புதன் பெயர்ச்சி பலன் 2024: புதாத்திய யோகம்.. மகர ராசியில் சூரியன் புதன் கூட்டணியால் யாருக்கு லக்!
மதுரை: தனுசு ராசியில் செவ்வாய் சுக்கிரன் உடன் பயணம் செய்யும் புதன் கிரகம் மகரம் ராசிக்கு வரும் பிப்ரவரி 1 தேதி முதல் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனியின் வீடான மகரம் ராசியில் ஏற்கனவே சூரியன் பயணம் செய்து கொண்டிருக்கிறார், இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுவதால் புது கூட்டணி உருவாகிறது. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: துலாம் ராசிக்கு புதன் பகவான் 9 மற்றும் 12ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் புதன் சூரியனுடன் இணைந்து பயணம் செய்வதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு புதிய மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினா் வருகை உண்டு. பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். வாகன லாபம் உண்டு. வியாபாரத்தில் வேலைப்பளு அதிகாிக்கும். பசுவிற்கு தினசரியும் கோதுமை கொடுக்கலாம்.

விருச்சிகம்: உங்கள் ராசிக்கு புதன் 8 மற்றும் 11ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு புதன் 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் அமர்கிறார். திடீர் பயணங்கள் ஏற்படும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரமாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்களின் உதவி கிடைக்கும். வேலையில் இருந்தவர்களுக்கு பிரச்னை ஏற்படும். பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. கடன் தொல்லைகள் நீங்கும். சுப விரைய செலவுகள் அதிகாிக்கும்.
தனுசு: உங்கள் ராசிக்கு புதன் 7 மற்றும் 10 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். 2வது இடத்தில் புதன் அமர்ந்துள்ளார். உற்சாகமான கால கட்டமாகும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். வேலையில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணவருமானம் அதிகரிக்கும். வீடு நிலம் சொத்து சோ்க்கை உண்டு. உதவிகள் வந்து சேரும். உடல் நிலையில் கவனம் தேவை. எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். பொது விவகாரத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். தம்பதியா் ஒருவருக்கொருவா் அதிகமான சண்டை சச்சாிவினை மேற்கொள்ளாதிருக்க பாிகாரம் அவசியம் நெற்றியில் தினசரியும் குங்குமம் வைக்கவும்.
மகரம்: உங்கள் ராசிக்கு புதன் 6மற்றும் 9ஆம் வீடுகளுக்குச் சொந்தக்காரா். ஜென்ம ராசியில் அமரும் புத பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். உறவினா்கள் வருகையினால் வீட்டில் உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதன்கிழமைகளில் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வர நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்: உங்கள் ராசிக்கு புதன் 5 மற்றும் 8 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து நீங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். உடல் உபாதை ஏற்படும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும். பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் காலமாக இது இருக்கும். படிக்கும் பிள்ளைகளுக்கு கல்வி நன்றாக இருக்கும். நாய்களுக்கு சப்பாத்தி கொடுக்கலாம்.
மீனம்: மீன ராசிக்கு புதன் 4 மற்றும் 7 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா்.புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் புதன் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருமானம் அதிகரிக்கும். திடீா் வாய்ப்புகள் தேடி வரும்.புதன் 11ஆம் வீட்டில் அமா்ந்திருக்கும்போது வீடு மனை நிலம் வாங்குவதற்கான காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொருள் சோ்க்கை ஏற்படும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். மகாவிஷ்ணு ஆலயத்திற்கு சந்தனம் வாங்கித் தரலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications