Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாய், தாய்மாமன் உறவு பிரச்சினை தீர்க்கும் பைரவர்கள்

தாயின் உடல்நிலைப் பாதிப்பு, தாய்மாமனுடன் பிரச்சினை உள்ளவர்கள் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர்களை வணங்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய் மாமன் உறவு என்பது ஆழமான உறவாகும். அது குழந்தையின் தாயை பொறுத்தே அமையும். தாய்க்கு காரக கிரகம் சந்திரன், தாய்மாமனுக்கு காரக கிரகம் புதன். தாயும் தாய்மாமன் உறவும் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கலாம்.

தாய்மாமன் உறவிற்கு ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தாய்மாமன் பற்றி கிழக்குச்சீமையிலே படத்தில் பக்கம் பக்கமாக பேசியிருப்பார் நடிகர் விஜயகுமார். பலருக்கு தாய்மாமன்கள் அருகில் இருந்தும் சண்டை சச்சரவாகவே இருக்கும் இதற்கு காரணம் ஜாதகத்தில் புதன் பாதிப்படைந்திருப்பதே. இதே போல தாய்க்கும் உடல்நிலை பிரச்சினை பாதிப்பு ஏற்பட ஜாதகத்தில் சந்திரன் பாதிப்படைந்திருக்கும்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இந்த வாரம் இன்று திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் யாகங்கள் நடைபெற உள்ளன.

இன்று மாலை 5.00 மணிக்கு சங்கடம் தீர்க்கும் சங்கடஹர கணபதி ஹோமமும், விநாயக தன்வந்திரிக்கு மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது.

வாஸ்து ஹோமம்

வாஸ்து ஹோமம்

06.03.2018 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வளமான வாழ்வு வாழவும் வாஸ்து தோஷம் நீங்கவும் ஸ்ரீ வாஸ்து ஹோமமும் வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது. ஸ்வாதி நக்ஷத்திரத்தை முன்னிட்டு ருண-ரோக-சத்ரு தோஷம் நீங்க ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமமும் கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

07.03.2018 புதன் கிழமை மற்றும் சஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் சகல தோஷங்கள் நீக்கும் சுதர்சன யாகத்துடன் சத்ருபயம் நீக்கும் சத்ரு ஸம்ஹார ஹோமமும் சக்கரத்தாழ்வார் மற்றும் கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

பத்து பைரவ யாகம்

பத்து பைரவ யாகம்

09.03.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை, பல்வேறு தடைகள் நீங்க பத்து பைரவர் யாகம் நடைபெறுகிறது. இந்த யாகம் பத்து பைரவர்களுக்கு பத்து குண்டங்கள் அமைத்து பத்து சிவாசாரியர்களால் நடைபெற உள்ளது. பத்து பைரவ மூர்த்திகளை வழிபடுவதால் சூரியன் முதலான நவக்கோள்களின் கிரக தோஷங்கள், தடைகள் நீங்கும், ஸ்ரீ பத்து பைரவருக்கு செய்யும் யாகங்கள் மற்றும் பூஜைகள் ஸ்ரீ நவகோள்களுக்கு சென்றடையும். பல்வேறு தோஷங்கள் நீங்கி தடைகள் தீர்க்கும் பத்து பைரவர் யாகம் நடைபெறுகிறது.

சூரிய சந்திர தசைகள்

சூரிய சந்திர தசைகள்

சூரிய தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சூரியன் நீச்சம், வக்ரம் அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தந்தையுடன் பிரச்சினை உள்ளவர்கள், அரசு சம்மந்தப்பட்ட பணியில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த கபால பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும். சந்திர தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சந்திரன் நீச்சம், வக்ரம், அஸ்தமனதோஷமுள்ளவர்கள், தாயின் உடல்நிலைப் பாதிப்பு, மன அமைதியின்மை போன்றவையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்ரீ உரு பைரவரை வணங்கலாம்.

சகோதரர்கள் பிரச்சினை தீரும்

சகோதரர்கள் பிரச்சினை தீரும்

செவ்வாய் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், செவ்வாய் நீச்சம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், சகோதரர்களிடம் பிரச்சினை உள்ளவர்கள், இந்த சண்ட பைரவரை வழிபடலாம். புதன் தசை, புதன் புத்தி நடப்பில் உள்ளவர்கள், தாய் மாமன் வகையில் பிரச்சினை உள்ளவர்கள், கல்வியில் பாதிப்பு உள்ளவர்கள் அசிதாங்க பைரவரை வழிபடலாம். குரு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு நீச்சம், வக்ரம் ஆஸ்தமன தோஷமுள்ளவர்கள், புத்திர வகையில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த உன் மத்த பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

விபத்தை சந்திப்பவர்கள்

விபத்தை சந்திப்பவர்கள்

சுக்கிரன் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சுக்கிரன், நீச்சம், வக்ரம், அஸ்தமன தோஷம் உள்ளவர்கள், கணவன், மனைவியிடையே கோளாறு உள்ளவர்கள் இந்த ஸ்ரீ குரோதன பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.
சனி தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம், அடிக்கடி ஆயுளுக்கு உரிய கண்டங்களை அனுபவிப்பவர்கள், வண்டி வாகனங்களில் விபத்தை சந்திப்பவர்கள், எதிரிகளால் தொல்லை அனுபவிப்பவர்கள் இந்த சம்ஹார பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

கால சர்ப்ப தோஷம்

கால சர்ப்ப தோஷம்

ராகு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், ராகு நீச்சம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்கள், ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றில் பாதிப்பு உள்ளவர்கள், விஷத்தால் பாதித்தவர்கள் இந்த பீஷண பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும். கேது தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், 12ல் கேது அமையப் பெற்றவர்கள் ஸ்ரீ சொர்ணாகர்ஷனை பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.
தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,கீழ்புதுபேட்டை, வாலாஜாபேட்டை. 09443330203

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+