தங்கம் வாங்க நல்ல நாட்கள் - இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கும்
தங்கம் வாங்க நல்ல நாட்கள், ராசியான நட்சத்திரங்கள், யோகமான நாட்கள் எவை என்று பார்க்கலாம்.
சென்னை: தங்கம் எதிர்காலத்திற்கான முதல் முதலீடாகும். எனவேதான் கடந்த பல ஆண்டுகளாக, தங்கம் மக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. இன்றைக்கு தங்கம் வாங்க வைப்பதற்கு பல விளம்பரங்கள் வந்தாலும், அதை அடகு வைக்கவும், விற்கவும் எத்தனையோ விளம்பரங்கள் வருகின்றன. தங்கம் வாங்கினால் வீட்டில் தங்க வேண்டும். எந்த நாளில் தங்கம் வாங்கினால் நல்லது என்று பார்க்கலாம்.
இந்தியர்கள் தங்க நுகர்வில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். தங்கத்துடனான முதல் பரிச்சயம், குழந்தைகள் பிறந்தவுடன் தாத்தா பாட்டி ஆகியோர் பரிசாக அளித்த ஒரு சிறிய மோதிரம் அல்லது தங்கச் சங்கிலியாகத்தான் இருக்கும். தீபாவளிக்கு முதல்நாள் தந்தேராஸ் அன்று தங்கம் வாங்குவது ஏன் மங்களகரமானது என்ற கதையை உங்களுக்கு கூறியிருப்பார்கள்.
தங்க நகையை விரும்பாத இந்தியப் பெண்மணியைக் கண்டுபிடிப்பது கடினமான ஒன்று. தங்கத்தின் மீதான நமது ஆர்வம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போது தொடங்கியதாக கூறப்படுகிறது. இன்றைக்கு தங்கத்தை திரி புஷ்கர யோகங்கள் அமையும் நாட்களில் வாங்கினால் அடகு கடைக்கு போகாமல் தங்கும்.

திரிபுஷ்கர யோகம்:
திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் துவிதியை சப்தமி துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம்,கார்த்திகை, உத்திராடம், நட்சத்திரங்களில் அதாவது மேற்கண்ட கிழமைகள் திதிகள் நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அடகு கடைக்குப் போகாமல் வீட்டில் தங்கம் தங்கும்.

நகைகள் வாங்க நல்ல நட்சத்திரங்கள்:
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,ஹஸ்தம், அசுவினி,பூசம், அபிஜித்,ரோகிணி,உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி.

வைரம் மற்றும் மணிகள் வாங்க நல்ல ராசி நட்சத்திரங்கள்:
ஞாயிறு செவ்வாய் கிழமைகளில் மேஷம் விருச்சிகம் சிம்மம் லக்கினங்களில் மேலே சொல்லப்பட்ட நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் மிருகசிரீடம் ரேவதி சித்திரை அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் வாங்க அதிர்ஷ்டம் தரும்.

முத்துக்கள் பதித்த நகைகள் வாங்க நல்ல நாட்கள்:
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,மிருகசிரீடம், ரேவதி, சித்திரை,அனுஷம்,ஹஸ்தம், அசுவினி,பூசம்,அபிஜித் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திங்கள் வெள்ளி வியாழன் புதன் கிழமைகளில் சுப லக்கினங்களில் வாங்க நன்மை உண்டாகும்.
-
தங்கம் விலை இனி உயருமா? உயராதா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்.. ராக்ஃபெல்லர் வார்னிங் -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications