Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதன் பெயர்ச்சி : ராகு உடன் இணைந்த புதன்..சூரிய கூட்டணியால் புதாத்திய யோகம் யாருக்கு கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்திநாதன் புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குடியேறியுள்ளார். ராகு பகவான் ஏற்கனவே மேஷ ராசியில் அமர்ந்திருக்க கூடவே புதன் இணைந்துள்ளார். ஒரே வாரத்தில் சூரியனும் இந்த கூட்டணியுடன் இணைந்து மேஷ ராசியில் உச்சம் பெறப்போகிறார். இந்த கிரகங்களின் கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

புதன் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் அலித்தன்மையுடைய கிரகம். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் ஏற்படுத்தக்கூடியவர். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். ஒருவரின் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். ஒருவரின் ஜாதகத்திலோ, கோச்சார ரீதியாகவோ புதன் சரியான நிலையில் பயணம் செய்யும் போது நல்ல நிலையில் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். புதன் கிரகத்திற்கு நண்பர்கள் சூாியன் சுக்கிரன். புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி, குரு, செவ்வாய். புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன். புதன் இன்று முதல் மேஷ ராசியில் உள்ள ராகு, சுக்கிரன் உடன் இணைந்துள்ளார். 14ஆம் தேதிக்கு மேல் சூரியன், புதன் பெயர்ச்சியால் யாருக்கு என்ன யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே உங்கள் ராசியில் ராகு உடன் பயணம் செய்யும் புதன் பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவிகளில் உயர்வு கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். மாணவர்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. புதாத்திய யோகத்தினால் உயர்கல்வி யோகம் கைகூடி வந்துள்ளது. உறவினர்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. புதன்கிழமைகளில் நவகிரகங்களில் புதன் பகவானை பாசிப்பயறு வைத்து வணங்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன ஊடல்கள் வந்து நீங்கும். வேலை விசயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னைகள் உண்டாகும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சின்னச் சின்ன காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் புதன் பகவான் பயணம் செய்கிறார். ராகுவினால் ஏற்கனவே லாபம் அதிகரிக்கும் கூடவே புதனும் இணைவது அற்புதமான கால கட்டம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். இது யோகமான கால கட்டமாகும். பண வருமானம் அதிகரிக்கும். திடீர் வாய்ப்புகள் தேடி வரும். சூரியன் புதன் 11ஆம் வீட்டில் பயணம் செய்யும் போது வீட்டிற்குத் தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் மகாவிஷ்ணு ஆலயத்திற்கு சந்தனம் வாங்கித் தர நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடகம்


கடக ராசிக்காரர்களே.. புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் ராகு, சூரியன் உடன் சஞ்சரிப்பது நன்மையை தரக்கூடியது. உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பணியில் பணிச்சுமை நீங்கும். வேலையில் ஸ்மார்ட் ஆக செயல்படுவீர்கள். பத்தில் சூரியன் பதவியைத் தேடித்தருவார். சகோரர்களின் உதவிகள் தாராளமாக கிடைக்கும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். குடும்ப வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் ஆடம்பர பொருள் சோ்க்கையிருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதற்கு உாிய காலமாகும். பச்சைப்பயிறு வேக வைத்து புதனுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் 9வது இடத்தில் பயணம் செய்யும் காலத்தில் பண வருமானம் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கூடவே சூரியனும் இணைவதால் அப்பாவின் உடல்நிலையில் கவனம் தேவை. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இன்டர்வியூவில் வெற்றி கிடைத்து வேலை கிடைக்கும். தம்பதியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும் படிக்கும் பிள்ளைகளுக்கு படித்தது நன்றாக மனப்பாடம் ஆகும். புதன்கிழமை புதன்பகவானை வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

உங்கள் ராசிநாதன் புதன் பத்தாம் வீட்டிற்கும் சொந்தக்காரர். புதன் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பண வருமானம் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்தில் புதிய வரவு உண்டாகும். அதே நேரத்தில் வாகன பயணங்களில் கவனம் தேவை. சில மனை நிலம் வாங்குவதற்கு உாிய காலம் இதுவாகும். அலுவலகத்தில் செய்யும் தொழிலில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வார்த்தைகளை கொடுத்து வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம். நரம்பு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க புதன் கிழமை மீனாட்சி அம்மனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றிகள் தேடி வரும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதத்தினை தவிர்க்க வேண்டும். வீண் பேச்சு பேசாதீர்கள். தம்பதியர் இடையே சின்னச்சின்ன சண்டை வரும். விட்டுக்கொடுக்க சண்டைகள் சரியாகும். சிவன் கோவிலுக்கு சென்று நவகிரக புதனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வணங்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் புதன் பகவான் அமர்கிறார். 6வது இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலமாகும். புகழ் கிடைக்கும். மற்றவர்களிடம் நற்பெயா் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். தம்பதியரிடையே உற்சாகம் இருக்கும். உத்யோகம் தொழிலில் பணியில் நன்மைகளை இனி எதிர்பார்க்கலாம். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டாம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வீர்கள். சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்கு 5வது இடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் பயணம் செய்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகரிக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வேலையில் இதுநாள் ஏற்பட்ட தடைகள் நீங்கும். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் புதன் பயணம் செய்கிறார். ராகு பகவானுடன் இணைந்த அள்ளிக்கொடுப்பார். வேலைகளில் புரமோசன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். பணம் வருமானம் அதிகரிக்கும். அதற்கு ஏற்ப செலவுகளும் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் லாபம் உண்டு. உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு புதன் 3வது இடத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். திடீர் பயணங்கள் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளின் உறவு மேம்படும். பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. நண்பர்கள் உதவி வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பிரச்னை ஏற்படும். கடன் தொல்லை அதிகாிக்கும் வீண் செலவுகளைத் தவிர்க்கவும். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. திடீர் செலவினம் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் ராகு உடன் புதன் பயணம் செய்வது உற்சாகமான கால கட்டமாகும். வேலையில் புரமோசன் வரும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பண வருமானமும் சொத்து சேர்க்கையும் உண்டாகும். உங்களுக்குத் தேவையான உதவிகள் வீடு வந்து சேரும். உடல் நிலையில் கவனம் தேவை. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பம் குதூகலமடையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+