Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வாய் பெயர்ச்சி 2023: காதல் ராசியில் கேது உடன் குடியேறும் செவ்வாய்.. குரு மங்கல யோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னி ராசியில் சூரியன் உடன் பயணம் செய்யும் செவ்வாய் காதல் கிரகமான துலாம் ராசியில் கேது உடன் இணையப்போகிறார். அக்டோபர் 3ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பார்வை செவ்வாய்க்கு கிடைப்பதால் குரு மங்கல யோகமும் உருவாகிறது.
இந்த சஞ்சாரம் கூட்டணியால் திடீர் அதிர்ஷ்டமும் கோடீஸ்வர யோகமும் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

செவ்வாய் பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முதலானவற்றுக்கு காரகத்துவம் வாய்ந்தவராகத் திகழ்பவர். செவ்வாய் சிவந்த நிறம் கொண்டவர் என்பதால் சிகப்பு நிறத்திற்கு இவரே அதிபதி ஆகிறார். பூமி காரகன் என்பதால் மண்ணில் செய்யக் கூடிய விஷயங்கள் மண்ணால் செய்யக் கூடிய மண் பாண்டங்கள், நெருப்பு சம்பந்தமான வேலைகள், ரத்தம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயங்கள், ஆயுதம் சம்பந்தப்பட்டவைகள், ராணுவம், பவளம், துவரம் பருப்பு, வீரியம், ராணுவத் தலைமை, கிரானைட், கிரஷர், ஜல்லி, அதிகாரம், ஆணவம், சகோதர, சகோதரிகள், சகோதர வழி உறவுகள், தந்தைவழி உறவுகள். போர், கலகம், தைரியம் பொய்,வன்முறை,உற்சாகம்,திடீர் மரணம்,ரண நோய் ஆகியவற்றிற்கு செவ்வாயே காரகன் ஆவார். யுத்த கிரகம் செவ்வாய் காதல் ராசியான துலாம் ராசியில் கேது உடன் இணையப்போகிறார். சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

Chevvai Peyarchi palan 2023: Mars shift from Kannai to Thulam prediction for 12 zodiac signs

மேஷம்: உங்கள் ராசி அதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியையும், குரு, ராகுவையம் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு செவ்வாய் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் திருமண விசயங்கள் கை கூடி வரும். காதல் மலரும் திருமணம் கைகூடி வரும். ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பலரின் செயல்கள் எரிச்சலை தரும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் சூட்டினால் வயிறு வலி வரும். வீட்டில் தம்பதியரிடையே பிரச்சினைகள் வந்து போகும். ஒரே வாகனத்தில் இருவரும் சேர்ந்து செல்வதை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவை தவிர்க்கவும். கோபம், எரிச்சல் தீர பழமுதிர் சோலையில் அருள்பாலிக்கும் சோலைமலை முருகனை தரிசனம் செய்யுங்கள் நன்மையே நடைபெறும்.

ரிஷபம்: செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். ஆறில் செவ்வாய் அமர்வதால் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. சிலர் புதிய தொழில்களை தொடங்குவார்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். கடலோரத்தில் எழுந்தருளியிருக்கும் திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் வணங்க எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: உங்கள் ராசிக்கு 5வது வீட்டிற்கு வரப்போவதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. காதல் மலரும் காலம். பூர்வீக சொத்து விற்பது, வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன பயணங்கள் செல்வீர்கள். உடல் உபாதைகளும் எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் அதனை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகளின் உடல்நலனில் அக்கறை தேவை. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

கடகம்: கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் வரப்போகிறார். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். உங்கள் சுக ஸ்தானத்தில் அமரப்போகும் செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாய் பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். செவ்வாய் பகவான் உங்களுக்கு நன்மையே செய்வார். பண வரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க கவலைகளும் துன்பங்களும் பறந்தோடும்.

சிம்மம்: உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கப்போவதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டுமனை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைத்தும், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும். மூன்றாம் வீட்டில் இணையப்போகும் கூட்டணியால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருக்க முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் கூடும். எங்கிருந்தாவது பணம் கொட்டும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும். உங்கள் மனைவி நலனில் அக்கறை காட்டுங்கள். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையிலும் காதல் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறுபயணங்கள் நன்மையை ஏற்படுத்தும்.

கன்னி: உங்கள் ராசியில் சூரியனுடன் பயணம் செய்யும் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த செவ்வாய் ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் அமர்கிறார். பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உறவுகளிடம் சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். கலக்கமும், கலவரமும் அதிகரிக்கும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சிலர் புதிய வீடு ஏன் ஊர் கூட மாற வேண்டிய நிர்பந்தம் கூட ஏற்படும். அதிக செலவுகளைப் பார்த்து அஞ்ச வேண்டாம் வருமானமும் அதிகரிக்கும். கந்த சஷ்டி கவசம் படியுங்கள்.

துலாம்: காதல் ராசியான உங்கள் ராசியில் செவ்வாய் குடியேறியுள்ளார். உங்களுக்கு ஏதோ பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் அமர்கிறார். உங்களின் அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். பேச்சில் உற்சாகம் பிறக்கும் கூடவே கோபமுடம் வரும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலத்தில் சிக்கல்கள் வரும் நோய்கள் தலைதூக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும்.உங்கள் கருத்துக்கு மதிப்பு மரியாதை கூடும். அப்பா உடனான உறவில் பாசம் கூடும். பழனிமலை ஆண்டவரை படியேறி தரிசனம் செய்ய தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும்.

விருச்சிகம்: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். 12வது வீடு விரைய ஸ்தானம். செலவுகள் சும்மா பிச்சிக்கிட்டு போகும். லாப ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் விரைய ஸ்தானத்தில் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் மூத்த சகோதரர்களால் ஆதாயமும் லாபமும் உண்டு. பாக்கெட் ஓட்டையாகும் பர்ஸ் காலியாகும் . கூடவே வருமானம் அதிகரிக்கும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். எதையும் சட்டப்பூர்வமாக செய்யுங்கள். மருத்துவ செலவுகள் வரும். வெளிநாடு தொடர்புகள் மூலம் வருமானம் வரும். செலவுகள் அதிகரிக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் வீணாக செலவுகள் ஏற்படும் கவனமாக இருக்கவும். சிவ ஆலயங்களில் துவரம் பருப்பு தானம் செய்யுங்கள். தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

தனுசு: லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்வது நன்மை தரக்கூடியது. பேச்சில் கோபம் வேண்டாம். பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பேசும் பேச்சில் நிதானம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம். பணவருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடக்கூடிய கால கட்டமாகும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து முருகனை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மகரம்: தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். உங்கள் செயல்களே உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கும். உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையை தரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். குடும்பத்தில் சின்னச் சின்ன கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை தரும். பழனி மலைமேல் இருக்கும் முருகனை வழிபட மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்: செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்து பல கஷ்டங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சில நாட்களில் ஒன்பதாம் வீட்டில் அமரப்போகிறார். ஜென்மச்சனியின் கால கட்டம் உங்களை கஷ்டப்படுத்துகிறது. இந்த கஷ்டத்தையும் கடந்து விடுவீர்கள். வெளிநாடு போக வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் தயவு செய்து தள்ளிப்போடுங்கள். ஆன்மீக பயணம் செல்வது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கையில் இருக்கும் பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். உடல் நலப்பிரச்சினைகள் தீரும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

மீனம்: எட்டாம் வீட்டில் அமரபோகும் செவ்வாயினால் எதைக்கண்டாலும் பயம் உண்டாகும். தேவையற்ற கோபமும் எரிச்சலும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே கோபப்பட்டு சண்டைக்கு செல்வீர்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகள் வந்து செல்லும். வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். சிரமமான கால கட்டம்தான் என்றாலும் பரிகாரம் செய்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். வயிறு பிரச்சினைகள் வரும் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு சிறப்பானதல்ல வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். முருகன் கோவிலுக்கு செல்லுங்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானை வணங்கலாம் வெள்ளிக்கிழமை துர்க்கையை வணங்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+