ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: மேஷ ராசிக்கு பூர்வ புண்ணிய யோகம் தேடி வரும்
மேஷ ராசிக்காரர்களே, உங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் விடியல் வந்து விட்டது. வாழ்க்கையில் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள்.
சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதங்களும் யோகங்களும் கிடைக்கப் போகிறது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நல்ல பதவி கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். ராசியில் சந்திரன் அமர்ந்து மாதம் தொடங்குகிறது. ராசிநாதன் செவ்வாயின் பயணமும் பார்வையும் பலமாக உள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் கடகம், சிம்மம் ராசிகளில் பயணம் செய்கிறார். சுக்கிரன் சிம்மத்தில் செவ்வாயுடன் பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் நீசமடைகிறார். புதன் சிம்மராசி, கன்னி ராசி என பயணம் செய்கிறார். ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் சனிபகவான் மகர ராசியிலும், கும்ப ராசியில் குரு பகவானும் பயணம் செய்கின்றனர்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும் சுப செய்திகள் தேடி வரும். பிள்ளைகள் விசயத்தில் ,தடைகள் உடைபடும். பிள்ளைகள் உயர்கல்விக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். தன லாபம் வரும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

பண வரவு வரும்
நினைத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். உயர் பதவி தேடி வரும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். முன்னேற்றம் ஏற்படும். வங்கி கடன் உதவி கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். செவ்வாய் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணிப்பதால் குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். சக்தியின் அருள் உங்கள் ராசிக்கு கிடைக்கும். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வீர்கள்.

பூர்வ புண்ணிய யோகம்
ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சூரியன் ஆட்சி பெற்று சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இதன் மூலம் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீடு வலிமையடைகிறது. ஐந்தாம் வீட்டில் செவ்வாய், சூரியன் இணைந்திருக்க அந்த கிரகங்களின் மீது குருவின் பார்வையும் விழுகிறது இதன்மூலம் பிள்ளகைளால் சுப செய்திகள் தேடி வரும்.

உயர் கல்வி யோகம்
வேலையில் சிறப்பான முன்னேற்றமும் வெற்றியும் ஏற்படும். செவ்வாயின் பார்வை பலமாக உள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் நினைத்த காரியம் நினைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதனும் சூரியன், செவ்வாய், புதனுடன் இணைந்து பயணிக்கும் போது மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். இரண்டாம் வீட்டில் உள்ள ராகு உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்களை கொடுத்தாலும் ஏழுக்குடைய சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்திருப்பதால் திருமண பேச்சுவார்த்தைகள் தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும். வீடு வாங்க முயற்சி செய்யலாம். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும்.

சுப செலவுகள்
கடன் பிரச்சினைகள் வரலாம். தொழில் வேலை விசயமாக வங்கிக் கடன் வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். லாப குருவினால் பணம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். சுப செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் விழுவதால் திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

குல தெய்வ வழிபாடு
கன்னி ராசியில் சுக்கிரன் பயணம் செய்யும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாத இறுதியில் புதன் உச்சமடைந்து சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காரணம் சுக்கிரனும் நீச்சபங்கமடைந்து பயணம் செய்வார். இந்த மாதம் காரைக்குடி நகரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ கொப்புடையம்மனை வழிபட நன்மைகள் நடைபெறும். குல தெய்வ அனுகூலம் கூடி வந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications