Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதன் பெயர்ச்சி 2020: துலாம் ராசியில் சஞ்சரிக்கும் புதனால் யாருடைய புத்திசாலித்தனம் கூடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்திநாதன் புதன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகி உள்ளார். இந்த புதன்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சென்னை: நவ கிரகங்களில் புதன் மாதம் ஒருமுறை இடப்பெயர்ச்சி அடையும். இதுநாள்வரை கன்னி ராசியில் சஞ்சரித்த புதன் இப்போது துலாம் ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். நவம்பர் மாதம் 28ஆம் தேதி வரைக்கும் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

புதன் கிரகம் மிதுனம் கன்னி ஆகிய இரு வீடுகளில் ஆட்சி பெறுகிறார். தனது வீடான கன்னியில் புதன் உச்ச பலம் பெறுகிறார். எதிர் துருவமான குருவின் வீடான மீனத்தில் புதன் நீசமடைகிறார். இதுநாள் வரை தனது வீடான கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்றிருந்த புதன் தனது நண்பரின் வீடான துலாம் ராசியில் இரண்டு மாதங்கள் சஞ்சரிக்கப் போகிறார்.

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புத்திகாரகன் புதன் சுபகிரகங்களுடன் சேர்ந்திருக்கும் போது சுப பலன்களையும் அசுப கிரகங்களுடன் சேர்ந்திருக்கும் போது அசுப பலன்களையும் தருவார். கிரகங்களில் புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். இந்த புதன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் புதன் சஞ்சரிக்கிறார். புதனின் பார்வை உங்க ராசியின் மீது நேரடியாக விழுகிறது. தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதத்தினை தவிர்க்கவும். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலில் பங்குதாரா்களிடம் எச்சரிக்கை தேவை. களத்திர ஸ்தானத்தில் புதன் அமர்வதால் வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. காதலை சொல்ல இது ஏற்ற தருணம் அல்ல. உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் வந்து கையிருப்பு கரைந்து விடும். பாதிப்புகள் குறைய புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கலாம். உணவிலும் பாசிப்பருப்பு, பாசிப்பயறு அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 6வது வீட்டில் புதன் சஞ்சரிக்கிறார். இது மறைவு ஸ்தானம். 6வது இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். பண வரவு அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். பேச்சு வன்மை அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழும் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். சகோதா்களின் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வது நல்லது. தோல் நோய்கள் ஏற்படலாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இதுவாகும்.சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வது அதிக நன்மை தரும்.

மிதுனம்

மிதுனம்

சிம்மம் ராசிக்கு 5வது வீட்டில் புதன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். எழுத்து பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். நண்பர்கள், உயரதிகாரிகள், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட வழியில் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். வீட்டில் தம்பதியர் இடையே பிரச்சினை வந்து போகும். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள் அப்புறம் அது தொல்லையில் வந்து முடிந்து விடும். புதன்கிழமைகளில் நவகிரக ஆலயத்திற்கு சென்று புதனை வணங்குங்கள்.

கடகம்

கடகம்

உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். வேலைகளில் புரமோசன் ஏற்படும். உறவினா் வருகை உண்டு. உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். உங்கள் வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்கும். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சிறந்த வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் வருமானம் அதற்கு ஏற்ப செலவும் வரும். வண்டி வாகன லாபம் உண்டு. வீடு, வண்டி வாகன பராமரிப்புக்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி அழகுபடுத்துவீர்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்களின் உதவி தேடி வரும். பண வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை ஏற்படும். புது முயற்சி செய்ய நல்ல நேரமாகும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் மருத்துவ செலவு அதிகரிக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கவும். பெருமாள் கோவிலில் தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

கன்னி

கன்னி

உங்க ராசிநாதன் புதன் உங்க ராசிக்கு 2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். சகோதரர்கள், தாய்மாமன்கள் மூலம் உதவிகள் வந்து சேரும். நரம்பு பிரச்சினைகள் திடீர் உடல் உபாதை ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிய மேலும் நன்மைகள் நடக்கும். புதன்கிழமைகளில் பாசிப்பயறு தானம் செய்யலாம்.

துலாம்

துலாம்

உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் புத பகவானால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் தேடி வரும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். சிலருக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு உள்ளது. சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாதிப்புகள் குறைய புதன்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கவும் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். அலுவலகத்தில் பாலிடிக்ஸ் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, திடீர் உடல் உபாதை ஏற்படும். தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும் புத்தியில் தடுமாற்றம் சிலருக்கு வரும். பாதிப்புகளில் இருந்து தப்பிக்க ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்கவும்.

தனுசு

தனுசு

புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருமானம் அதிகரிக்கும். உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். இது யோகமான காலமாகும். திடீா் அதிர்ஷ்டம் ஏற்படும். வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.

மகரம்

மகரம்

உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான இடமாகும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். கணவன், மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் கைகூடும். காதலை சொல்ல ஏற்ற தருணம் இதுவாகும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் புதன் சஞ்சரிக்கிறார். இது சாதகமான அம்சமாகும். உங்களின் வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். பூா்வீக சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது. தொழில் தடை ஏற்படும் முயற்சிகளில் கவனக்குறைவு ஏற்படும். பணம் தாராளமாக வரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும் காலமாகும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.

மீனம்

மீனம்

உங்க ராசிக்கு 8வது வீட்டில் புதன் சஞ்சரிக்கிறார். எட்டில் புதன் மறைவது நல்ல அமைப்புதான் என்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பொது இடங்களில் தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். இடம் பொருள் அறிந்து பேசினால் நல்லதே நடக்கும். பணம் வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு சரியான காலம். வேலை தொழிலில் நன்மைகள் ஊதிய உயா்வு பெறுவீா்கள். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன்கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள் நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+