும்

சூரியன், சுக்கிரன் ஒன்றாக இணைந்து நான்காம் வீட்டில் இணையும் போது ராஜயோக காலமாகும் பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதன் சுக்கிரன் சூரியன் செவ்வாய் குருவிற்கு பத்தாம் வீட்டில் நான்கு கோள்கள் சந்திப்பது யோகம். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் வரும். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

மாணவர்களுக்கு அருமை

மாணவர்களுக்கு அருமை

வெளிநாட்டு வேலை வாய்ப்பில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். மாத பிற்பகுதியில் சிலர் வீடு வாங்குவீர்கள். நிலம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். அருமையான மாதம் வெற்றிகள் தேடி வரும். உயர்கல்வி யோகம் கூடி வரும். ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகச்சிறப்பான மாதமாக அமைகிறது.

பொற்காலம்

பொற்காலம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பொற்காலம். இரண்டாம் வீட்டில் கோள்கள் இருப்பதால் அலுவலகத்திலும் குடும்பத்திலும் கோபத்தை தவிர்க்க வேண்டும். செவ்வாய் சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் வீடு வாங்க ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். பழைய வீட்டை விற்பீர்கள். இளைய சகோதரர் சகோதரியுடன் உறவை புதுப்பித்துக்கொள்வீர்கள். வருமானம் இந்த மாதம் மனநிறைவை தரும். பேர் புகழ் ஏற்படும். குடும்ப வாழ்க்கையிலும் உடல் நலத்திலும் அக்கறை தேவை.

பயணங்களினால் வெற்றி

பயணங்களினால் வெற்றி

சுக்கிரன் 3ஆம் வீட்டிற்கு இட மாற்றமடைவதால் நல்ல நேரம் வருகிறது. வேலை செய்பவர்களுக்கு ராசியான மாதம். சூரியன் 17ஆம் தேதி இடம் மாறுவதால் பெண்களுக்கு நல்ல மாதம். மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். சிறு பயணங்கள் மிகப்பெரிய வெற்றியை தரும். கோபப்பட வேண்டாம். நிறைய முதலீடு செய்வீர்கள். பெண்களுக்கு அற்புதமான மாதம் பேச்சிற்கு மதிப்பு கூடும். சிலருக்கு நரம்பு பிரச்சினை ஞாபக மறதி ஏற்படும். பணம் திருடு போகலாம் கவனம். அவசரப்பட வேண்டாம். உணவுக்கட்டுப்பாடு அவசியம். பெருமாளை புதன்கிழமை வணங்கலாம். பச்சைப்பயறு தானம் செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+