புதன் பெயர்ச்சி பலன் 2023: ஷேர் மார்க்கெட்டில் ஜாக்பாட்.. புத்திசாலித்தனம் யாருக்கு அதிகரிக்கும்?
சென்னை: நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும். புத்திக்கு அதிபதியான புதன் பகவான் வரும் திங்கட்கிழமை 24ஆம் தேதி முதல் சிம்ம ராசியில் பயணம் செய்யப்போகிறார். சிம்ம ராசியில் ஏற்கனவே சுக்கிரன், செவ்வாய் குடித்தனம் செய்து கொண்டிருக்க, இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
புதன் பெயர்ச்சி: மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், பய உணர்வு, சஞ்சலம், சபல புத்தி, மனநலம் குன்றுதல், காக்கை வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகும். சிம்ம ராசியில் ஆட்சி பெற்ற சூரியனுடன் இணைந்து ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு மேல் புதாத்திய யோகத்தை தரப்போகிறார் புதன்.

மேஷம்: புதன் பகவான் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். காதல் விசயங்களில் வெற்றி தேடி வரும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் லாபம் கொட்டப்போகிறது. உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இது சிறந்த நேரமாகும். கடன் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது.
ரிஷபம்: புதன் நான்காவது வீட்டில் பயணம் செய்யப்போவதால் உங்கள் மனதில் அமைதி நிலைத்திருக்கும். திருமணமான தம்பதியினருக்கு நெருக்கம் கூடும். மனைவிக்கு பொன் நகைகளை வாங்கி பரிசளிப்பீர்கள். இந்த நேரத்தில் புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கை கூடி வருகிறது. உங்கள் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல், சளி போன்ற சின்னச் சின்ன தொந்தரவுகள் வந்து நீங்கும்.

மிதுனம்: புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்வதால் உங்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். படைப்பாற்றல் திறன் கூடும். உடன் பிறப்புகளுடன் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். மாணவர்கள் பெரியவர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைக்குப் பிறகு உயர்கல்வியை தேர்வு செய்வது நல்லது.
கடகம்: சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. புதன் பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் உங்களுடைய பேச்சிற்கு மதிப்பு கூடும். பண வருமானத்தில் சின்னச் சின்ன தடைகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உங்களுக்கு வேலையில் பளு கூடும் இதனால் மன அழுத்தப் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களுடன் பேச்சு வார்த்தையில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதையும் தைரியமாக எதிர்கொண்டால் பிரச்சினைகளை எளிதில் கையாளலாம்.

சிம்மம்: சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்குள் புதன் குடியேறப்போகிறார். மாணவர்களுக்கு உங்கள் லட்சியங்கள் நிறைவேறப்போகிறது. உயர்கல்வி தொடர்பான முயற்சிகளை வெற்றியைத் தரும். கலைத்துறையில் இருப்பவர்களின் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். உங்களின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் ராசிநாதன் பயணம் செய்கிறார். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. தவறான நபர்களுடனான தொடர்புகளை துண்டித்து விடுங்கள். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நல்ல செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சின்னச் சின்ன பிரச்சினைகள் எட்டிப்பார்க்கலாம்.
துலாம்: புதன் பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். நெருங்கிய நண்பர்கள் உறவினர்களின் உதவி வீடு தேடி வருவார்கள். உங்கள் வளர்ச்சி பிறருக்கு பொறாமையை ஏற்படுத்தும் கண் திருஷ்டி பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. புதன்கிழமைகளில் விஷ்ணு பகவான் ஆலயத்திற்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்குவது நல்லது.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே..இந்த புதன்பெயர்ச்சியால் உங்களுக்கு பண முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணி செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் பாராட்டு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கிறார். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். அப்பாவின் உடல்நிலையில் அக்கறை செலுத்துங்கள்.
மகரம்: மறைந்த புதன் மாணவர்களுக்கு நிறைந்த கல்வியைத் தருவார். அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் புதன் பகவானால் வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும். பண விசயங்களில் கவனம் தேவை. யாருக்கும் பணம் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கும்பம்: புதன் பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்கிறார். புதனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். பணப்பிரச்னை நீங்கி பொருளாதார வளம் அதிகரிக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்ப்பது நல்லது. நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலில் கவனமும் நிதானமும் தேவை. பாதிப்புகள் குறைய புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கலாம்.
மீனம்: ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகிறார். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்காக முயற்சி செய்பவர்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து முடிவு செய்வது நல்லது. அரசாங்க தேர்வுகளுக்குத் தயாராகும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவது நன்மையை தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications