செவ்வாய் பெயர்ச்சி: நெருப்பு ராசியில் சூரியன் + செவ்வாய்.. 2024ல் குரு பார்வை தரும் குபேர யோகம்
சென்னை: நெருப்பு ராசியான தனுசு ராசியில் நெருப்பு கிரகங்களான சூரியனும் செவ்வாயும் கூட்டணி சேர்ந்து 29ஆம் தேதி முதல் பயணம் செய்யப்போகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணிக்கு குருவின் பார்வையும் கிடைப்பதால் சில ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகின்றன. 2024ஆம் ஆண்டு முதல் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: செவ்வாய் உங்கள் ராசிக்கு அதிபதி. இதுநாள் வரை எட்டாம் வீட்டில் இருந்து பல கஷ்டங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் சூரியனுடன் பயணம் செய்யப்போகிறார் செவ்வாய். குருபகவானின் பார்வையும் கிடைப்பதால் வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். திருமணமான தம்பதிகள் சந்தோஷமாக இருப்பீர்கள். செவ்வாயின் பார்வை விரைய ஸ்தானம், முயற்சி ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுகிறது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் வரும். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

ரிஷபம்: செவ்வாய் பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 8 வது வீட்டில் சூரியனுடன் பயணம் செய்யப்போவதால் ரத்தம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிக கவனம் தேவை. மன அழுத்தம் கூடும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானமாக செல்வது நல்லது. விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது சிறு சிறு விபத்துகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. ரத்ததானம் செய்வது அவசியம். செவ்வாயின் பார்வை குடும்ப ஸ்தானம், தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். மூன்றாம் வீட்டில் செவ்வாயின் பார்வை விழுவதால் தைரியம் கூடும். காரமான உணவுகள் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம் வயிறு பிரச்சினைகள் வந்து விடும் கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட நன்மைகள் நடைபெறும்.
மிதுனம்: செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். உஷ்ண கிரகம் செவ்வாயும் சூரியனும் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வார்த்தைகளில் அனல் பறக்கும் வீட்டில் மனைவியிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் சண்டை வரலாம். பேச்சில் அமைதியை கடைபிடியுங்கள். மங்களகாரகன் செவ்வாய் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது திருமணம் கைகூடி வரும். அவரது எட்டாம் பார்வை உங்கள் குடும்ப ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. உங்க தொழில் ஸ்தானத்தின் மீது செவ்வாயின் பார்வை விழுவதால் புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.
கடகம்: ஆறாம் வீடு எதிரி ஸ்தானம், அந்த வீட்டில் சனியோ செவ்வாயோ அமர்வது அற்புதமான அமைப்பு. உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய் பகவான். நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் அமைதியாக இருக்கும். செவ்வாயின் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் காதலில் வெல்வீர்கள். செவ்வாய் பகவானால் காதலில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிரிகளை அடையாளம் கண்டு ஓட ஓட விரட்டுவீர்கள். ஆறாம் இடம் நோய் ஸ்தானம் என்பதால் உங்க உடல் நலனில் அக்கறை தேவை. செவ்வாய் கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்: உங்கள் ராசிக்கு ஐந்தாவது இடத்தில் செவ்வாய் சூரியன் பயணம் செய்வதால் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். மனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்திகள் தேடி வரும். சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் அற்புதமாக இருக்கும். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், லாப ஸ்தானம், ஆயுள் ஸ்தானத்தின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் எதிர்ப்புகள் வலுக்கும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதிக செலவுகளினால் அவதிகள் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள்
கன்னி: உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். உங்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாய் பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். செவ்வாய் பகவான் உங்களுக்கு நன்மையே செய்வார். பண வருமானம் அதிகரிக்கும். ஆனால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குரு பகவான் பார்வையால் உங்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வெள்ளிக்கிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மரை வணங்கி வர மனக்குழப்பங்களும், போராட்டங்களும் நீங்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications