2020ஆம் ஆண்டில் கடகம் ராசிக்காரர்கள் பிசினஸில் கொடி கட்டி பறப்பீர்கள்
கடகம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு அதி அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. தொட்டது பொன்னாகும், பிசினஸ்ல லாபம் அதிகரிக்கப்போகிறது.
சென்னை: 2020ஆம் ஆண்டில் நமக்கு தொழிலில் லாபம் வருமா? வேலையை விட்டு விட்டு புது பிசினஸ் ஆரம்பிக்கலாமா என்று கடகம் ராசிக்காரர்கள் யோசித்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு 2020ஆம் ஆண்டு தொட்டது துலங்கும் ஆண்டாக அமையப்போகிறது. நீங்க செய்யும் பிசினஸ் உங்களுக்கு நல்ல லாபத்தை தரப்போகிறது. உங்க வாழ்க்கையில் ராஜயோகத்தை ஏற்படுத்தி தரப்போகிறது. உங்களுக்கு விபரீத ராஜயோக காலம். குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் ஆட்சி அமர்ந்துள்ளார். பிசினஸ்ல நீங்க கொடி கட்டி பறக்கப்போகிறீர்கள்.
ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள குரு பகவான் உங்க ராசிக்கு பத்தாம் வீடான மேஷத்தை பார்க்கிறார். தொழிலில் உற்சாகத்தை கொடுக்கும். கடகத்திற்க கண்டச்சனி காலம் என்றாலும் ஜீவன ஸ்தான அதிபதி சனி அவருடைய வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது உங்களுக்கு யோகமான கால கட்டம்.
தொழில் பார்ட்டனர்கள் ஸ்தானமான ஏழாம் வீடான மகரம் ராசியில் செவ்வாய் உச்சமடைபவர். அந்த வீட்டில் சனி அமர்ந்து உங்க ராசியை சனி பார்க்கிறார். நீங்க தொட்டது எல்லாம் பொன்னாகும். புதிய வேலைகள் கூட தொடங்கலாம். ஏழுக்கு அதிபதி ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது சச மகா யோகம்.

தொழிலில் லாபம்
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை குடும்ப சூழல் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். பணவரவு அற்புதமாக இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவினால் செலவுகள் அதிகம் வரும். சுப விரைய செலவுகள் வரலாம். வேலையில உற்சாகமாக இருப்பீர்கள். வளமான எதிர்காலம் உங்களுக்கு தென்படும். ஏழாம் வீட்டில் சனி அமர்ந்துள்ளது அற்புதம். மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
தொட்டது வெற்றியடையும், சவால்களை சந்தித்து வெற்றியடைவீர்கள்.

ஏற்றுமதி இறக்குமதி
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் சொத்துக்கள் சேர்க்கும் காலங்களாக இது உள்ளது. திருமண முயற்சிகள் கை கூடி வரும். வேலையில் மாற்றங்கள் பதவி உயர்வு வருமானம் அதிகரிக்கும். வெளிநாடுக்கு சென்று தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். காரணம் குருபகவான் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்று ஆட்சி பெற்றுள்ள சனியோடு இணையும் கால கட்டம் இது.

முதலீடு வேண்டாம்
ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை குரு பகவான் அதிசாரத்தில் இருந்து வக்ர நிலைக்கு செல்வார். பணம் உங்களுக்கு ரொம்ப சிக்கலாகவே இருக்கும். தொழிலில் பெரிதாக எதுவும் முதலீடு செய்யாதீர்கள் லாபம் வராது அதுவே மன உளைச்சலை ஏற்படுத்தும். பங்குச்சந்தையை பற்றி மனதளவில் நினைத்து கூட பார்க்காதீர்கள்.

தொழில் லாபம்
கடகம் ராசிக்கு அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை பார்த்தோம் என்றால் செப்டம்பர் இறுதியில் ராகு கேது பெயர்ச்சி ஏற்படுகிறது. ராகு லாப ஸ்தானத்திலும் கேது ஐந்தாம் வீட்டிற்கும் வருகிறது. குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு மாறுகிறார். செய்யும் தொழிலில் நிறைய லாபங்கள் கிடைக்கும். வெளிநாட்டில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வர்களுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும். தைரியமாக பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யலாம். மொத்தத்தில் 2020ஆம் ஆண்டு பிசினஸ்ல கொடி கட்டி பறப்பீர்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications