ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் 2019: துலாம், விருச்சிகம், தனுசுக்கு யோகம் தேடி வருது
கடக மாதமும் சிம்ம மாதமும் இணைந்தது ஆகஸ்ட் மாதம். சூரியனின் பயணம் கடகம், சிம்ம ராசிகளில் இருக்கும்.
மதுரை: ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. கடகத்திற்கு அற்புதமான மாதம். ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கிரகங்கள் கடக ராசியில் கூட்டணி அமைத்திருக்கின்றன. மிதுனம் ராசியில் ராகு, புதன், சந்திரன் கடகத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்திரன் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 17ஆம் தேதி சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில் செவ்வாய் உடன் இணைகிறார். விருச்சிகத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். தனுசு ராசியில் சனி, கேது இணைந்திருக்கின்றனர். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் ஆடி, ஆவணி இரண்டு மாதங்களும் பாதி பாதி உள்ளன. ஆடி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். ஆடிப்பூரம், அம்மன் தவசு என பல விழாக்கள் உள்ளன. ஆவணியில் ஞாயிறு விஷேசம், ராசிக்கட்டங்களில் ராகு, கேது, சனி, குரு கிரகங்கள் மாற்றமின்றி அதே இடத்தில் இருந்தாலும் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்களின் நகர்வைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
ஆகஸ்ட் மாதத்தில் பணவருமானம் யாருக்கு அதிகரிக்கும், புதிய வேலை கிடைக்குமா, திருமணம் முயற்சி கைகூடி வருமா பிள்ளை பேறு கிடைக்குமா என்று பல ராசிக்காரர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆகஸ்ட்டில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

குரு பார்வையால் நன்மை
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரமாதமான மாதம். கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. அஸ்திவாரம் மிகச்சிறப்பாக இருக்கும் மாதம். தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் உடன் இணைந்திருக்கிறார். இரண்டாம் வீட்டில் உள்ள குரு வக்ர நிவர்த்தி அடைவது பணவருமானம் அதிகரிக்கும். குரு சுபமான திருப்பங்களைத் தருவார். ராசிக்கு பத்தாம் வீட்டில் கோள்கள் அற்புதமாக இணைந்திருக்கின்றன. குருவின் பார்வை அந்த கோள்களின் மீது விழுகிறது. சாதகமான திருப்பங்களைத் தரும். புதன் மாத துவக்கத்தில் ஒன்பதாம் வீட்டிலும் பின்னர் பத்தாம் வீட்டிற்கும் நகர்கிறார்.
ராசி அதிபதியின் சஞ்சாரம் வெற்றிகளை கொடுக்கப்போகிறது. 17ஆம் தேதிக்கு மேல் சிம்மத்திற்கு செல்லும் சுக்கிரன் வெற்றியை தேடித்தரும்.

திருமண யோகம் குழந்தை பாக்கியம்
ஒன்பதாம் தேதி செவ்வாய் சிம்மத்திற்கு நகர்கிறார். 17ஆம் தேதி சூரியன் தனது ராசியில் ஆட்சி பெற்று அமர்வது நன்மையான காலம். பெண்களுக்கு திருமண வரம் அமையும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிறப்பான காலம் இது. மாணவர்களுக்கு புதன் நகர்வினால் கல்வியில் வெற்றிகரமான பயணமாக அமையும். மருத்துவக்கல்வி பயிலும் யோகம் கூடி வருகிறது. வருமானம் கூடும் வேலையில் புதிய டிரான்ஸ்பர் கிடைக்கும். வீடு வாகனம் வாங்குவீர்கள். சொத்துக்கள் வாங்குவீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்றமான மாதம். வெளிநாடு யோகம் உண்டு. வெளிநாட்டில் செட்டிலாகும் யோகம் கூடி வருகிறது. வியாபாரிகளுக்கு வர்த்தக ரீதியான ஒப்பந்தங்கள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமையால் ரொமான்ஸ் அதிகரிக்கும். மூத்த குடிமக்களுக்கு மருத்துவ உதவி தேடி வரும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

யோகமான மாதம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் தரக்கூடிய மாதம். பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன், சுக்கிரன் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் வக்ரமடைந்திருந்த குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குரு 12ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். ராசி நாதன் செவ்வாய் மாத முற்பகுதியில் சூரியன், சுக்கிரன், புதன் உடன் ஒன்பதாம் வீட்டில் இணைந்திருப்பது சந்தோசமான விசயம். பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் முன்னேற்றத்தைத் தரும். செவ்வாய் நீச பங்கமாக இருக்கிறார். தோல்விகள் காணாமல் போகும் வெற்றியை தேடித்தரும். செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்திருக்கும் அமைப்பு சிறப்பானது. தர்மகர்மாதி யோகத்தை தரப்போகிறது. சர்வ வல்லமையோடு திகழப்போகிறீர்கள்.

பிரச்சினைக்கு விடிவு வரும்
ஆகஸ்ட் 17ஆம் சூரியன் பத்தாம் வீட்டில் இருப்பதால் வேலையில் முக்கிய திருப்பங்கள் நடைபெறும். சுக்கிரனும் 17ஆம் தேதி பத்தாம் வீட்டிற்கு வருவதால் சுகமான செயல்கள் நடைபெறும் வீடு சொத்து வாங்குவீர்கள். ஏழரை சனி பிடியில் இருந்தவர்களுக்கு பாதிப்புகள் குறையும். மனதில் தைரியம் கூடும். பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கப்போகிறது. தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனியும் கேதுவும் சஞ்சரிப்பதால் எச்சரிக்கை தேவை. யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். நெகடிவ் ஆக பேச வேண்டாம். துன்பம் வருதே என்று நினைக்காதீர்கள் துன்பங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காத்திருக்கிறது. மூத்த குடிமக்களுக்கு மிகச்சிறந்த மாதம்.

வண்டி வாகனத்தில் கவனம் தேவை
ஆகஸ்ட் மாதம் துன்பங்கள் தீரும் மாதம். ராசிக்கு எட்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் சேர்ந்திருக்கின்றன. ஜென்ம சனி, விரைய குருவினால் படாத பட்டுக்கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு கேதுவின் பிடியில் கிரகங்கள் சிக்கியிருக்கின்றன. ராசி நாதன் வக்ர நிவர்த்தி அடைந்து உங்க ராசியை நெருங்கப்போகிறார். சனி உடன் கேது கூடவே இருந்தாலும் குருவின் சஞ்சாரத்தினால் பிரச்சினைகளை தாக்கு பிடிக்கும் சக்தியை தரும். மாத முற்பகுதியில் எட்டாம் வீட்டில் சந்திரன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் இணைந்து இடையூறுகளைத் தரும் காலம். ஏழாம் வீட்டில் புதன் ராகு உடன் இணைந்திருப்பதால் அச்சம் கூடும். ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு மேல் பிரச்சினைகள் தீரும். காரணம் செவ்வாய் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வது நன்மையை தரும்.

தனுசுக்கு பிரச்சினைகள் தீரும்
மாத பிற்பகுதியில் ஒன்பதாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைகின்றன. சூரியன் 17ஆம் தேதி சுக்கிரன் பத்தாம் தேதி செவ்வாய், மாத இறுதியில் புதன் என கிரகங்களின் கூட்டணியால் ஒன்பதாம் இடம் வலுவடைகிறது. மாத முற்பகுதியில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் தடை ஏற்படும். புதன் கிரகத்தின் இடப்பெயர்ச்சியால் மாத இறுதியில் படிப்பில் இருந்த மந்தநிலை மாறும். முன்னேற்றம் ஏற்படும். கண்ணீர் மாறும் கவலைகள் மாறும். மனதிற்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். தொழிலில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் மாத பிற்பகுதியில் முதலீடு செய்யுங்கள்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications