Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வாய் பெயர்ச்சி 2023: நீர் ராசியில் நீச்சமடையும் நெருப்பு செவ்வாய்..யாருக்கு தண்ணியில கண்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சூரியனின் தளபதி செவ்வாய். சகோதர காரகன் பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முதலானவற்றுக்கு காரகத்துவம் வாய்ந்தவராகத் திகழ்பவர் செவ்வாய். பிற கிரகங்களுடனான இவரது சேர்க்கை, மிக முக்கியமான பலாபலன்களைத் தரவல்லது. செவ்வாய் கடகத்தில் நீசமடைவது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் சில நேரங்களில் நீச பங்கமடைவார். செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு பாதிப்பு என்று பார்க்கலாம்.

செவ்வாய் பகவான்: மே 10ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் கடகத்தில் சஞ்சரிப்பார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார். இனி 45 நாட்களுக்கு கடகத்தில் நீசமடைந்து தனது சக்தியை இழந்து காணப்படுவார். அதே நேரத்தில் சுக்கிரனும் சில வாரங்கள் இணைவதால் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.

மேஷம்: செவ்வாய் உங்கள் ராசி அதிபதி. உங்கள் ராசி அதிபதி நான்காம் வீட்டில் அமர்கிறார். அதுவும் நீசமடைவதால் அவரின் சக்தி குறைந்து காணப்படுகிறது. இந்த காலத்தில் அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். தண்ணீர் ராசியில் நெருப்பு கிரகம் நீசம் பெற்ற நிலையில் அமர்வதால் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இந்த கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்கி வர மனக்குழப்பங்களும், போராட்டங்களும் நீங்கும்.

ரிஷபம்: செவ்வாய் உங்க விரைய ஸ்தான அதிபதி, களத்திர ஸ்தான அதிபதி செவ்வாய் மூன்றாம் வீட்டில் அமர்கிறார். முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் கூடும். எங்கிருந்தாவது பணம் கொட்டும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையிலும் காதல் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த செவ்வாய் ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் அமர்கிறார். பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை. முக்கியமாக மது அருந்திவிட்டு பேச வேண்டாம். பங்குச்சந்தை முதலீடுகளில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். முருகனுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய நன்மைகள் நல்லதே நடக்கும்.

Chevvai Peyarchi 2023: Mars Transit From Mithunam to Kadagam how will affect Your Moon Sign

கடகம்: உங்கள் ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்று அமர்வது சிறப்பானதல்ல. உடல் நலத்தில் சிக்கல்கள் வரும் நோய்கள் தலைதூக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அதே போல வேலையிலும் பளு கூடும். அதைப்பற்றி கவலைப்படாமல் வேலையில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. பழனிமலை ஆண்டவரை படியேறி தரிசனம் செய்ய தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். நமச்சிவாய மந்திரத்தை தினசரியும் படித்து வர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்: செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரைய செலவுகள் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். உடல்நலப்பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். இந்த காலகட்டத்தில் ரத்த தானம் செய்யுங்கள் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து விடுபடலாம். குரு பார்வையிருப்பதால் வீடு, நிலம், வண்டி வாகனம் வாங்கலாம் ஒருமுறைக்கு இருமுறை தெளிவாக விசாரித்து வாங்குவது நல்லது. செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம் படிக்க பாதிப்புகள் குறையும்.

கன்னி: லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்வது நன்மை தரக்கூடியது. பேசும் பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம். வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் பதவி உயர்வு கிடைக்கும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். செவ்வாய்கிழமைகளில் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசிக்க பெரிய அளவிலான பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

துலாம்: உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் உத்யோக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது சிறப்பம்சம். செய்யும் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையை தரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை கொடுக்கும். பழனி மலைமேல் இருக்கும் முருகனை வழிபட மேலும் நன்மைகள் கிடைக்கும்.
விருச்சிகம்

விருச்சிகம்: செவ்வாய் உங்கள் ராசிநாதன். நீச்சம் பெற்று ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலை விசயமாக செல்லும் வெளியூர் பயணம் அத்தனை நன்மையை தராது எனவே இந்த கால கட்டத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்ளுங்கள் பாதிப்புகள் குறையும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். விபத்தில் சிக்காமல் தவிர்க்க ரத்த தானம் செய்யுங்கள். கையில் இருந்த பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். கோடைமழையில் நனையாதீர்கள். நோய்களில் இருந்து தப்பிக்க கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். உடல் நலப்பிரச்சினைகள் தீரும்.

Chevvai Peyarchi 2023: Mars Transit From Mithunam to Kadagam how will affect Your Moon Sign

தனுசு: செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். எட்டாம் வீட்டில் அமரும் செவ்வாயினால் எதைக்கண்டாலும் பயம் உண்டாகும். தேவையற்ற கோபமும் எரிச்சலும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே கோபப்பட்டு சண்டைக்கு செல்வீர்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகள் வந்து செல்லும். வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். வயிறு பிரச்சினைகள் வரும் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். குருவின் பார்வையில் இருப்பதால் குழப்பங்கள் நீங்கும். செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானை வணங்கலாம் வெள்ளிக்கிழமை துர்க்கையை வணங்கலாம்.

மகரம்: உங்கள் ராசிநாதன் சனிக்கு எதிரி செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் உச்சமடைபவர். நீச்சம் பெற்று கடகத்தில் அமர்ந்துள்ளார். களத்திரஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன செல்ல சண்டைகள் வரும். கோடை காலத்தில் உடல் சூட்டினால் வயிறு வலி வரும். செவ்வாய் ராசிக்கு ஏழாம் பார்வையாக பார்ப்பதால் திருமண விசயங்கள் கை கூடி வரும். கணவன் மனைவி சண்டை,கோபம், எரிச்சல் தீர பழமுதிர்சோலை சோலைமலை முருகனை தரிசனம் செய்யுங்கள்.

கும்பம்: உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்வது நற்பலன்களை தரும். இது அற்புதமான கால கட்டம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.தனவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ராசி அதிபதி சனிபகவானுக்கு அவர் பகை கிரகம் என்றாலும் ஆறில் செவ்வாய் அமர்வதால் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் வணங்கினால் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்: செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். திடீர் மருத்துவ செலவுகளினால் அவதிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். செயற்கை குளிர்பானங்களை குடிக்காதீர்கள். பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சுவாமிமலை முருகனை சரணடையுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+