2020ஆம் ஆண்டில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களின் பிசினஸ் எப்படி இருக்கும்
2020ஆம் ஆண்டு துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் எப்படி இருக்கும், புது பிசினஸ் ஆரம்பிக்கலாமா என்று கேட்பவர்கள் இந்த ராசி பலன்களைப் படியுங்கள். உங்களுக்கு எப்படி இருக்கும் என்று ப
மதுரை: 2020ஆம் ஆண்டில் நமக்கு தொழிலில் லாபம் வருமா? வேலையை விட்டு விட்டு புது பிசினஸ் ஆரம்பிக்கலாமா என்று துலாம், விருச்சிகம் ராசிக்காரர்கள் யோசித்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு 2020ஆம் ஆண்டு குரு பகவான் தனது வீட்டிலும் சனி பகவான் தனது வீடான மகரம் ராசியிலும் ஆட்சி பெற்று அமர்வதால் தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு தொழில் வளர்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.
துலாம் ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள் சிறப்பாக அமையும், பெண் தொழில் முனைவோர்கள் பிசினஸ் புதிய பிசினஸ் ஆரம்பிக்கலாம். அருமையான ஆண்டு. சனியின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. கேது நான்காம் வீட்டிலும் ராகு மூன்றாம் வீட்டிலும் அமர்ந்திருந்தாலும் உங்க ராசிக்கு
துலாம் ராசிக்காரர்களுக்கு பிசினஸ் செய்வதற்கு கடன் உதவி கிடைக்கும். காரணம் லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில் பார்ட்னர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். சனியின் பார்வை உங்க தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் புதிய தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படும்.

தொழில் முதலீடுகள்
துலாம் ராசிக்காரர்கள் புதிய தொழில் தொடங்கு முயற்சி செய்யலாம். ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு புதிய தொழில் தொடங்கலாம்.
தொழில் அதிபர்கள் இந்த ஆண்டு பெரிய வெற்றியை கொடுக்கும். நிறைய பணம் வரும் அதை நல்ல முறையில் முதலீடு செய்ய வேண்டும். அகலக்கால் வைக்க வேண்டாம். தேவையில்லாத முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்கவும். தலைக்கணம் பிடித்து ஆடக்கூடாது சனி தலையில் தட்டி வைப்பார். சனி பெயர்ச்சியால் தொழில் தொடங்கலாம். அதிக முதலீடுகள் செய்து மாட்டிக்கொள்ளலாம். மூடிய கம்பெனியை மறுபடியும் திறக்கலாம்.

சிறு முதலீடு பெரிய லாபம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது. சிறிது சிறிதாக வளர்ச்சி அடையலாம். ரொம்ப கடன் வாங்கி முதலீடு பண்ணாதீங்க.

அபார தொழில் வளர்ச்சி
விருச்சிகத்திற்கு விடியலைத் தரும். அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. இந்த வார்த்தையை படிக்கும் போது மனதிற்கு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும்.
இன்னும் 10 ஆண்டுகளுக்கு உங்களுக்கு தொழில் வளர்ச்சி அருமையாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கிறது. 2020ஆம் ஆண்டு மிகவும் நல்ல ஆண்டாக அமைகிறது. புதிய தொழில்களை ஆரம்பிப்பீர்கள்.

பண வரவு அதிகரிக்கும்
தொழில் கடன் உங்களைத் தேடி வரும். பெண்களும் கூட புதிய தொழில் தொடங்குவீர்கள். பொற்காலத்தின் கதவுகள் திறக்கப் போகிறது. குருவின் சஞ்சாரம் இரண்டாம் வீடான தனுசு ராசியிலும், சனியின் சஞ்சாரம் மூன்றாம் வீடான மகரத்திலும் இருப்பது சிறப்பு. குருவினால் பண வரவும் சனியால் தொழிலில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். ராகுவும் உங்களுக்கு வேண்டியதை கொடுக்கப் போகிறார் அப்புறம் என்ன சந்தோஷமாக 2020ஆம் ஆண்டை வரவேற்க தயாராகுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications