மிதுனம் ராசிக்காரங்களே... 2020ல் உங்க பிசினஸ் எப்படி இருக்கும்
மிதுனம் ராசிக்கு சனிபகவான் ஆயுள் ஸ்தானம், பாக்ய ஸ்தான அதிபதி. 2020ஆம் ஆண்டு மகரத்தில் சனி அமர்ந்து இருக்கும் காலத்தில் குரு பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார். சனிபக
சென்னை: 2020ஆம் ஆண்டில் நமக்கு தொழிலில் லாபம் வருமா? வேலையை விட்டு விட்டு புது பிசினஸ் ஆரம்பிக்கலாமா என்று மிதுனம் ராசிக்காரர்கள் யோசித்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு 2020ஆம் ஆண்டு தொட்டது துலங்கும் ஆண்டாக அமையப்போகிறது. நீங்க செய்யும் பிசினஸ் உங்களுக்கு நல்ல லாபத்தை தரப்போகிறது. பொன்னான ஆண்டாகவும் தொழிலில் லாபங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக அமையப்போகிறது.
சுரங்கத்துறை, எண்ணெய் நிறுவனங்கள் பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு அற்புதங்களை தரப்போகிறது.
2020ஆம் ஆண்டு மிதுனம் ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமையப்போகிறது. ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு கேது சஞ்சாரத்தை வைத்து பார்த்தால் 7ஆம் வீட்டில் குரு அமர்ந்திருப்பது யோகம். உங்கள் ராசிக்கு எட்டு, ஒன்பதாம் அதிபதியான சனி பகவான் அவரது வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். எட்டாம் அதிபதி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது அற்புதம். விபரீத ராஜயோகம். கடந்த காலங்களில் கஷ்டப்பட்டு வந்த உங்களுக்கு வரப்போகிற புத்தாண்டில் கவலைகள் தீரும் காலமாக அமைந்துள்ளது.
சனிபகவான் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார் நன்மையே செய்வார். மிதுனம் ராசிக்கு அஷ்டம சனியாக இருந்த போதிலும் தனம் மற்றும் ஜீவன ஸ்தானத்தில் சனியின் பார்வை விழுவதன் காரணமாக உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள இது ஒரு சிறந்த காலக் கட்டம் ஆகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் சனிபகவான் சகாயம் செய்யப்போகிறார்.

கூட்டுத்தொழில்
2020ஆம் ஆண்டில் ஜனவரி உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமரும் சனிபகவான் ராசிக்கு 10ஆம் இடத்தை சனிபகவான் பார்வை படுவதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவார்கள். சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். எச்சரிக்கையாக கையாளவும் வாக்குறுதி கொடுத்து மாட்டிக்காதீங்க. பணம் ஜாமின் கையெழுத்து போடவே போடாதீங்க.

தொழில் தொடங்கலாம்
சனிபகவான் விபரீத ராஜயோகத்தை ஏற்படுத்துவார். உங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி பின்னர் அந்த தடைகளை நீக்கக்கூடிய வலிமையை தருவார்.
சனிபகவான் ஆசையை தூண்டுவார். சனியின் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையை தூண்டுவார். இந்த கால கட்டத்தில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

சுரங்கத்தொழில்
சனிபகவானால் எண்ணெய் மற்றும் சுரங்க தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். ஊக வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், பங்கு வர்த்தகம் செய்பவர்கள் சிறந்த முறையில் தொழில் லாபம் காண்பார்கள். சிறு முதலீட்டாளர்களுக்கு தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். புரோக்கரேஜ் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டிய காலக் கட்டம் இது. 2021ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு நீங்கள் உங்கள் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.

வருமானம் பெருகும்
உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான தனுசுவிலிருந்து குரு பார்வை நேராக உங்க ராசியின் மீது விழுவதால் 2020 ஆம் ஆண்டு மிக அருமையான ஆண்டாகச் செல்லும். உங்கள் வருமானம் பெருகும். உங்கள் பொருளாதார வசதி மேம்படும். பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் வாழ்க்கைத் துணை உறுதுணையாக இருப்பார். அவர் மூலம் கிடைக்கும் பண வரவு மூலம் உங்களின் எதிர்பாரா செலவுகளை நீங்கள் சமாளிக்க இயலும். உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் அதிகரிக்கும்.

நன்மை தரும் ஆண்டு
அஷ்டமத்து சனி காலத்தில் மனதில் சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்படும் என்றாலும் சவால்களை சந்தித்து சாதிக்க வைப்பார். உங்க சுய ஜாதகத்தில் சனிபகவான் யோகத்தை தரக்கூடிய நிலையில் இருந்தால் சனிபகவான் உங்களுக்கு நிறைய நன்மைகளை தருவார். அதே நேரம் சரியில்லாத நிலையில் இருந்தால் பணம் கொடுக்கல் வாங்கல், பிசினஸ் முதலீடுகளில் ஜாக்கிரதையாக இருக்கவும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications