Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022.. இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் நிச்சயம்..கவனமாக இருக்க வேண்டியது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் மாதம் பலருக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைகிறது. ஆகஸ்ட் மாதத்தில் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Recommended Video

    Horoscope| இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 04, 2022

    ஆகஸ்ட் மாதம் சூரியன் கடக ராசியில் பாதி நாட்களும், சிம்ம ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். இந்த சூரியனுடன் கூடவே புதன் பயணக்கிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் மேஷத்தில் ராகு, மிதுனத்தில் சுக்கிரன், சூரியன் சிம்மத்தில் புதன், துலாம் ராசியில் கேது மகரம் ராசியில் சனி, மீனம் ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

    ஆகஸ்ட்7ஆம் தேதி கடகத்திற்கு சுக்கிரன் இடப்பெயர்ச்சி அடைகிறார். 10ஆம் தேதி செவ்வாய் ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஆகஸ்ட் 16ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து உச்சம் பெற்று அமரப்போகிறார். 12 ராசிகளில் நவ கிரகங்களின் சஞ்சாரம் கிரகங்களின் ராசி மாற்றத்தினால் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்ம ராசிகளில் பிறந்தவர்களுக்குப் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

    ரிஷபம்

    ரிஷபம்

    சுக்கிரன் சாதகமாக உள்ளதால் நிறைய பண வரவு வரும். வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று பார்க்கலாம். சுக்கிரன் 7ஆம் தேதியன்று கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி சூரியன் உடன் இணைகிறார். சுக்கிரன் மீது வக்ரம் அடைந்த சனியின் பார்வை விழுகிறது. பலம் அதிகரிக்கும். புதிய வேலை தொடர்பாக முயற்சி செய்யலாம். செவ்வாய் 12ஆம் வீட்டில் இருந்து உங்கள் ராசிக்கு 10ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். வேலையில் மாற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். உங்களின் தசாபுத்தியும் சாதகமாக இருந்தால் வெற்றிகள் தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று புதன் உச்சம் பெற்று அமர்கிறார். தாய்மாமன் உறவு வகையில் நன்மைகள் நடைபெறும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். உச்சம் பெற்ற புதனால் மன தைரியம் அதிகமாகும். தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். புது வீட்டிற்கு மாறலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்.

    மிதுனம்

    மிதுனம்

    சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். மனதில் ஏதோ இனப்புரியாத பிரச்சினைகள் இருந்தாலும் அது நீங்கி மகிழ்ச்சி தங்கும். வார மத்தியில் கிரகங்களின் இடமாற்றமும் சாதகமாகவே உள்ளது. சூரியன், சுக்கிரன், புதன் இடமாற்றத்தினால் மனதில் உற்சாகம் பிறக்கும் வாழ்த்து மழையில் நனைவீர்கள். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். அஷ்டமத்து சனி வக்ரமடைந்து பயணம் செய்கிறார். தடைகளைத் தாண்டி முன்னேற்றம் உண்டாகும். உங்களின் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் திடீர் முடிவுகள் எடுக்காதீர்கள். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வாகன பயணங்களில் நிதானம் தேவை. முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. திருமண சுபகாரியம் தொடர்பாக இந்த மாதம் பேச வேண்டாம்.

    கடகம்

    கடகம்

    கடக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் சந்திரனின் பயணம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. வேலையில் புதிய முடிவுகள் எடுக்கலாம். செவ்வாய் சாதகமாக இருக்கிறார். சுப விரைய செலவுகள் உண்டாகும். செவ்வாய், சுக்கிரன் இடப்பெயர்ச்சி அடைவதால் வேலை விஷயத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சுபமான மாதமாக அமைந்துள்ளது. குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். திருமண வரன் தொடர்பாக பேசலாம். சனிபகவான் ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் சுப காரியங்கள் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு இது சிறப்பான மாதம். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நான்காம் வீட்டில் கேது பயணம் செய்ய அந்த இடத்தில் சனியின் பார்வை விழுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. கண்களில் எரிச்சல் அதிகரிக்கும். காய்ச்சல் சளி தொந்தரவுகள் வந்து நீங்கும்.

    சிம்மம்

    சிம்மம்

    சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே...உங்கள் ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. வேலையில் சின்னச் சின்ன டென்ஷன்கள் இருந்தாலும் அமைதியாக இருக்கும் வேலையை கவனமாக செய்வது நல்லது. உங்கள் ராசிநாதன் 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக்கிரனும் 12ஆம் வீட்டில் பயணம் செய்வதால் இந்த மாதம் வேலையில் மாற்றம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும். ஏதாவது பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவி இடையே தொட்டதற்கெல்லாம் கோபம் வரும். அஷ்டமத்து குருவால் அமைதியாக இருப்பதே நல்லது. திருமண சுப காரியம் தொடர்பாக இந்த மாதம் பேச வேண்டாம். பொருளாதார சூழ்நிலையும் சுமாராகவே உள்ளது. வண்டி வாகனங்களில் போகும் போதும் நிதானமாக செல்வது நல்லது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது பாதிப்புகளைக் குறைத்து நன்மையைத் தரும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+