Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரச பதவி தேடித்தரும் சூரியன்- இந்த யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா?

ஒருவருக்கு அரசு அதிகாரப்பதவியை தருபவர் சூரியன்தான். சூரியன் பலமாக இருந்தால் பல யோகங்கள் உண்டாகும். தலைமைப்பதவியும், அதிகாரமும் ஆரோக்கியமும் அமையும். சூரியனால் ஏற்படும் யோகங்களை பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: நவகிரகங்களில் சூரியன்தான் தலைவர். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் யோக நிலையில் இருந்தால் தலைமைப்பதவி தானாக தேடி வரும். உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில் குன்றின் மேல் இட்ட விளக்கு போல புகழால் பிரகாசமடைவார்கள். அரசு அதிகாரம் தானாக தேடி வரும். சிறந்த நிர்வாகி என பெயரெடுப்பார்கள்.

சூரியன் தந்தைக்காரகன் என்பதால் தந்தையின் பாசம் அபரிமிதமாக இருக்கும். தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். மன தைரியம் அதிகரிக்கும். அறிவும் திறமையும் அதிகரிக்கும். எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் மன தைரியத்தை சூரியன் தருவார்.

சூரியன் ஆத்மகாரகன். உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தியை தருபவர் அவரே. ஜாதகத்தில் பலமில்லாமல் இருந்தால் உடல் உஷ்ணம் ஏற்படும். சோர்வாக இருப்பார்கள். கண்பார்வை கோளாறு ஏற்படும். தலைவலி, தலை சுற்றல் ஏற்படும். சூரியனால் என்னென்ன யோகங்கள் வரும் என்று பார்க்கலாம்.

அதிகாரம் அந்தஸ்து

அதிகாரம் அந்தஸ்து

மீனம் ராசியில் சூரியன் அமர்ந்து கடகத்தில் சந்திரன் இருக்க ராஜ் ராஜேஸ்வர் யோகம் அமைகிறது. சிறந்த கற்பனை திறன் மிக்கவர். ராஜயோகம் அமைப்பு உண்டாகும். அரசு வேலைகள் தேடி வரும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துடன் திகழ்வார்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

கல்வி செல்வம் தேடி வரும்

கல்வி செல்வம் தேடி வரும்

சூரியனும் புதனும் ஒன்றுக்கொன்று நெருக்கமான கிரகங்கள். ராசியில் அடிக்கடி கூட்டணி அமைத்து சஞ்சரிக்கும். புத ஆதிபத்ய யோகமும் ராஜயோகம்தான். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். செல்வமும் செல்வாக்கும் தேடி வரும்.

தலைமைப்பதவி

தலைமைப்பதவி

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு 12ஆம் வீட்டில் சந்திரன் ராகு கேதுவைத் தவிர செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இவர்களில் ஒருவர் இருந்தால் அது வசி யோகம். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் வசியோகத்தில் பிறந்தவர்கள். இந்த அமைப்பில் பிறந்தவர்களை அனைவரும் விரும்புவார்கள். நல்ல குணமும், தர்ம சிந்தனை உடையவராகவும் இருப்பார்கள். அரசாங்க உயர்பதவி, வேலை செய்யும் இடத்தில் தலைமைப்பதவி பெற்று வாழ்வார்கள். இனிமையான வார்த்தை பேசுவார்கள்.

 அழகும் அறிவும் கூடும்

அழகும் அறிவும் கூடும்

ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டாம் வீட்டில் சந்திரன், ராகு, கேதுக்கள் தவிர மற்ற கிரகங்கள் இருப்பது வெசியோக அமைப்பு. இந்த யோகம் உள்ளவர்கள் அழகானவர்கள். இனிமையான பேச்சாளர்கள். உணவுக்கு பஞ்சமிருக்காது. உதவும் குணம் கொண்டவர். இரண்டில் செவ்வாய் இருப்பது திடமான உடல் அமைப்பு ஏற்படும். இரண்டில் புதன் இருந்தால் கல்வி அறிவு அதிகரிக்கும். இரண்டில் குரு வித்தைகள் கூடும். சுக்கிரன் இருந்தால் செல்வம் கூடும். சுகபோக வாழ்வு அமையும். இரண்டில் சனி இருந்தால் பல திருமணம் நடக்கும். சூரியனுடன் சனி, ராகு, கேது கூட்டணி பெற்று அமைந்திருந்தால் வெசி யோகம் செயல்படாது.

செல்வ வளம் தரும் யோகம்

செல்வ வளம் தரும் யோகம்

சூரியன் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து 12ல் குரு அல்லது செவ்வாய் இருந்தால் சிறப்பான யோகம் அமையும். அதேபோல சூரியன் கடகம், விருச்சிகம், மீனத்தில் இருந்து 12ல் புதன், சுக்கிரன், சனி இருப்பது சிறப்பான யோகம். சூரியனுக்கு 12ல் புதன் இருந்தால் உலகப்புகழ் பெறுவார், செல்வ வளம் கிடைக்கும். 12ல் செவ்வாய் இருந்தால் புத்திரர்கள் அதிகம் உண்டாகும். சூரியனுக்கு 12ல் குரு, சனியோடு இணைந்திருந்தால் உடல் ஊனம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தைரியசாலிகள்

தைரியசாலிகள்

சூரியனுக்கு இரண்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பது அல்லது லக்னத்தில் சூரியன் இரண்டாம் வீட்டில் புதன் 11ல் சந்திரன் இருக்கவேண்டும். குரு சந்திரனுக்கு 4, 7, 10 ஆம் இடங்களில் இருப்பது பாஸ்கர யோகமாகும். இந்த அமைப்பு உள்ளவர்கள் தைரியசாலிகள், உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள். சகல சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த மேதைகள், மேடைப்பேச்சாளர்கள் செய்யும் தொழிலை சிறப்பாக செய்வார்கள்.

அழகான உடல் அமைப்பு

அழகான உடல் அமைப்பு

லக்கினத்திற்கு 10ஆம் வீட்டில் செவ்வாய் இருக்க, சூரியன் உச்சம் பெற்று 2ஆம் வீட்டில் இருக்க, சந்திரன், குரு 9ஆம் வீட்டில் இருந்தால் இரவி யோகம். ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பவர்களுக்கு 14 வயது முதல் 8வருடம் சிறப்பன யோகத்தை தரும். சூரியன் லக்கினத்திற்கு 10ஆம் வீட்டில் இருக்க, 10ஆம் அதிபதி 3ஆம் இடத்தில் சனியுடன் இணைந்திருந்தால் ரவி யோகம். இந்த அமைப்பு கொண்ட ஜாதகர் ஜாதகிக்கு 15 வயது முதலே சிறப்பான வாழ்க்கை அமையும். தாமரை போன்ற கண்கள், அழகிய உடலமைப்பு இருக்கும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.

அமாவாசை யோகம்

அமாவாசை யோகம்

சூரியன் சந்திரன் இணைந்து மிகப்பெரிய யோகத்தை தருகிறது. ஒளி கிரகங்களான சூரியன் சந்திரன் இணைந்து 1,5,9ஆம் இடங்களில் இருந்தால் ராஜயோகம். சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும். சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பு. ரிஷபத்தில் சூரியன்,சந்திரன் இணைவு, கடகத்தில் சூரியன் சந்திரன் இணைவு சிறப்பு. லக்னத்திற்கு 2, 3, 11ஆம் இடங்களில் இணைந்திருப்பது யோகம். அதே போல 4,7,10ஆம் வீடுகளில் இணைந்திருப்பது சுமாரான யோகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+