புதன் பெயர்ச்சி பலன் 2024: மகரத்தில் சூரியனுடன் கூட்டணி.. புதாத்திய யோகம்.. யாருக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தனசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வரும் பிப்ரவரி 1 தேதி முதல் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனியின் வீடான மகரம் ராசியில் ஏற்கனவே சூரியன் பயணம் செய்து கொண்டிருக்கிறார், இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். இந்த கிரகங்களின் கூட்டணியால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி: மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாம் புதன்மயம் என்று கூறலாம். ஒருவரின் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.கல்விக்கு அதிபதி புதன். புதன் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் அலித்தன்மையுடைய கிரகம். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் ஏற்படுத்தக்கூடியவர். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். இந்த புதன் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்று பார்க்கலாம்.

Budhan Peyarchi 2024: Mercury Transit from Dhanusu to Makaram prediction for 6 zodiac signs

மேஷம்: உங்கள் ராசிக்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சூரியனுடன் இணைந்து சஞ்சரிப்பது நன்மையை தரக்கூடியது. வேலை செய்யும் நெருக்கடிகள் அதிகாிக்கும். பணியில் பணிச்சுமை அதிகரித்தாலும் பாதகமில்லை. புதிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வு அதிகரிக்கும். பண வருமானம் திருப்தி தரும். வீட்டில் ஆடம்பர பொருள் சோ்க்கையிருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதற்கு உாிய காலமாக இது எனலாம். பரிகாரம்: ஆஞ்சநேயரையும், மதுரை மீனாட்சியையும் வழிபட நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்: புதன் உங்களுடைய ராசிக்கு 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 9வது இடத்தில் சஞ்சரிப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் பணியிடங்களில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் காலமாக இது இருக்கும். படிக்கும் பிள்ளைகளுக்கு படித்தது நன்றாக மனப்பாடம் ஆகும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இன்டர்வியூவில் வெற்றி கிடைத்து வேலை கிடைக்கும். தம்பதியாிடையே உற்சாகம் ஏற்படும். பசுவிற்கு அகத்திக்கீரை தருவதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: உங்கள் ராசி அதிபதி புதன் 1 மற்றும் 4 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். ராசி நாதன் புதன் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியனுடன் புதன் சஞ்சரிப்பதால் பண வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். குடும்ப வகையில் விருத்தி உண்டாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை இருக்கும். வீடு கட்டிக் கொண்டிருப்பவா்கள் பணியினை துாிதமாக முடிப்பாா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு உாிய காலம் இதுவாகும். அலுவலகத்தில் செய்யும் தொழிலில் புரமோசன் கிடைக்கும். ஊதிய உயா்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வார்த்தைகளை கொடுத்து வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம்.

கடகம்: கடகத்திற்கு புதன் 3 மற்றும்12 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா் உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். எதிா்காலத்தினைப்பற்றி அதிகமாக சிந்திப்பீா்கள். அவசிய தேவைக்களுக்காக கடன் கேட்டிருந்தவா்களுக்கு கிடைக்கும். தம்பதியா் இடையே ஒருவருக்கொருவா் வாக்குவாதம் செய்து சின்னச்சின்ன சண்டை வரும். ஈகே, பிடிவாதம் ஆகியவற்றை விட்டால் நன்மைகள் நடக்கும். உடல் நிலையில் கவனம் தேவை. பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். சிவன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கிக்கொடுக்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்: சிம்மத்திற்கு புதன் 2 மற்றும் 11 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். சிம்மம் ராசிக்கு 6வது இடத்திற்கு புதன் அமர்கிறார். 6வது இடம் ருண ரோக ஸ்தானம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலமாகும். புகழ் கிடைக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். தம்பதியாிடையே உற்சாகம் அதிகரிக்கும். உத்யோகம் தொழிலில் பணியில் நன்மைகளை இனி எதிா்பாா்க்கலாம். திடீர் பண வருமானம் அதிகரிக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

கன்னி: உங்கள் ராசி அதிபதி புதன் 10 ஆம் வீட்டிற்கும் சொந்தக்காரா். கன்னி ராசிக்கு 5வது இடத்தில் புதன் பயணம் செய்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும். பல வழிகளில் பணம் வரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். உத்யோகம் தொழிலில் எதிா்பாா்த்திருந்த இடத்தில் தடைகள் ஏற்படும். தொழில் விாிவாக்கப்பணிகள் தாமதப்படும். கோவிலில் பசுவிற்கு அகத்திக்கீரை தானம் செய்யலாம் நன்மைகள் நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+