செவ்வாய் பெயர்ச்சி 2020: ருச்சிக யோகம் பெறப்போகும் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
வாழ்க்கை அதுபாட்டுக்கு போகுதேன்னு ரொம்ப டல்லா ஃபீல் பண்றீங்களா, இனி நல்லா போகும் கவலைப்படாதீங்க. செவ்வாய் பகவான் மகரம் ராசியில் உச்சம் பெறப்போகிறார். அவருடைய பார்வை மேஷம், கடகம்,
சென்னை: செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மார்ச் 22ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது. ஏற்கனவே திருக்கணித பஞ்சாங்கப்படி சனிபகவான் அங்கே பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் உச்சம் பெறப்போகிறார். பத்தாம் வீட்டில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். கால புருஷ தத்துவப்படி மகரம் ராசி பத்தாம் வீடு, அந்த வீட்டின் அதிபதி சனி, மகரம் ராசி செவ்வாய்க்கு உச்சவீடு, குருவிற்கு நீச்ச வீடு. சனி செவ்வாய் சேர்ந்திருக்கும் காலத்தில் குரு பகவானும் அதிசாரமாக பெயர்ச்சியாகி மகரத்திற்கு வரப்போகிறார். செவ்வாய் பெயர்ச்சியால் மேஷம், கடகம், துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு ருச்சிக யோகம் கிடைக்கிறது. செவ்வாயின் பார்வை மேஷம், கடகம், சிம்மம் ராசிக்கு கிடைக்கிறது.
அதென்ன ருச்சிக யோகம் அந்த யோகம் வந்தால் என்ன பலன்னு கேட்கறீங்களா? இது பஞ்சமகா புருஷ யோகம். செவ்வாய் பகவான் ஒருவரின் லக்னத்திலோ அல்லது 4,7,10 ஆம் வீட்டில் அமர்ந்து இருக்க அந்த வீடானது செவ்வாய்க்கு உச்சம் அல்லது ஆட்சி வீடாக இருந்தால் ருச்சிக யோகம் உண்டாகிறது. பெயர், புகழ் செல்வம் செல்வாக்கு அதிகமாகும். அரசாலும் யோகம் கூட தேடி வரும். உடல்பலமும் மன திடமும் கிடைக்கும். தயாள குணம் நிறைந்திருக்கும்.
இன்னும் சில நாட்களில் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெற்று அமரப்போகிறார். மேஷம் ராசி, மேஷம் லக்னத்திற்கு இது பத்தாம் வீடு, கடகம் ராசி லக்னத்திற்கு ஏழாம் வீடு, மகரம் லக்னம் ராசிக்கு ஒன்றாம் வீடு, துலாம் ராசி லக்னத்திற்கு இது நான்காம் வீடு. இதுநாள்வரைக்கு வாழ்க்கை அதுபாட்டுக்கு போகுதேன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்த மேஷம், கடகம், துலாம், மகரம் ராசிக்காரங்களும் செவ்வாய் பார்வை கிடைக்கும் சிம்ம ராசிக்காரரும் இனி ரொம்ப நல்லா ஃபீல் பண்ணுவீங்க. செவ்வாய் இனி 12 ராசியிலும் என்னென்ன பலன்களை கொடுக்கப் போகிறார்னு பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு பத்தாவது வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போகிறார். அவருடைய பார்வையும் உங்களுக்கு கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீங்க. உடல் நலத்தில இருந்த பிரச்சினைகள் தீரும். பிசினஸ் சும்மா பிச்சிக்கிட்டு போகும் நல்ல லாபம் வரும். உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நல்ல தொழில் அமையும் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் கிடைக்கும். சொத்துப்பிரச்சினை தீரும். விற்காமல் இருந்த நிலங்கள் லாபத்திற்கு விற்கலாம். செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்குங்கள் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்
உங்க ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்வதால் தொலைதூர பயணங்கள் ஏற்படும் ஆனாலும் இப்ப இருக்கிற சூழ்நிலையில வெளிநாடு பயணம் வேண்டாம் கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதரர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். அப்பாவின் கோபத்துக்கு ஆளாவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி வணங்கினால் நன்மைகள் நடக்கும்.

மிதுனம்
செவ்வாய் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்வது அத்தனை நல்ல விசயம் இல்லை. ரொம்ப கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.
கூர்மையான பொருட்களையும் நெருப்பு, மின்சாரச் சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படும். கவனம் இல்லாமல் இருந்து விட்டு பின்னர் அய்யோ ஷாக்கடித்து விட்டதே என்று பதற வேண்டாம். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்கள் குடும்பத்தினரிடம் பேசும் போது கவனமாக பேசவும். பணம் விசயத்தில் கவனமாக இருங்க செவ்வாய் கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படிக்கவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும்.

கடகம்
இதுநாள் வரை ஆறாவது வீட்டில் குரு, கேது உடன் அமர்ந்து இருந்த செவ்வாய் பகவான் இனி 7வது வீட்டில் சனியோடு அமரப்போகிறார். உச்சம் பெற்ற செவ்வாய் உங்களுக்கு ருச்சிக யோகத்தை தரப்போகிறார். ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. சந்தோஷங்கள் நிறைந்த காலமாக மாறப்போகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். குழந்தைகளுடன் உற்சாகமாக பொழுதை போக்குவீர்கள். கணவன் மனைவி இடையே வீண் விவாதங்களை தவிர்த்தால் போதும் அமைதி பூங்காவாக வீடு திகழும். செவ்வாய் சனியோடு அமர்வதால் உணவில் கட்டுப்பாடு அவசியம்.

சிம்மம்
ராசிக்கு 5வது வீட்டில் இருந்து 6வது வீட்டிற்கு இடம் பெயரும் செவ்வாய் உங்க ராசியை பார்க்கிறார். 12ஆம் வீடு, ஒன்பதாம் வீடுகளின் மீது செவ்வாய் பார்வை விழுகிறது. வீடு, மனை வாங்குவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் காசு புரட்டி புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வேலைக்காக பயணம் செய்வீர்கள். குடும்பத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ பிரச்சினைகள் ஏற்படும் பேச்சில் கவனமாக இருங்க. அரசு போட்டி தேர்வுகள் எழுதலாம்.

கன்னி
உங்க ராசிக்கு 4வது வீட்டில் கேது குரு உடன் இருந்த செவ்வாய் இனி சனியோடு சேர்ந்து உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. உஷ்ணமான உணவுகளை சாப்பிடாதீங்க. மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். சகோதரியின் திருமணத்தை போராடி முடிப்பீர்கள். சொத்து விற்பது, வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன பயணங்கள் செல்வீர்கள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகளில் உடல்நலனில் அக்கறை தேவை.

துலாம்
செவ்வாய் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து ருச்சிக யோகத்தை தரப்போகிறார். உங்களுக்கு ரொம்ப நன்மையை செய்வார். பண வரவு அதிகரிக்கும். வேலை, தொழிலில் லாபமும் புரமோசனும் ஏற்படும். ஆனால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். அம்மாவிற்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். சொத்து தகராறுகள் வந்து செல்லும் கவனமாக இருங்க. நடராஜரை உத்திரம் நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்
உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 3வது வீட்டில் குடியேறியுள்ளதால் உடன் பிறந்தவர்களின் ஒத்துழைத்தும், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும். முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டுமனை வாங்குவீர்கள்.

தனுசு
செவ்வாய் 2ஆம் வீட்டில் சனியோடு அமரப்போவதால் சிலர் புதிய வீடு ஏன் ஊர் கூட மாற வேண்டிய நிர்பந்தம் கூட ஏற்படும். உறவினர்களுடன் அன்போடும், பாசத்துடனும் பழகுங்கள். பேச்சில் கவனமாக இருங்க யாரிடமும் கோபமாக பேசவேண்டாம். சகோதரர், சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போங்கள். வீண் விவாதங்களை தவிருங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கவனம் தேவை.

மகரம்
செவ்வாய் உங்க ராசிக்கு 4, 11ஆம் வீட்டு அதிபதி உங்க பெர்சனாலிட்டி அதிகமாகும். சனி உங்க வீட்டில் குடியேறியுள்ள நிலையில் கூடவே செவ்வாயும் இணையப்போகிறார். உங்க ராசி லக்னத்தில் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போவதால் உங்களுக்கு ருச்சிக யோகம் கிடைக்கிறது. பணவருமானம் வரும். வேலைப்பளுவும் அதிகமாகும். கல்யாண வாழ்க்கையோ காதல் வாழ்க்கையோ கவனமாக இருங்க. ரொம்ப டென்சனா இருக்காதீங்க.
உங்களுக்கு ஏதோ பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். அப்படி எல்லாம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. பாதிப்புகள் குறைய புற்றுள்ள கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள்.

கும்பம்
எதிர்பாராத செலவுகள் வரலாம் காரணம் விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சனியோடு சஞ்சரிக்கிறார். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். திடீர் வெளிநாடு வாய்ப்புகள் வரலாம் நிறைய பேர் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவீர்கள். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் இதுவே உங்க மண வாழ்க்கையை பாதிக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். தொழிலில் வருமானம் அதிகமாக இருக்கும். பணத்தை முதலீடு செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.

மீனம்
ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து உள்ளதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவி செய்வார்கள். தொலைதூர பயணங்கள் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்களுடைய நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு பிள்ளைகளும் குடும்பத்தினரும் முக்கியத்துவம் தருவார்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.
உங்க காதல் வாழ்க்கையில் உற்சாகம் பிறக்கும். புதிய உறவுகள் சந்தோஷத்தை கொடுக்கும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications