ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023.. 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடைமழையாக பொழியும்.. யாரெல்லாம் கவனம்
சென்னை: ஆகஸ்ட் மாதம் அடைமழைக்காலம் தொடங்கிவிடும். ஆடியும் ஆவணியும் பாதி பாதி நாட்கள் இணைந்த மாதம். சூரியன் கடகம் ராசியில் பாதி நாட்களும், சிம்ம ராசியில் பாதி நாட்களும் பயணம் செய்வார் கூடவே புதன் பயணிக்கிறார். மேஷத்தில் ராகு, குரு, சிம்மத்தில் சுக்கிரன், சூரியன், புதன், துலாம் ராசியில் கேது கும்பம் ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் பயணத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: வீரமும் விவேகமும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, எத்தனை தடைகள் வந்தாலும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டுதான் மறுவேலை செய்வீர்கள். திருமணமான தம்பதியினருக்கு நல்ல செய்தி தேடி வரும். புத்திர பாக்கியம் தேடி வரும் என்றாலும் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம். உங்க பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானம், பாக்ய ஸ்தானம் இந்த மாதம் நன்றாக இருக்கிறது. குருவின் பார்வை உங்களுடைய ராசியில் இருந்து பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதனால் உங்களுக்கு இந்த மாதம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள சனி வக்ரமடைந்திருப்பதால் தொழில் ரீதியாக சில நன்மைகள் நடைபெறும். இதுநாள் வரை இழுபறியாக தடைபட்டு வந்த காரியங்கள் கைகூடி வரும். தடைகளை தாண்டி முன்னேற்றம் வரும். மாத பிற்பகுதியில் சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். முக்கிய அரச கிரகங்கள் ஆட்சி பெற்றுள்ளன. வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பண வருமானம் நன்றாக இருக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல செய்தி தேடி வரும். தொழில் முதலீடுகளை தைரியமாக செய்யலாம். குடும்பத்தில் உங்களுக்கு நல்ல விசயங்கள் நடைபெறும். மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த மாதமாக ஆகஸ்ட் மாதம் அமைந்துள்ளது.

ரிஷபம் : சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பத்தாம் வீட்டில் வக்ரமடைந்துள்ளதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புது வேலைக்கு மாற முயற்சி செய்யாதீர்கள். சுக்கிரன், புதன், சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்வதால் பதவி அதிகாரம் தேடி வரும். நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் சாதகமாக இருந்தாலும் ராசி நாதன் சுக்கிரன் வக்ரமடைகிறார். இதனால் உங்களுக்கு டென்சன் அதிகமாகும். திருமணம் சுப காரியத்திற்காக பேசி முடிக்கலாம் என்றாலும் தடைகளை தாண்டி வெற்றிகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் சிக்கலை ஏற்படுத்தும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான மாதம். வெளியூர், வெளிநாடு சென்று படிக்கலாம். குடும்பத்தில் இருந்த சிக்கல்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தேவையற்ற விசயங்களில் தலையிடாதீர்கள். மன நிம்மதிக்காக வெள்ளிக்கிழமை தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
மிதுனம்: ஆகஸ்ட் மாதத்தில் குடும்பத்தில் உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் என்னதான் பிரச்சினை இருந்தாலும் குரு பார்வை உங்களுடைய குடும்ப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் நிறைய நல்லது நடக்கும், தொழில் வியாபாரத்தில் உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சனி வக்ரமடைந்து பயணம் செய்வதால் திடீர் தடைகள் ஏற்படலாம். வேலையில் கவனமாக இருப்பது நல்லது. புதிய வேலை மாறவோ, பிசினஸ் புதிதாக ஆரம்பிக்கவோ இது சரியான நேரமில்லை. சுக்கிரன் வக்ரமடைந்து குடும்ப ஸ்தானத்திற்கு வரப்போவதால் திருமணம் சுப காரிய முயற்சிகள் பேச வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சரியான நேரத்திற்கு சரியாக சாப்பிடுவது அவசியம். வயிறு பிரச்சினைகள் வரலாம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது அவசியம். இந்த மாதம் பெரியதாக எதிர்பார்ப்புகள் எதுவும் வேண்டாம். நிதானம் தேவை.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு ராசியில் உள்ள சூரியன்,புதன் மாத பிற்பகுதியில் குடும்ப ஸ்தானத்திற்கு போவது சிறப்பு. கணவன் மனைவி இடையே பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வேலை விசயமான பயணங்கள் வெற்றிகளைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. எந்த வேலையை தொட்டாலும் அது சட்டென்று முடியாமல் அலைச்சலை தரும். இந்த மாதம் புதிதாக கடன் எதுவும் வாங்க வேண்டாம் என்றாலும் வீடு வாகனங்களை லோன் மூலம் வாங்கலாம். திருமண முயற்சிகளுக்கு இது சரியான நேரமில்லை தட்டிப்போய்க்கொண்டே இருக்கும். திடீர் திருப்புமுனைகள் ஏற்படும் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

சிம்மம்: இந்த மாதம் சூரியன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திலும் உங்க ராசியிலும் ஆட்சி பெற்று அமர்கிறார். கூடவே புதன் பயணிக்கிறார். குரு உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ராகு உடன் பயணிக்கிறார். சனி ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் உங்க வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. தொழில் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். திடீர் பண வரவும் அதிர்ஷ்டமும் வரும். உங்க பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். சின்னச் சின்ன விரைய செலவுகள் வந்தாலும் வருமானம் பல மடங்காக இருப்பதால் உங்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. உங்களுக்கு இதுநாள் வரை இருந்த தடைகள் எல்லாம் நீங்கி சாதகம் அதிகமாகும். உங்க எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். நீங்க எடுக்கப் போகிற முயற்சிகள் எல்லாம் வெற்றியில் கிடைக்கும். உங்க வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. குரு பார்வை கிடைப்பதால் திருமண முயற்சிகள் சுபமாக முடியும். இந்த மாதம் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக ஆகஸ்ட் மாதம் அமைந்துள்ளது.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளால் கவனிக்கப்படுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு வேலையில் திடீர் இடமாற்றம் கிடைக்கும். செவ்வாய் உங்க ராசிக்கு வரப்போகிறார். குடும்பத்தில் வாக்குவாதம் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமணம் சுப காரிய முயற்சிகளுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த மாதம் பிற்பகுதியில் விரைய ஸ்தானத்தில சூரியன் புதன் மாத பிற்பகுதியில் இணைவதால் நிறைய விரைய செலவுகள் வரலாம். குடும்பத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ வீண் வார்த்தைகளை விட வேண்டாம். கூடுமானவரை அதிகம் பேசாமல் இருப்பது குடும்பத்திலும் வேலையிலும் உங்களுக்கு ரொம்ப பாதுகாப்பாக இருக்கும். மாத முற்பகுதியில் நன்மைகள் அதிகமாக நடக்கும். மாத பிற்பகுதியில் சில சங்கடங்கள் ஏற்படும் கவனம் தேவை. ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். என்னதான் உற்சாகமாக இருப்பது போல இருந்தாலும் ஒருவித பயத்தோடும் பதற்றத்தோடும் இருப்பீங்க.












Click it and Unblock the Notifications