செவ்வாய் பெயர்ச்சி 2023: செவ்வாய் பார்வையால் யாருக்கு பொற்காலம்? வீடு வாங்கும் 5 ராசிக்காரர்கள்
செவ்வாய் பகவானின் பார்வையால் சிலருக்கு பொற்காலம் ஆரம்பிக்கிறது. செவ்வாய் பெயர்ச்சியால் யாரெல்லாம் வீடு வாங்குவார்கள் என பார்க்கலாம்.
சென்னை: மங்களகாரகன் செவ்வாய் பகவான் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்து புதன் வீடான மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். செவ்வாய் பகவான் கோச்சாரப்படி 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் நன்மை செய்யக்கூடியதாகும். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகிறது வீடு, மனை வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
செவ்வாய் பகவானின் பார்வை சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொற்காலத்தை கொடுக்கும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சுப காரியத்தை நடத்தி வைப்பார் செவ்வாய் பகவான். பூமிகரகன் செவ்வாய் அருள் இருந்தால்தான் பூர்வீகச் சொத்துகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கைக்கு வந்து சேரும். சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் பங்களா போன்றவை செவ்வாய் பகவானின் தயவு இருந்தால்தான் நம்மால் பெறமுடியும்.
செவ்வாய் ரத்தத்திற்கும் விபத்திற்கும் காரகர். உடன் பிறப்புகளுக்கும் காரகர். ராணுவம், காவல்துறை போன்ற பணி செய்பவர்களுக்கும் காரகராக திகழ்கிறார். சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் பங்களா போன்றவை செவ்வாய் பகவானின் தயவு இருந்தால்தான் நம்மால் பெற முடியும். தடையின்றி வீடு கட்ட செவ்வாய் பகவானின் அருள் வேண்டும். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார். மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகியுள்ள செவ்வாய் பகவானால் யாருக்கெல்லாம் வீடு கட்டும் யோகம் கைகூடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
உங்கள் ராசி அதிபதியும் எட்டாம் வீட்டு அதிபதியுமான பகவான் செவ்வாய் 3ம் வீட்டில் பயணம் செய்வது அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். எங்கிருந்தாவது வந்து பணம் கொட்டும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குபேர யோகமும் கோடீஸ்வர யோகமும் தேடி வரப்போகிறது. வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும்.

சிம்மம்
செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் 45 நாட்களுக்கு பயணம் செய்யப்போவதால் வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய செல்வாக்குக் கூடும். ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள், பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். அரசு உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் உற்சாகம் பிறக்கும். மூத்த சகோதர, சகோதரிகளின் உறவு பலப்படும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தை தரும்.

கன்னி
செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் பயணம் செய்வதால் வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும் வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கூடும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும்.

மகரம்
செவ்வாய் பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். செவ்வாய் 6ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆறாம் வீட்டில் செவ்வாய் அமர்வது அற்புதமான கால கட்டம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். செவ்வாய் பகவானின் பார்வையும் உங்கள் ராசியின் மீது படுகிறது. புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. சிலர் புதிய தொழில்களை தொடங்குவார்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வீடு மனை வாங்க ஏற்ற கால கட்டம். தாய் பத்திரங்களை ஒருமுறைக்கு இருமுறை பார்த்து வாங்கவும்.

மீனம்
செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்வதால் டென்சன் அதிகமாக இருக்கும் காலகட்டமாகும். கணவன் மனைவி இடையே வீண் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். பணி செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சில காரியங்கள் தடைப்பட்டு வெற்றிகரகமாக முடிவுக்கு வரும். டென்சனை குறைத்துக்கொண்டால் வெற்றியும், அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். வீடு, நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வீடு மனை வாங்க யோகமான காலகட்டமாகும் வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications