செவ்வாய் பெயர்ச்சி 2023: மிதுனத்திற்கு இடம் மாறும் செவ்வாய்..யாருக்கு பொற்காலம்..பண மழை யாருக்கு
மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் செவ்வாய் பகவானால் மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொற்காலம் ஆரம்பிக்கப்போகிறது.
சென்னை: மங்களகாரகன் செவ்வாய் பகவான் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்து புதன் வீடான மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் பெயர்ச்சியால் மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொற்காலம் ஆரம்பிக்கப்போகிறது. செவ்வாய் பகவான் கோச்சாரப்படி 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் நன்மை செய்யக்கூடியதாகும். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை தரப்போகிறது யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

செவ்வாய் ரத்தத்திற்கும் விபத்திற்கும் காரகர். உடன் பிறப்புகளுக்கும் காரகர். ராணுவம், காவல்துறை போன்ற பணி செய்பவர்களுக்கும் காரகராக திகழ்கிறார். சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் பங்களா போன்றவை செவ்வாய் பகவானின் தயவு இருந்தால்தான் நம்மால் பெற முடியும். தடையின்றி வீடு கட்ட செவ்வாய் பகவானின் அருள் வேண்டும். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார். மேஷம், விருச்சிகம் சொந்த வீடு. கடகத்தில் நீசமடையும் செவ்வாய் மகரகத்தில் உச்சமடைகிறார். கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் வக்ரமடைந்தும் பின்னர் நேராகவும் பயணம் செய்து வருகிறார். இன்னும் சில நாட்களில் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் செவ்வாய் பகவான் யாருக்கு என்ன பலன் தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
மேஷம்

உங்கள் ராசி அதிபதியும் எட்டாம் வீட்டு அதிபதியுமான பகவான் செவ்வாய் 3ம் வீட்டில் பயணம் செய்வது அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. தொட்ட காரியங்கள் துலங்கும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கணவன்மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எங்கிருந்தாவது வந்து பணம் கொட்டும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குபேர யோகமும் கோடீஸ்வர யோகமும் தேடி வரப்போகிறது.
ரிஷபம்

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குடும்ப உறவுகளிடையே உற்சாகம் பிறக்கும். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும். சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.
மிதுனம்

செவ்வாய் உங்கள் ராசிக்குள் வரப்போகிறார். முன்கோபம் அதிகமாகும். வீட்டில் தம்பதியரிடையே வாக்குவாதத்தை தவிர்க்கவும். வீண் சண்டைகளை தவிர்த்து விடலாம். உடல் உஷ்ணத்தால் பாதிப்பு ஏற்படும். சிறுசிறு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது. குறிப்பாக செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
கடகம்

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் மறையப்போகிறார். அதிக கோபம் ஆபத்தில் முடியும் என்பதால் கவனம் தேவை. நிலம், வீட்டு மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். உடல்நலப்பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். உங்களின் வேலையில் பிறரை தலையிட விட வேண்டாம். குறை சொல்பவர்களைப் பற்றி கண்டு கொள்ள வேண்டாம். இரவு நேர பயணத்தை தள்ளிப்போடுங்கள்.
சிம்மம்

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் வருமானம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள், பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கணவன் மனைவி உறவில் உற்சாகம் பிறக்கும். எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் காதல் பறவைகளாக சிறகடித்துப் பறப்பார்கள். புதிய காதல் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
கன்னி

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். போட்டி தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
துலாம்

செவ்வாய் பகவான் ஒன்பதால் வீட்டில் பயணம் செய்யும் நேரம் அதிர்ஷ்டம் தேடி வரும். அரசு தேர்வு எழுதச்செல்பவர்ளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். பணிசெய்யும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கையில் இருந்த பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்

உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 8ஆம் வீட்டில் அமரப்போவதால் குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே மனக்கசப்புகள் வந்து நீங்கும். வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உரிய ஆவணங்கள் இல்லாமல் யாருக்கும் பண தர வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வீண் விவாதங்களெல்லாம் வேண்டாம். சக ஊழியர்களுக்காக அதிகம் பரிந்துப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்.
தனுசு

செவ்வாய் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கு வரப்போவதால் உங்களுக்கு பண பலம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை காட்டவும். சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். களத்திரஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பலரின் செயல்கள் எரிச்சலை தரும். வேலைப்பளு அதிகரிக்கும். கண்களில் எரிச்சலுடன் கூடிய வலி வந்து நீங்கும்.
மகரம்

செவ்வாய் பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு வரப்போவதால் வீட்டில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆறாம் வீட்டில் செவ்வாய் அமர்வது அற்புதமான கால கட்டம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. சிலர் புதிய தொழில்களை தொடங்குவார்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும்.
கும்பம்

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு வரப்போவதால் பிள்ளைகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்சனை தலைத்தூக்கும். பாகப்பிரிவினை விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உடல் உபாதைகளும் எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் அதனை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். வழக்கு விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை.
மீனம்

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் வீடு மனை வாங்க யோகமான காலகட்டமாகும். சில காரியங்கள் தடைப்பட்டு வெற்றிகரகமாக முடிவுக்கு வரும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வேலை செய்யும் இடத்தில் டென்சனை குறைத்துக்கொண்டால் வெற்றியும், அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். வீடு, நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications