• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதன் பெயர்ச்சி 2021: துலாம் ராசியில் சூரியன், செவ்வாயுடன் பயணிக்கும் புதனால் யாருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: புதன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் சஞ்சரிப்பார். கடந்த சில மாதங்களாக கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்றும் வக்ரமடைந்தும் பயணித்த புதன் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். நவம்பர் 02ஆம் தேதி முதல் சூரியன், செவ்வாயுடன் துலாம் ராசியில் பயணிக்கும் புதன் பகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

குரு ஆண்டுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடையும். சனி இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடையும். புதன் மாதம் ஒருமுறை இடப்பெயர்ச்சி அடையும். புதன் கிரகம் மிதுனம் கன்னி ஆகிய இரு வீடுகளில் ஆட்சி பெறுகிறார். தனது வீடான கன்னியில் புதன் உச்ச பலம் பெறுகிறார். எதிர் துருவமான குருவின் வீடான மீனத்தில் புதன் நீசமடைகிறார்.

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், பய உணர்வு, சஞ்சலம், சபல புத்தி, மனநலம் குன்றுதல், காக்கை வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகும்.
புத்திகாரகன் புதன் சுபகிரகங்களுடன் சேர்ந்திருக்கும் போது சுப பலன்களையும் அசுப கிரகங்களுடன் சேர்ந்திருக்கும் போது அசுப பலன்களையும் தருவார். ஜோதிடத்தில் புதன், சனி அலி கிரகங்கள். சூரியனிடமிருந்து அதிகமாக ஒளியை பெறும் கிரகம் புதன்.

புதன் பெயர்ச்சி 2021: துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி வக்ரமடையும் புதனால் யாருக்கு என்ன பாதிப்பு புதன் பெயர்ச்சி 2021: துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி வக்ரமடையும் புதனால் யாருக்கு என்ன பாதிப்பு

மேஷம்

மேஷம்

உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சாிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். காதலை சொல்ல இது ஏற்ற தருணம் அல்ல. உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் வந்து கையிருப்பு கரைந்து விடும். பணப்பிரச்னை தலையெடுக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலில் பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். களத்திர ஸ்தானத்தில் புதன் அமர்வதால் வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பாதிப்புகள் குறைய புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

6வது இடம் ருண ரோக ஸ்தானம். இது திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். புதன் 6வது இடமான ருண ரோக ஸ்தானத்தில் அமர்வதால் தோல் நோய்கள் ஏற்படலாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இதுவாகும். பேச்சு வன்மை அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழும் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். சகோதா்களின் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வது நல்லது. ஆறாம் வீட்டில் புதன் பயணம் செய்வதால் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வது அதிக நன்மை தரும்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் புதன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் தம்பதியர் இடையே பிரச்சினை வந்து போகும். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். எழுத்து பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். நண்பர்கள், உயரதிகாரிகள், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட வழியில் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள் அப்புறம் அது தொல்லையில் வந்து முடிந்து விடும். 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார்.புதன்கிழமைகளில் நவகிரக ஆலயத்திற்கு சென்று புதனை வணங்குங்கள்.

கடகம்

கடகம்

உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினா் வருகை உண்டு. பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். வாகன லாபம் உண்டு. உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். உங்கள் வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்கும். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சிறந்த வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலைப்பளு அதிகாிக்கும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். வேலையில் புரமோசன் ஏற்படும்.

சிம்மம்

சிம்மம்

புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்வதால் நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். பண வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை அதிகாிக்கும். புது முயற்சி செய்ய நல்ல நேரமாகும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும்.வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். எழுத்தாளர்களுக்கு நன்மை தரும் காலமாகும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் மருத்துவ செலவு அதிகரிக்கும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவா்களுக்கு பிரச்னை ஏற்படும்.

கன்னி

கன்னி

உங்க ராசிநாதன் புதன் நேற்று வரை உங்கள் ராசியில் இருந்தார். இனி புதன் உங்க ராசிக்கு 2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களின் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உதவிகள் வந்து சேரும். இந்த கால கட்டத்தில் எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.ஙபுதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிய மேலும் நன்மைகள் நடக்கும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசியில் சூரியன், செவ்வாயுடன் சஞ்சரிக்கும் புத பகவானால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். அலுவலகத்தில் பாலிடிக்ஸ் அதிகரிக்கும். எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும் உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். உடல் உபாதை ஏற்படும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

தனுசு

தனுசு

புதன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். பண வருவாய் உடன் திடீா் அதிர்ஷ்டம் ஏற்படும். வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும்.எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் புதன் பயணம் செய்கிறார். வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான இடமாகும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். கணவன், மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் கைகூடும். காதலை சொல்ல ஏற்ற தருணம் இதுவாகும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும்.

கும்பம்

கும்பம்

புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் சனி, சூரியனுடன் இணைந்து அமர்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும் காலமாகும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.

 மீனம்

மீனம்

புதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் பயணம் செய்கிறார். எட்டில் புதன் மறைவது நல்ல அமைப்புதான் என்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். இடம் பொருள் அறிந்து பேசினால் நல்லதே நடக்கும். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும். பணம் வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும்.

English summary
Budhan peyarchi palangal. Mercury transits Libra from 2nd november to 20th November 2021 check out impact On all zodiac signs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X