செவ்வாய் பெயர்ச்சி பலன் 2023: ருச்சிக யோகத்தை ருசிக்கப்போகும் 4 ராசிக்காரர்கள்.. அடி தூள்!
சென்னை: செவ்வாய் தனது வீடான விருச்சிகத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். செவ்வாய் பகவான் பூமி காரகன், வலிமையான கிரகம், செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு வீடு மற்றும் வாகன யோகம் அமையும். செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வது சில ராசிக்காரர்களுக்கு ருச்சிக யோகத்தை தரப்போகிறது. சிலருக்கு விபரீத ராஜ யோகம் கிடைக்கும். செவ்வாய் பகவானின் பார்வையினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: உங்க ராசிநாதன் செவ்வாய் இன்னும் சில நாட்களில் உங்கள் ராசிக்கு 8 வது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். எட்டாம் வீட்டிற்கு அதிபதி எட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. ரத்தம் தொடர்பான நோய் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் அவசியம். செவ்வாயின் பார்வை குடும்ப ஸ்தானம், தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். மூன்றாம் வீட்டில் செவ்வாயின் பார்வை விழுவதால் தைரியம் கூடும். காரமான உணவுகள் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம் வயிறு பிரச்சினைகள் வந்து விடும் கவனம் தேவை. செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்: செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து உங்களை பார்வையிடுவார். கோபம் கொப்பளிக்கும் அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த தடங்கள் நீங்கும். காரணம் மங்களகாரகன் செவ்வாய் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. அவரது எட்டாம் பார்வை உங்க குடும்ப ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் சண்டை வரலாம். பேச்சில் அமைதியை கடைபிடியுங்கள். வயிற்று உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுனம்: ஆறாம் வீடு எதிரி ஸ்தானம், அந்த வீட்டில் சனியோ செவ்வாயோ அமர்வது அற்புதமான அமைப்பு. மிதுனம் புதன் வீடு உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் செவ்வாய் அமரப்போகிறார். உங்களுக்கு விபரீத ராஜயோகம் செயல்படப்போகிறது. பண வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். எதிரிகளை அடையாளம் கண்டு ஓட ஓட விரட்டுவீர்கள். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெல்வீர்கள். ஆறாம் இடம் நோய் ஸ்தானம் என்பதால் உங்க உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்க நன்மைகள் நடைபெறும்.
கடகம்: உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் பயணம் செய்யப்போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகளால் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். பொறுமையாக எதையும் கையாளுங்கள். சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் அற்புதமாக இருக்கும். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், லாப ஸ்தானம், ஆயுள் ஸ்தானத்தின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்: உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப்போவதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாய் பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். செவ்வாய் பகவான் உங்களுக்கு நன்மையே செய்வார். ஆட்சி அமரும் செவ்வாய் பகவானால் ருச்சிக யோகத்தை ருசிக்கப்போகிறீர்கள். பண வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சினை உள்ளவர்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வீடு, நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் ஏற்படும். மனதில் சஞ்சலம் பிறக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த கால கட்டத்தில் மகாலட்சுமி நரசிம்மரை வணங்கி வர மனக்குழப்பங்களும், போராட்டங்களும் நீங்கும்.
கன்னி: முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் செவ்வாய் பயணம் செய்யப்போகிறார். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீட்டுமனை வாங்குவீர்கள். மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருக்க முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். எங்கிருந்தாவது பணம் கொட்டும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும். ராசியில் கேது சுக்கிரன் இணைந்துள்ளதால் தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையிலும் காதல் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications