Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதன் பெயர்ச்சி பலன் 2022: கடக ராசியில் சூரியன் புதன் கூட்டணி.. கவனமாக இருக்க வேண்டியது யார்?

கடக ராசியில் சூரியனுடன் பயணம் செய்கிறார் புதன் பகவான். இந்த கிரகங்களின் கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதன் புத்தி நாயகன் புதன் கடக ராசியில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார். சூரியன் புதன் கூட்டணி சில ராசிக்காரர்ளுக்கு யோகத்தை தரப்போகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்றும் பார்க்கலாம். இந்த கிரக கூட்டணியால் பாதிப்பு வந்தால் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.

புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. புதன் கிரகம் தனது நட்பு கிரகமான சூரியனுடன் இணைந்து கடக ராசியில் சஞ்சாரம் செய்வதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

புதன் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார்.
வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உறவினா் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். பண வருமானம் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவுகளும் அதிகாிக்கும். மாணவர்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராது என்று நினைத்திருந்த பணம் வீடு தேடி வரும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம்.

 ரிஷபம்

ரிஷபம்

புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சூரியனுடன் அமர்வதால் பயணங்கள் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். பண வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை அதிகாிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் திடீர் மருத்துவ செலவுகள் வந்து எட்டிப்பார்க்கும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவா்களுக்கு பிரச்னை ஏற்படும். புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வணங்க பாதிப்புகள் குறையும்.

மிதுனம்

மிதுனம்


உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் புதன் அமர்வது உற்சாகமான கால கட்டமாகும். பேச்சில் இனிமை கூடும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். துளசி மாலை அணிவித்து பெருமாளை வணங்க நன்மைகள்நடைபெறும்.

கடகம்

கடகம்

உங்கள் ராசியில் உள்ள சூரியனுடன் இணைந்து அமரும் புத பகவானால் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்க நன்மைகள் அதிகம் நடைபெறும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சூரியனுடன் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். அப்பாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரும். பிரச்சினைகள் தீர விட்டுக்கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை.

கன்னி

கன்னி

புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் சூரியனுடன் பயணம் செய்வது யோகமான கால கட்டமாகும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திடீர் வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். வேலை விசயமாக திடீா் வாய்ப்பு தேடி வரும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் புதன் சூரியனுடன் பயணம் செய்கிறார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வருமானம் அதிகரிக்கும் பல வழிகளில் பணம் வந்து கொண்டேயிருக்கும். சகோதர வழியில் நன்மை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். செய்யும் முதலீடுகளில் லாபம் கிடைக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். கோவிலுக்கு பாசிப்பயறு தானமாக கொடுக்கலாம்.

தனுசு

தனுசு

புதன் உங்கள் ராசிக்கு 8வது இடத்தில் பயணம் செய்கிறார் திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வரும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்கள் செய்யும் சாதனை பெருமைப்பட வைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருமானம் திருப்தி தரும். புதன்கிழமைகளில் துளசி மாலை அணிவித்து பெருமாளை வணங்க நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் சூரியனுடன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். பணப்பிரச்னை தலையெடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். வீண் வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். வேலைசெய்யும் இடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும்.

கும்பம்

கும்பம்

கடகம் ராசிக்கு 6வது வீட்டில் புதன் சூரியனுடன் பயணம் செய்கிறார். இது திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். மூத்த சகோதா்களின் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு புனித யாத்திரை செல்வது நல்லது. புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் புதன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் தம்பதியர் இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினை நீங்கும். உறவினர்கள் நண்பர்களிடத்தில் எந்த ஒரு விசயத்திலும் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் படிப்பு விசயமாக செலவு அதிகரிக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+