செவ்வாய் பெயர்ச்சி பலன் 2023: விருச்சிகத்தில் ஆட்சி பெறும் செவ்வாய்.. விபரீத ராஜயோகம் யாருக்கு?
சென்னை: வீரத்தின் நாயகன் செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யப்போகிறார். சொந்த வீட்டில் அமரும் செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் இருந்து கும்பம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார். செவ்வாய் பகவான் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த செவ்வாய் ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உறவுகளிடம் சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். கலக்கமும், கலவரமும் அதிகரிக்கும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். இந்த மாதம் முழுவதும் உறவினர்களுடன் அன்போடும், பாசத்துடனும் பழகுங்கள். அதிக செலவுகளைப் பார்த்து அஞ்ச வேண்டாம் முருகனுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்யவும். கந்த சஷ்டி கவசம் படிக்க நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்: உங்க ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்கிறார். உங்களின் அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். பேச்சில் உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலத்தில் சிக்கல்கள் வரும் நோய்கள் தலைதூக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அதே போல வேலையிலும் பளு கூடும். அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பழனிமலை ஆண்டவரை படியேறி தரிசனம் செய்யவும் நன்மைகள் நடைபெறும்.
தனுசு: செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 12 வது வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் விரைய ஸ்தானத்தில் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும் வரும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். சின்ன சின்ன உடல் நல குறைபாடுகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும். சின்னச் சின்ன பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம். செவ்வாய்கிழமை சிவ ஆலயங்களில் துவரம் பருப்பு தானம் செய்யுங்கள். தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.
மகரம்: உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நன்மை தரக்கூடியது. பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பேசும் பேச்சில் நிதானம் தேவை. வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபமும் பணவருமானமும் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ரத்தக்கொதிப்பு இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை சிகிச்சை தேவை. செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து முருகனை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

கும்பம்: பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் பதவி யோகம் தேடி வரும். உங்களின் சிறப்பான பணிகளால் உத்யோக உயர்வை பெறுவீர்கள். செய்யும் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். செவ்வாய் பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை தரும். பழனி மலைமேல் இருக்கும் முருகனை வழிபடுங்கள். கந்த சஷ்டி விரதம் கடைபிடித்து முருகப்பெருமானை வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கும்.
மீனம்: செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்து பல கஷ்டங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.
ஆன்மீக பயணம் மேற்கொள்ளுங்கள் பாதிப்புகள் குறையும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் இருக்காது என்றாலும் நிநி நிலைமை நிலையாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். திருமணமான தம்பதிகள் சந்தோஷமாக இருப்பீர்கள். கந்த சஷ்டி கவசம் படிக்க கவலைகள் நீங்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications