புதன் பெயர்ச்சி பலன்: 2024 ஜனவரியில் அஷ்ட லட்சுமி யோகம்.. வீடு தேடி வரப்போகும் ராஜ யோகம்
சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டால் நரம்பு பிரச்சினை, மனநோய், பேசுவதில் பாதிப்பு ஏற்படும். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கும் புதன் தனுசு ராசியில் இருந்து வக்ரமடைந்து பின்னோக்கி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் உடன் விருச்சிக ராசியில் கூட்டணி சேரும் புதனால் அஷ்ட லட்சுமி யோகம் தேடி வரப்போகிறது.
புதன் வக்ர பெயர்ச்சி: புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான் அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். வெளியில் தெரியும் நரம்புகளுக்கு காரணகர்த்தாவாக திகழ்கிறார். வக்ரமடைந்துள்ள புதன் சில வாரங்கள் சுக்கிரன் உடன் இணைந்து விருச்சிகத்தில் குடித்தனம் செய்யப்போகிறார் புதன். இந்த கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன நன்மை யாருக்கு பரிகாரம் என பார்க்கலாம்.

மேஷம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6 ஆம் வீட்டு அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் வக்ரமடைந்து மறைகிறார். எட்டில் புதன் மறைவது நல்ல அமைப்புதான் என்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். இடம் பொருள் அறிந்து பேசினால் நல்லதே நடக்கும். பண வருமானம் நன்றாக இருக்கும். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். புதன்கிழமைகளில் புதனுக்கு பச்சைப்பயறு வைத்து வணங்கி விளக்கேற்றலாம்.
ரிஷபம்: உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் புதன் சுக்கிரன் உடன் அமர்வதால் சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் வந்து கையிருப்பு கரைந்து விடும். வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. காதலை சொல்ல இது ஏற்ற தருணம் அல்ல. புதன்கிழமை மகாவிஷ்ணு கோவிலில் விளக்கேற்றி வழிபடலாம்.
மிதுனம்: ராசி அதிபதி புதன் சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்வதால் பேச்சு வன்மை அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழும் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். 6வது இடமான ருண ரோக ஸ்தானத்தில் புதன் அமர்வதால் தோல் நோய்கள் ஏற்படலாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இதுவாகும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் நெய் விளக்கேற்றி வழிபட நன்மையே நடக்கும்.
கடகம்: உங்கள் ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் சுக்கிரன் உடன் பயணம் செய்யப்போகிறார். அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். எழுத்து பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். நண்பர்கள், உயரதிகாரிகள், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்டமான கால கட்டம் திடீர் பண வருமானம் வரும். நன்மைகள் நடக்க மகாவிஷ்ணுவை சகஸ்ராநாமம் கூறி வணங்கலாம்.
சிம்மம்: சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் புதன் சுக்கிலன் கூட்டணியால் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சிறந்த வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை கூறி விஷ்ணுவை வணங்கலாம்.
கன்னி: உங்கள் ராசிநாதன் புதன் 3வது இடத்தில் சுக்கிரன் உடன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்வதால் புது முயற்சி செய்ய நல்ல நேரமாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும்.வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். எழுத்தாளர்களுக்கு நன்மை தரும் காலமாகும். ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால் நன்மைகள் அதிகரிக்கும்.
துலாம்: உங்கள் ராசியில் இருந்த புதன் 28ஆம் தேதி முதல் ராசிக்கு 2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் உடன் பயணம் செய்யப்போகிறார். பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிய மேலும் நன்மைகள் நடக்கும். புதன்கிழமைகளில் பச்சைப்பயறு தானம் செய்யலாம்.
விருச்சிகம்: உங்கள் ராசியில் பயணம் செய்யும் சுக்கிரன் உடன் இணைந்து புதன் அமர்ந்துள்ளதால் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யலாம்.
தனுசு: 12வது வீடான விரைய ஸ்தானத்தில் புதன் சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள், வாக்குவாதம் வந்து செல்லும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு பிரச்சினை, கை,கால்கள் நடுக்கம் உண்டாகும். புத்தியில் சிலருக்கு தடுமாற்றம் வரும் என்பதால் இதனை தடுக்க, மகா விஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
மகரம்: உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் புதன் பயணம் செய்வதால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். இது யோகமான காலமாகும். பண வருமானம் அதிகரிக்கும் உடன் திடீா் அதிர்ஷ்டம் உண்டாகும். வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணியலாம் பாதிப்புகள் குறையும்.
கும்பம்: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் புதன் சுக்கிரன் உடன் பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் உங்கள் வேலை பளிச்சிடும். பண வருமானம் திருப்தி தரும் வகையில் இருக்கும். கணவன், மனைவி இடையே நெருக்கம் கூடும். . காதலை சொல்ல ஏற்ற தருணம் இதுவாகும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். அதிகம் நன்மைகள் நடக்க புதன்கிழமைகளில் பச்சைப்பயறு வேகவைத்து நிவேதனம் செய்யலாம்.
மீனம்: உங்கள் ராசிக்கு 9வது இடத்தில் புதன் சுக்கிரன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்வதால் பணம் தாராளமாக வரும். தந்தையின் உடல்நிலையில் அதிக கவனம் தேவை. பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும் காலமாகும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தினசரியும் புதன் காயத்ரி மந்திரத்தை கூறி வர தீமைகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications