கர்நாடகா முதல்வர் நாற்காலி : எடியூரப்பா ஜாதகம் என்ன சொல்லுது தெரியுமா?
கர்நாடகாவின் முதல்வர் நாற்காலியை பிடிக்க பகீரதப்பிரயத்தனம் செய்யும் பி எஸ் எடியூரப்பா ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
Recommended Video

பெங்களூரு: சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்தும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் முதல்வர் நாற்காலியில் அமர படாதபாடு பட்டு வரும் பிஎஸ் எடியூரப்பாவின் ஜாதகத்தில் உள்ள யோகங்களை பார்க்கலாம்.
கடந்த 1943ஆம் ஆண்டு மாண்டியா மாவட்டத்தில், பிப்ரவரி மாதம் கே.ஆர். பேட் தாலுகாவில், பூக்காநகேரே என்ற கிராமத்தில் பிறந்தவர் எடியூரப்பா. பட்டப்படிப்பை முடித்து ரைஸ்மில்லில் வேலைக்கு சேர்ந்தவருக்கு அரசியல் ஆசை எட்டிப்பார்த்தது.1983ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா அதில் வெற்றி பெற்றார்.
எடியூரப்பாவிற்கு 1986ஆம் ஆண்டு சுக்கிர திசை தொடங்கியது. 1988ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவரானார். சூரிய தசை நடந்த போது 2007 நவம்பர் 12ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமராசாமியால் கவிழ்க்கப்பட்டது. 2008ம் ஆண்டு மே 30 முதல் 2011 ஜூலை 31-ம் தேதிவரை முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தார். அதன்பின், அவர் மீது சுரங்க ஊழல் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால், அவர் பதவியில் இருந்து விலகி, கைது சிறை சென்றார். சட்டப்போராட்டம் நடத்தில் ஊழல் புகாரில் இருந்து மீண்டு வந்தார். பாஜகவில் இருந்து விலகி மீண்டும் இணைந்து இப்போது முதல்வர் நாற்காலியை பிடிக்க போராடி வருகிறார்.

எடியூரப்பாவின் ஜாகத்தில் யோகம்
வாழ்க்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீர் ராஜயோகங்கள் ஏற்படும், விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அதன் மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆகி விடுவார். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். விபரீத ராஜயோகம் பலர் ஜாதகத்தில் இருந்தலும் சிலருக்கு தான் யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கும் யோகத்தை தருகிறது. எடியூரப்பா ஜாதகத்தில் விருச்சிக ராசி, சந்திரன் விருச்சிகத்தில் அமர்ந்துள்ளார். தனுசு லக்னம்,செவ்வாய் அமர்ந்துள்ளார். மகரத்தில் புதன், கும்பத்தில் சூரியன் கேது, மீனத்தில் சந்திரன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். ரிஷபத்தில் சனி, மிதுனத்தில் வியாழன், சிம்மத்தில் ராகு அமர்ந்துள்ளனர். எடியூரப்பாவிற்கு எட்டாம் அதிபதியான சந்திரன் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ளது விபரீத ராஜ யோகம்.

சுகமான வாழ்வு
வசி யோகம்,சூரியனுக்கு 12ல் புதன் இருந்தால் சுக போக வாழ்வு அமையும். சூரியனுக்கு இரண்டில் சுக்கிரன் இருந்தால் செல்வம் உள்ளவர்கள். சுக போக வாழ்வு அமையும். சூரியனுக்கு 2-12-ல் புதனும், சுக்கிரனும் இருக்க இவர்களை பாவக் கிரகங்கள் பார்க்கமால் இருந்தால் அந்த ஜாதகரின் தந்தைக்கு அதிக யோகத்தை அனுபவிப்பார்கள். சம்பத்தும், புகழும் பெற்று சிறப்புடன் வாழ்வர்கள். இது எடியூரப்பா ஜாதகத்தில் உள்ளது.

சிறப்பான வாழ்க்கை
எடியூரப்பா ஜாதகத்தில் ஹம்ச யோகம் அமைந்துள்ளது. அது போல மாளவியா யோகமும் அமைந்துள்ளது. ஹம்ச யோகம், மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமைந்து தாம்பத்திய வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

ஏற்றமும் இறக்கமும் கொண்ட வாழ்க்கை
வாழ்க்கை இன்பமும், துன்பமும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது என்பதுதான் சகடயோகம் உணர்த்தும் உண்மை. குருவுக்கு சந்திரன் 6,8,12 ஆகிய இடங்களில் இருந்தால், இந்த சகட யோகம் உருவாகிறது. இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். எடியூரப்பா ஜாதகத்தில் குருவிற்கு 6வது வீடான விருச்சிகத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இதுவே அவரது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் கொண்டாதாக அமைய காரணமாக உள்ளது.

முதல்வர் நாற்காலி கிடைக்குமா?
எடியூரப்பாவிற்கு இப்போது சந்திர தசை நடக்கிறது. சூரிய தசை நடந்த போது கடந்த 2007ஆம் ஆண்டு 7 நாட்கள் முதல்வரானார். அதன்பின்னர் 3 ஆண்டுகள் முதல்வரானார். எட்டாம் அதிபதியாக உள்ள சந்திரன் 12ல் மறைந்து உள்ளார். விபரீத ராஜயோகத்தின் படி அவர் முதல்வர் நாற்காலியில் அமர்வாரா? பெரும்பான்மை பெறாமல் முதல்வராக துடிக்கும் எடியூரப்பா எத்தனை நாட்கள் முதல்வராக நீடிப்பார் என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications