புதன் பெயர்ச்சி பலன் 2024: தனுசு ராசியில் உருவாகும் கூட்டணி.. வெற்றியை ருசிக்க போகும் 6 ராசிக்காரர்கள்
சென்னை: செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் சுக்கிரன் உடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் புதன் கிரகம் ஜனவரி 7 ஆம் தேதி முதல் தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். சூரியனும், செவ்வாயும் தனுசு ராசியில் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் புதனும் இணைவதால் குரு பகவானின் வீட்டில் புது கூட்டணி உருவாகிறது. இந்த கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றிகள் உண்டாகும்.
புதன் பெயர்ச்சி: மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். இன்னும் 1 மாத காலத்திற்கு புதன் சூரியன் செவ்வாயுடன் இணைந்து தனுசு ராசியில் பயணம் செய்யப்போவதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்: புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். பூா்வீக சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளில் விழிப்புணர்வு அவசியம். பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்: புதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்கிறார். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வரும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருமானம் திருப்தி தரும் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நாடி வரும்.
மிதுனம்: புதன் உங்கள் ராசி அதிபதி.. மற்றும் 4 ஆம் வீட்டுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். புதனின் நேரடி பார்வையால் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். நண்பர்கள் எதிரிகளாகும் நேரம் சர்வ எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். பாதிப்புகள் குறைய புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கலாம்.
கடகம்: உங்கள் ராசிக்கு 6வது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு புதன் செல்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. இது திருப்தியான காலமாகும். பண வருமானம் அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். சகோதா்களின் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வது நல்லது. சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
சிம்மம்: உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் புதன் பயணம் செய்யப்போவதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் தம்பதியர் இடையே பிரச்சினை வந்து போகும். சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வேலாயுதசாமியை தரிசனம் செய்யுங்கள் வேதனைகள் தீரும்.
கன்னி: உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். பண வருமானம் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவுகளும் வந்து போகும். வாகன லாபம் உண்டு. திருவெண்காடு சென்று புதன் பகவானை வணங்கி வர நன்மைகள் ஏற்படும்.
துலாம்: புதன் பகவான் உங்கள் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் பயணம் செய்வதால் நீண்ட தூர பயணங்கள் செல்வீர்கள். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்களின் உதவி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்னைகள் நீங்கும். பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது கடன் தொல்லைகள் நீங்கும். அப்பாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். அமாவாசை நாட்களில் அகத்திக்கீரை வாங்கி பசுவிற்கு கொடுக்கவும் நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்: புதன் உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பேச்சில் இனிமை கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் உடல் நலனில் காட்டுவது அவசியம். வெள்ளிக்கிழமையில் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு: புத்தி நாதன் புதன் உங்கள் ராசியில் அமர்ந்து பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் சிலருக்கு பணியில் கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. பாதிப்புகள் குறைய புதன்கிழமை தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கவும்.
மகரம்: புதன் பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு வேலைக்கும் செல்லும் யோகம் தேடி வரும். அலுவலகத்தில் பாலிடிக்ஸ் அதிகரிக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும்.
கும்பம்: புதன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். காதலிப்பவர்களுக்கு ஏற்ற காலம் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம்.
மீனம்: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் புதன் பயணம் செய்யப்போகிறார். வீடு, நிலம், வண்டி வாகனம் வாங்கலாம். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான கால கட்டம். சகல செளபாக்கியங்கள் தேடி வரும். பண வருமானம் அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தேடி வரும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சோ்க்கை உண்டாகும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications