2020ல் ரிஷபம் ராசிக்காரர்கள் புது பிசினஸ் தொடங்கலாம் - வெளிநாடு வருமானம் வரப்போகுது
ரிஷப ராசிக்காரர்களே அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு ஒன்பதாம் வீட்டில் அமரும் சனி நல்ல லாபத்தை தரப்போகிறார். காரணம் உங்க லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுகிறது.
சென்னை: ரிஷப ராசிக்காரர்களே 2020ஆம் ஆண்டு முழுமையான விடியலை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. முதலில் கண்டச்சனி, அடுத்து அஷ்டம சனி என 5 ஆண்டுகள் அவதிப்பட வைத்து விட்டார் சனிபகவான். இனி உங்களுக்கு இருந்த குறைகள் நீங்கப்போகிறது. அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு ஒன்பதாம் வீட்டில் அமரும் சனி நல்ல லாபத்தை தரப்போகிறார். காரணம் உங்க லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுகிறது. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும் ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமையப்போகிறது.
உங்க ராசிக்கு சனிபகவான் பரிபூரண யோகத்தை தரக்கூடியவர் சனிபகவான். காரணம் அவர் உங்க ராசிக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வீட்டு அதிபதி. அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார். வெளிநாட்டில் இருந்து வருமானம் வரப்போகிறது. அஷ்டமத்து குருவாக இருந்தாலும் அதிர்ஷ்டத்தை தரப்போகிறார் காரணம் அவருடைய பார்வைதான்.
குரு எட்டாம் வீட்டில் அமர்ந்தாலும் அவரது பொன்னான பார்வை உங்க ராசிக்கு 12ஆம் வீட்டின் மீது விழுகிறது. வெளிநாடு செல்லும் யோகத்தையும் அங்கே போய் பிசினஸ் செய்யும் வாய்ப்பை தரப்போகிறார். உங்க எதிர்காலம் அற்புதமாக அமையப்போகிறது. இனி குரு, சனியின் அடுத்தடுத்த பெயர்ச்சிகள் அற்புதமாக இருக்கப் போகிறது. இனி உங்களுக்கு எல்லாம் சுகமாக அமையப்போகிறது.

பணவரவு தரும் ஆண்டு
சனி பகவான் இதுநாள் வரை கொடுத்து வந்த பிரச்சினைகளை இனி கொடுக்க மாட்டார். தடைகள் நீங்கும். தொழிலில் சரிவு நஷ்டமடைந்து கடனை சந்தித்தவர்களுக்கு இனி பிரச்சினைகள் தீரும். இனி நல்ல பலன்கள் 2020ஆம் ஆண்டு நடக்கப் போகிறது. தொழிலில் உங்க திறமை பளிச்சிடும். சாதிக்கப் போகிறீர்கள். கூடவே குருபகவான் பார்வையும் இரண்டாம் வீட்டின் மீது விழுகிறது உங்களுக்கு நீங்க செய்யப்போகும் தொழிலின் மூலம் லாபம் கிடைக்கும்.

வெற்றிகரமான ஆண்டு
அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு ஒன்பதாம் வீட்டில் அமரும் சனி நல்ல லாபத்தை தரப்போகிறார். காரணம் உங்க லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுகிறது. சனி பகவான் பார்வை ஆறாம் வீடான துலாம் ராசியின் மீது விழுகிறது. கடன் உங்க கழுத்தை இறுக்கியது. 2020ஆம் ஆண்டு சனிபகவான் உங்க கடன்களையும் நோய்களையும் தீர்ப்பார். நீங்க செய்யும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும்.

முதலீடுகளால் லாபம்
சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு பணவருவாய் அதிகமாக இருந்தாலும் உங்களின் நிதியை நிர்வாகம் செய்வதில் கரெக்டாக இருங்கள். பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு செய்யக் கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. காரணம் குருபகவான் கேது உடன் சஞ்சரிகிறார். அவர் அதிசாரமாக சஞ்சரித்து மகரம் ராசியில் சனியோடு சேரும் போது உங்களுக்கு வருமானம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டும்.

பொருளாதார நிலை
என்னதான் அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்கணும். மொத்தமாக பொருட்களை வாங்கி வைக்க வேண்டாம். விற்க விற்க வாங்கி வைக்கவும். அதிகமாக வாங்கி குவித்தாலும் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருக்கணும். யாருக்கும் தொழில் ரீதியாக கடன் கொடுக்கவேண்டாம். உங்க பொருளாதார நிலை நன்றாக அமையக்கூடியதாக ஏற்றங்களை தரக்கூடிய ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமையப்போகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications