2020ஆம் ஆண்டில் சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் பிசினஸ் எப்படி இருக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020ஆம் ஆண்டில் நமக்கு தொழிலில் லாபம் வருமா? வேலையை விட்டு விட்டு புது பிசினஸ் ஆரம்பிக்கலாமா என்று கடகம் ராசிக்காரர்கள் யோசித்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு 2020ஆம் ஆண்டு தொட்டது துலங்கும் ஆண்டாக அமையப்போகிறது. நீங்க செய்யும் பிசினஸ் உங்களுக்கு நல்ல லாபத்தை தரப்போகிறது. உங்க வாழ்க்கையில் ராஜயோகத்தை ஏற்படுத்தி தரப்போகிறது. உங்களுக்கு விபரீத ராஜயோக காலம். சனி பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பு பிசினஸ்ல நீங்க கொடி கட்டி பறக்கப்போகிறீர்கள். குரு பகவான் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளது அற்புதமான அம்சம். தொட்டது துலங்கப்போகிறது.

கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அதிர்ஷ்டத்தை நம்பாதீங்க பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்க.

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள குரு பகவான் உங்க ராசிக்கு பத்தாம் வீடான மிதுனம் ராசியை பார்க்கிறார். தொழிலில் உற்சாகத்தை கொடுக்கும்.

கன்னி ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து உள்ள சனி அமர்ந்து உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டினை பார்க்கிறார். நீங்க தொட்டது எல்லாம் பொன்னாகும். புதிய தொழில் தொடங்கலாம். வெளிநாடு முதலீடுகள் லாபத்தை தரும்.

 தொழிலில் லாபம்

தொழிலில் லாபம்

ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானமான பஞ்சம ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன, சனி குரு கூடவே கேது கூட்டணி, சுக ஸ்தானத்தில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் ராகு இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. ஜனவரி இறுதியில் சனிபகவான் ஆறாம் வீட்டிற்கு நகர்வது சிறப்பு ஆன்மீக பயணம் அற்புதம், பௌர்ணமி நாளில் சந்திர தரிசனம் செய்யுங்கள். இனி தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். கூட்டணி தொழிலில் நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும். விசா, பாஸ்போர்ட் எளிதாக வந்து சேரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பங்குச்சந்தை வேண்டாம்

பங்குச்சந்தை வேண்டாம்


புதிய தொழில் தொடங்குவதிலும் முதலீடு செய்வதிலும் கவனமாக இருக்கவும். பங்குச்சந்தை முதலீடுகளும் இப்போதைக்கு தேவையில்லை.

சிறு தொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். ஆடை, ஆபரணம், ஜவுளி துறைகள் லாபகரமாகவும், நகை தொழில் சுமாராக இருந்து வரும். சுற்றுலா, பத்திரிக்கை, தொலைகாட்சி, சினிமா துறைகளில் வேலை செய்பவர்களுக்கு லாபம் அதிகம் இருக்கும். எதிர்பாராத பணம் வந்தாலும் அதனை கவனத்தோடு செலவு செய்யவும்.

வெற்றியான ஆண்டு

வெற்றியான ஆண்டு

சனி 7ம் பார்வையாக சிம்ம ராசிக்கு 12ம் இடத்தை பார்ப்பதால் வெளிநாடு செல்வதில் இருந்து வந்த தடை நீங்கி வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்பம் அமையும். முற்றிலும் புதிய சூழ்நிலைகளில் வாழும் நிலை ஒரு சிலருக்கு அமையும். பங்கு சந்தையில் முதலீடுகள் வேண்டாம் லாபம் தராது.

ஆரம்பத்தில் முயற்சியில் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும். விசா பாஸ்போர்ட்டில் இருந்த தடைகள் நீங்கும். நினைத்த நாடு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதியில் லாபம் கிடைக்கும்.

தொழிலில் வளர்ச்சி

தொழிலில் வளர்ச்சி

2020 ஆம் ஆண்டில் குரு நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். குருவின் சுபமான பார்வை உங்க ராசிக்கு பத்தாம் வீட்டின் மீது விழுகிறது. தொழில்ல இந்த வருஷம் முக்கிய வளர்ச்சிகள் ஏற்படும். எந்த தொழில் தொடங்கினாலும் நன்றாகவே இருக்கும். அதே நேரத்தில் பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்திடுங்க. குரு பகவான் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டை பார்ப்பதால் சம்பாதித்த பணத்தை சுப செலவுகளாக முதலீடு பண்ணுங்க. சொத்துக்கள் வாங்குங்க.

 உழைப்பு உயர்வு தரும்

உழைப்பு உயர்வு தரும்

ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும் என்பதால் கவனம் தேவை. சனிபகவான் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். அதை சேமிங்க. சரியான கால கட்டம் வரும் போது பெரிய அளவில முதலீடு பண்ணிருங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+